சிங்கள பெளத்த நாட்டில், உலமா சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?
(vi) ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? ஹலாலை முழுமையாக சுருட்டிக் கொள்ளாவிட்டால் அதற்கெதிரான போராட்டம் தொடரும் என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
சிங்கள பெளத்தர்களுக்கு ஹலால் உணவுகளை திணிப்பதற்கு இடமளிக்கப் போவதில்லையென்றும் தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பெளத்த மத குருமாருடனும் இலங்கை வர்த்தகச் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இணக்கம் காணப்பட்டே உணவுப் பொருட்களுக்கு (விரும்புபவர்களுக்கு) ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதாக ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இந்த உலமா சபை சில பெளத்த குருமாரை ஏமாற்றி சூட்சுமமாக ஹலால் உணவுகளை சிங்கள பெளத்தர்களுக்கு உண்ணக் கொடுக்கின்றது.
உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்குவதை கைவிடுவதாகத் தான் உறுதி வழங்கியிருந்தது. ஆனால் இன்று புதுக் கதையை கூறுகின்றது. அத்தோடு இலங்கை சிங்கள பெளத்த நாடு. இங்கு உலமா சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது. உலமா சபையினர் யார். எனவே எம்மை தொடர்ந்து ஏமாற்ற முடியாது. ஹலாலுக்கு எதிராக சிங்கள மக்களை தெளிவுபடுத்த கொழும்பிலிருந்து கண்டிக்கு நாம் நடத்திய வாகன எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி வெற்றி பெற்றுள்ளது.

எங்கள் ஹலால் உணவை நீங்கள் சாப்பிட வேண்டாம்.... ? உங்கள் மதத்தில் சொல்லப்படுவதையாவது கடைபிடித்தீர்களானால் அதுவே போதும். அதுவே மறைமுகமாக உங்களுக்கு 'ஹலால்' உணவு எது என்பதை காட்டித்தரும். மொத்ததில் BBS இற்கு 'ஹலால்' ஒரு பிரச்சினையில்லை. முஸ்லிம்கள் தான் இவன் கண்ணுக்கு ஒரு 'பார்வை'யாக தென்படுகிறான்.
ReplyDeleteஎங்கள் ஹலால் உணவை நீங்கள் சாப்பிட வேண்டாம்.... ? உங்கள் மதத்தில் சொல்லப்படுவதையாவது கடைபிடித்தீர்களானால் அதுவே போதும். அதுவே மறைமுகமாக உங்களுக்கு 'ஹலால்' உணவு எது என்பதை காட்டித்தரும். மொத்ததில் BBS இற்கு 'ஹலால்' ஒரு பிரச்சினையில்லை. முஸ்லிம்கள் தான் இவன் கண்ணுக்கு ஒரு 'பார்வை'யாக தென்படுகிறான்.
ReplyDeleteDear friends,
ReplyDeleteWe know BBS is behind Muslims in many fundermental issues, but the Sri Lankan government keeping silent over BBS even the move create losses and create more problems, also Muslims politicians are also do not care for all matter, we must understand that there are some Muslim group behind BBS to give such headache to other Muslim groups, we must wait and see for further.
Muttaal Muttal Raaja Muttaal
ReplyDelete