Header Ads



நான் ராஜினாமா செய்வதை மக்களே தீர்மானிப்பர் - கல்முனை மேயர் சிறாஸ் மீறாசாஹிப்

கல்முனை மாநகர மேயர் பதவியில் நான் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமா என்பதை மக்களளே தீர்மானிக்க வேண்டுமென கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிறாஸ் மீறாசாஹிப் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவலகள் வெளியான நிலையில் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கருத்துக்கூறிய கல்முனை மேயர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த மாநகர சபைத் தேர்தலில் மக்கள் எனக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கி கல்முனை மாநகரத்தின் முதல்வராக்கி அழகுபார்த்தனர். நான்  மேயராக பதவி வகித்த காலத்தில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். எனக்கு வாக்களித்த மக்கள் குறிப்பாக சாய்தமருது மக்களின் விருப்பத்தை நான் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்களின் விருப்பு வாக்குகளே என்னை மேயர் பதவிக்கு  கொண்டுசென்றது.

இந்நிலையில்  நாளை புதன்கிழமை நான் ஊருக்குச் செல்கிறேன். அங்கு எனது மக்களுடன் கலந்துரையாடுவேன். எனது மக்கள் என்ன கூறுகிறார்களோ அதன்படி எனது தீர்மானத்தை மேற்கொள்வேன். இந்த மேயர் பதவி எனக்கு கிடைத்த கௌரவமாக நான் கருதியதில்லை. இந்தப் பதவி சாய்ந்தமருது மக்களுக்கு கிடைத்த கௌரவமாகவே கருதுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது இடையில் குறிக்கிட்ட ஜப்னா முஸ்லிம் இணையமானது நீங்கள் மேயர் பதவியில் தொடரும் வாய்ப்பு கிட்டாவிடின் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகுவீர்களா எனக் கேட்டபோது,

நான் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் கதைக்கும் இந்தநேரம் வரை அவ்வாறு சிந்திக்கவில்லை. இறைவனின் நாட்டமும், மக்களின் விருப்பமும் எவ்வாறு உள்ளதோ அதன்படி எனது செயற்பாடுகள் அமையும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், கட்சிக்கும் நான் இதுவரை காலமும் விசுவாசமாகவே நடந்து கொண்டுள்ளதாகுவம் கல்முனை மேயர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கல்முனை மாநகர சபை தேர்தல் 2011ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதனையடுத்து மேயரை நியமிப்பதில் சர்ச்சை ஏற்பட்டது.  இதன்போது, அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற சிராஸ் மீராசாஹிப் முதல் இரண்டு வருடங்கள் கல்முனை மேயராகவும் இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இறுதி இரண்டு வருடங்கள் மேயராகவும் செயற்படுவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.

இந்த நிலையில் சிராஸ் மீராசாஹிப் கல்முனை மேயராக நியமிக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. 


7 comments:

  1. பதவி மோகம் யாரைத்தான் விட்டது? எல்லாமே ஒரே கூறையில் ஊறிய மட்டைகள் .

    ReplyDelete
  2. ஒரு முஸ்லிமுக்கு அழகு வாக்குறிதி மாறாமல் இருப்பதுதான் .பொது மக்கள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை நம் கொடுத்த வாக்குறிதியை காப்பாற்ற வேண்டும் முனாபீக்கிட அடையாளத்தில் ஒன்று வாக்குறிதி மாறுவது .ஜப்னா கேட்ட கேள்விக்கு கொடுத்த பதிலை பார்த்தல் முஸ்லிம் காங்கிரெஸ் ராஜனாமா செய்ய சொன்னால் காங்கிரஸ்சை விட்டு விலகுவார்போல் தெரிகிறது .அல்லாஹ்தான் முஸ்லிம் அரசியல் வாதிகளை ,முஸ்லிமாக வாழ உதவி செய்யணும் .

    ReplyDelete
  3. சிராஸ் மீரஷாஹிப் மற்றைய இரண்டு வருடத்தை நிசம் கரியப்பருக்கு கொடுக்காத போது முஸ்லிம் காங்கிரசில் முனாபிக்குகள் தான் இருக்கிறார்கள் எனலாமா?

    ReplyDelete
  4. Don’t Resign Siraz. You were nominated by people. You deserve for it.

    ReplyDelete
  5. வாக்களித்து மாறு செய்பவன் நயவஞ்சகன் . நீங்க கொடுங்க சார். நீங்களும் உங்கட தலைவர போல இருக்காம ....

    ReplyDelete
  6. காரியப்பர் என்ன அரசியல் விட்பன்னரா? அல்லது மக்கள் தெரிவா இல்லையே! முதல்ல காரியப்பேயர் பதிவிக்கு ஆசைபடுவது அழகில்லை. இப்ப இருக்கிற மேயர் நல்லாதானே சேவை செய்கிறான். காரியப்பேயருக்கு பதவி வேணும் எண்டா நெறைய' வோட்டு எடுக்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.