Header Ads



வெனிசுலாவில் மக்களின் சமூக மகிழ்ச்சிக்காக தனி அமைச்சு உருவாக்கப்படுகிறது

உலகெங்கிலும் ஒரே மாதிரியாக வேலையின்மை, விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் சுகாதார கேடு போன்றவை நிலவி வரும் வேளையில் மக்களின் சமூக மகிழ்ச்சிக்கென தனியொரு துணை அமைச்சகத்தை உருவாக்க வெனிசுலா அரசு முடிவு செய்துள்ளது. 

வறுமை, சமூக ஏற்றத் தாழ்வு, ஊனம் போன்றவற்றை ஒழித்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இந்த புதிய அமைச்சகம் உருவாக்கப்படும். 

முன்னாள் வெனிசுலா அதிபர் மறைந்த ஹுகோ சாவேஸ் ஆட்சியின் போதே இதற்கான திட்டம் தீட்டப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்னும் 1 1/2 மாதத்திற்குள் சமூக மகிழ்ச்சி அமைச்சகம் அமைக்கப்படும் என அந்நாட்டின் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடுரோ நேற்று அறிவித்தார். 

வெனிசுலா நாட்டில் பண வீக்கம் 50 சதவீதத்தை கடந்து அடிப்படை தேவைகளில் பற்றாக்குறையும் நிலவி வரும் சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.