Header Ads



ராகமை வைத்தியசாலை பள்ளிவாசலில் 5 நேர தொழுகையுடன், ஜூம்ஆத் தொழுகையும்


(அஷ்ரப் ஏ சமத்)

ராகமை வைத்தியசாலையில் உள்ள பள்ளிவாசலில் 5 நேர தொழுகையுடன்  ஜூம்ஆத் தொழுகையும் நடைபெற்று வருகின்றது. அதற்காக எமக்கு ஒத்துழைத்த வைத்திய பணிப்பாளர் டாக்டர் ஜம்பா, மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திற் குழுவுக்கு நாம் நன்றியுடையவராக உள்ளோம்.  என கம்பஹா இஸ்லாமிய பாடசாலைகள் அபிவிருத்திச் சங்கத் தலைவர் டொக்டர் முபராக் தெரிவித்தார்.

வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் தௌபீக் மற்றும் பிரதம தாதிமார்கள் வைத்தியர்கள் வத்தளையில் டொக்டர் முபாராக் வீட்டில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டனர்.  வைத்தியசாலைக்காக மிண்விசிறிகள் குடிநீர் தாங்கிகள் என்பன அன்பளிப்பு செய்யப்பட்டன. ஆத்துடன் 10 இலட்சம் ருபா செலவில் பெசன் பக் 7ஆம் வார்ட்டை நவீனபடுத்த உள்ளது.
இந் நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத் தேரர் மற்றும்  கொழும்பு சாஹிராக் கல்லூரி அதிபர்  றிஸ்வி மரிக்கார் உட்பட வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.






No comments

Powered by Blogger.