காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையத்தின் (மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயல்) ஏற்பாட்டில் எதிர்வரும் 19.10.2013 சனிக்கிழமை மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாமொன்று காத்தான்குடி 05 மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.
'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் காலை 08.00மணி முதல் மதியம் 01.00மணி வரை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள்,உலமாக்கள்,ஊர்ப்பிரமுகர்கள்,முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
தங்களது இரத்தத்தை தங்களது சகோதர உயிர்களுக்காக தானம் செய்ய விரும்புவோர் 19.10.2013 சனிக்கிழமை காத்தான்குடி 05 மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலுக்கு சமுகமளிக்குமாறு காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையம் கேட்டுக்கொள்கின்றது.
ஆண் பெண் கலப்பில்லாதவாறு பெண்களுக்கும் இரத்ததானம் வழங்குவதற்கான பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment