Header Ads



வீடுகளை பெற்றுத்தருவதகாக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்த குழுவினர்

(அஷ்ரப் ஏ சமத்)

வீடமைப்பு அமைச்சினால் நிர்மாணிக்கப்படும் வீடுகளை பெற்றுத்தருவதகாக் கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்த குழுவினர் தொடர்பாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சிக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளனர். இக் கும்பல்  பற்றி ஏற்கணவே பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. பணம் கொடுத்து ஏமாந்த சில பொதுமக்கள் அமைச்சிற்கு நேரடியாக சமுகம்தந்து அமைச்சரிம் முறைப்பாடு செய்துள்ளனர். 

இவ்வாறான பணம் பறிக்கும் குழுவினர் சம்பந்தமாக உடனடியாக  011-2446566 அல்லது 0112-446558 என்ற தொலைபேசி இலங்கங்களுக்கு அறிவிக்குமாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரின் பிரத்தியோக செயலளர் அறிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை  மற்றும் அமைச்சினால் நிர்மாணிக்கப்படும் வீடுகளை பெற்றுத்தருவதாக அப்பாவி மக்களிடம்  சிலர் பணம் பறித்துள்ளனர்.  இது தொடர்பாக வீடமைப்பு அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் சம்பந்தமாக அருகில் உள்ள பொலீஸ் நிலையத்திற்கோ அல்லது மேற்கண்ட தொலைபேசி இலங்கங்களுக்கோ அறிவிக்குமாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் நிர்வாகம் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றது.

வீடுகள் பொது மக்களுக்கு வழங்குவதென்றால் அதற்காக விளம்பரம் பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்படும். அதற்காக உரிய அதிகார சபை விற்பனைப்பிரிவு சிறுதொகையை செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு அதற்காக நேர்முகத் தேர்வுக்கு தோற்றி புள்ளிகள் வழங்கப்பட்டு வீடுகள் வழங்கும் முறையை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நெடுங்காலமாக நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது. 

அமைச்சரின் பெயரைச் சொல்லியோ அல்லது அமைச்சரின்உத்தியோகத்தரின் சிபார்சுகளை சொல்லி பணம்பறிக்கும் கும்பல்பற்றி பொதுமக்கள் விழிப்பாக இருக்கும்படி அமைச்சின் பிரத்தியோகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.