Header Ads



ஈரானில் ஒரேதடவையில் 16 முஸ்லிம்களுக்கு மரண தண்டனை

ஈரான் சிஸ்டன்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக ஜெய்ஷ் அல் அத்ல் என்ற போராளிகள் அமைப்பு இயங்கி வருகிறது. நேற்றிரவு எல்லைப்பாதுகாப்பு படையினர் சரவான் மலைப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது திடீர் தாக்குதல் நடத்திய போராளிகள், எல்லை பாதுகாப்பு படையினர் 14 பேரை சுட்டுக்கொன்றனர். பலர் படுகாயமடைந்தனர். 

இதற்கு பதிலாக இந்த தாக்குதல் நடைபெற்ற அதே சரவான் ஏரியாவில் உள்ள ஸஹெதான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போராளிகள் 16 பேரின் தூக்குத்தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது என்று ஈரான் செய்தி நிறுவனம் இஸ்னா கூறியுள்ளது. 

ஒரு தரப்பு செய்திகள், இது முன்னரே தூக்கிலிட தீர்மானிக்கப்பட்டது என்றும் கூறுகின்றது. 

எல்லையில் நடந்த தாக்குதல் நடத்தியது ஜெய்ஷ் அல் அத்ல் எனப்படும் இந்த போராளிகள் இயக்கம்தான் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

சரவான் பகுதியில் அதிகம் சன்னி முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஈரானின் ஷியா அரசால் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இங்கு சன்னி பிரிவினரின் ஜுண்டல்லா போராளிகள் இயக்கமும் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. ஈரானில் சுன்னி முஸ்லிம்கள் சொல்லனாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இது குறித்த செய்திகள் வெளி உலகுக்கு வருவதில்லை. ஈரானை நம்பி நாம் ஏமாறக் கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.