அக்கரைப்பற்றில் வீதிச்சட்டங்கள் - பாடசாலை மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு
(Atham labbe Janoovar)
அண்மைக்காலமாக எமது நாட்டில் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்கள் சம்பந்தமாகவும், விபத்துக்களையும் தடுப்பது சம்பந்தமாகவும் மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு பாடசாலைகள் தோறும் இடம்பெற்று வருகின்றது.
அண்மைக்காலமாக எமது நாட்டில் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்கள் சம்பந்தமாகவும், விபத்துக்களையும் தடுப்பது சம்பந்தமாகவும் மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு பாடசாலைகள் தோறும் இடம்பெற்று வருகின்றது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹாஜா முகைதீன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.எம்.எப்.பாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாணவர்களுக்கு விளக்கமளிக்கையில் எமது நாட்டில் தற்போதைய அரசாங்கம் நாடு பூராகவும் வீதிகளை புணரமைத்து போக்குவரத்து செய்வதற்கு வீதிகள் நன்றாக காணப்படுகின்றது. வாகனங்கள் செலுத்துபவர்கள் சட்டங்களை மீறுவதால் நாள் ஒன்றுக்கு 30 அல்லது 32 விபத்துக்கள் ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் விபத்துக்களில் ஒரு நாளில் 6 அல்லது 7 பேர் பலியாகுகின்றனர். எமது நாட்டில் 30 வருட காலமாக இருந்த யுத்தத்தையும் விட பயங்கரமாக இந்த வீதி விபத்துக்கள் காணப்படுகின்றது.
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதனால் ஜனாதிபதியின் அறிவுரைக்கமைய நாடு பூராகவும் இவ்வறிவூட்டும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. வீதியில் போக்குவரத்து செய்பவர்கள் போக்குவரத்து சட்டங்களை மதிக்காமல் வாகனங்களை செலுத்துவதால் இவ்விபத்துக்கள் ஏற்படுகின்றது.
மாணவர்கள் பாடசாலை முடிந்து செல்லும் போது 6/7 மாணவர்கள் கைகோர்த்து நடந்து செல்வது அல்லது சைக்கிள்களை பிடித்துக்கொண்டு செல்வதும், தலைக்கவசம் இல்லாமல் மோட்டர் சைக்கிள் செலுத்துவதும் விபத்துக்கு காரணமாக அமைகின்றது. வீதிச்சட்ட ஒழுங்குகளை சரியான முறையில் வாகனம் செலுத்துபவர்கள் பின்பற்றுபவர்களானால் எமது நாட்டில் இடம்பெற்று வரும் விபத்துக்களையும், உயிரிழப்புக்களையும் தடைசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.


Post a Comment