ஹோட்டலில் தங்கியிருந்த லிபியா நாட்டு பிரதமர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார் (வீடியோ)
ஹோட்டலில் தங்கியிருந்த போது லிபியா நாட்டு பிரதமரை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தினர்.
ஆப்பிரிக்க நாடான லிபியாவின் பிரதமராக இருப்பவர் அலி ஷிடான். இவர் தலைநகர் திரிபோலியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்கள் சிலர் வந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை அங்கிருந்து கடத்தி சென்று விட்டனர்.
இந்த தகவலை அரபு நாடுகளை சேர்ந்த டெலிவிஷன்கள் செய்தியாக இன்று வெளியிட்டன. பிரதமர் அலிஷிடான் பி.பி.சி டெலிவிஷனுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது லிபியா ஆயுததாரிகளுக்கு மேற்கத்திய நாடுகள் உதவக்கூடாது என கோரிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆயுததாரிகள் அவரை கடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
லிபியாவில் அதிபராக இருந்த மும்மர் கடாபியை எதிர்த்து பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் பாதாள அறையில் பதுங்கியிருந்த அவர் புரட்சிபடை வீரர்களால் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அங்கு புதிய அரசு அமைந்துள்ளது.

Post a Comment