Header Ads



கட்டாயப்படுத்தும் மன உளைச்சல் நோய் - பாரதூரமான மனநோய் ( OCD )

HSM IHTHISHAM
MLS, Faculty of Medicine
University of Ruhuna

சிலர் வுழு செய்யும் போது, தக்பிர் கட்டும் போது ஒரே செயற்பாட்டை திரும்ப திரும்ப செய்வதை பார்த்திருப்பீர்ககள். இவ்வாறான மனப்பயநிலை மேலும் அதிகரிக்கும் போது நாம் கட்டாயப்படுத்தும் மன உளைச்சல் நோய் (OCD - Occessive compulsive disorder) என அழைக்கிறோம்.Obsession எனப்படுவது மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற சிந்தனைகளைக் குறிக்கும். இந்த சிந்தனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது அவர்களின் அன்றாட செயற்பாடுகளைப் பாதிப்பதுடன் அவரினால் கட்டுப்படுத்த முடியாதவையாகவும் இருக்கும். 

இந்த Obssession பல வகைப்படும். 
Obsessional thoughts -ஒரு சொல், சிந்தனை திரும்ப எழுதல்.
Obsessional Images - கெட்ட ஒரு படம் திரும்ப ஞாபகம் வந்து கொண்டிருத்தல்.
Obsessional Doubts - சந்தேகங்கள் திரும்ப எழுதல். அதாவது வீடு பூட்டினோமா ? கை கழுவிநோமா? கையில் ஏதோ கிருமி இருக்கிறதா?

 compulsion எனப்படுவது அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் சிந்தனைகளுக்கு அச்சப்பட்டு அதற்கு செயல் வடிவம் கொடுத்தல்.அதாவது கையில் ஏதோ கிருமி இருக்கிறது என்று சிந்தனை எழுபவர்கள் மீண்டும் மீண்டும் கை கழிவிக்  கொண்டே இருப்பது போன்றவை. இங்கு நான் குறிப்பிட்டுள்ளவை சில உதாரணங்களே.இதுபோல அவர்களுக்கு பல்வேறுவிதாமான சிந்தனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படலாம். 

இன்னும் சிலருக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டால் பொதுாவாக உடலில் பல வகையான ஓமோனகள்,இரசாயனப்பதாரத்தங்கள் சுரக்கும். இதில் முக்கியமாக ஒரு இரசாயனப்பதாரத்தம் Serotenin ஆகும். இதன் தொழிலாக மூளையை அமைதியாக வைத்து நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். இதன் அளவு குறையும் போது மாறுபட்ட சிந்தனைகளை திரும்ப ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாலோ, சாப்பிருப்பாலோ போன்ற எண்ணங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். இதனால் எந்நேரமும் தொடர்பு கொண்டு சாப்பிட்டியா, என்ன செய்கிறாய் என்று கேட்டு கொண்டு இருப்பார். இவ்வாறான நிலை முற்றும் போது OCD ஏற்படும்.

தீவிரமான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இந்தச் சிந்தனைகள் தொடர்ச்சியாக ஏற்படும். தீவிரம் குறைந்தவர்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படாமல் விட்டு விட்டு சில காலங்களில் மட்டும் ஏற்படும். இது தீவிரமாகும் போது வேறு விதமான நோய்களுக்கு  இட்டுச் செல்லும். கடும் கவலை (Anxiety), மன அழுத்தம் (Deppression ) , தன்னிலை இழத்தல் (depersonalization) போன்ற மனநோய்களுக்கு இட்டுச்செல்லும். 

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மன நல வைத்தியரின் ஆலோசனையுடன் மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் மன நிலை ரீதியாக நோயாளிக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் சிந்தனைகளை கட்டுப் படுத்தும் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு சரிவராவிட்டால் மருந்துகள் பாவிக்கப்படும். எனவே இவ்வாறான நிலை உள்ளவர்கள் அதிகரிக்க முன் சிகிச்சை பெறுவது சிறந்தது. 

No comments

Powered by Blogger.