Header Ads



அரசாங்கத்தை ஆதரித்து வெற்றி பெறச்செய்ய வியூகம் வகுப்பு - றிசாத் பதியுதீன்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

நடை பெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் வன்னி மாவட்ட மக்கள் அரசாங்கத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்யும் வியூகத்தை வகுத்துள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னார் தாராபுரத்தில் தெரிவித்தார். மன்னார் தாராபுரத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

எமது மக்கள் கடந்த பல ஆண்டுகாலமாக இழந்துள்ளவற்றை பெற்றுக் கொள்ளுவதற்கான சிறந்ததொரு சந்தரப்பம் மீண்டும் கிடைத்துள்ளது.ஆளும் கட்சி ஆட்சியில் இருக்கின்ற போதுஇஎதிர்கட்சி அரசியல் தான் செய்யப் போகின்றோம்.மக்களுக்கு  எதுவும் கிடைக்க கூடாது என வீர வசனங்களை பேசும் கட்சிகள் குறித்து மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

இன்று நாம் அரசாங்கத்தில் இருக்கின்றமையினால் இம்மாவட்டத்தின் எத்தனையோ அபிவிருத்தி பணிகளை மிகவும் நியாயமாக முன்னெடுக்க முடிகின்றது.தமிழர்களும்இஇஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்த இந்த மண்ணில் இன உறவு நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.அதனை பாதுகாப்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

எம்மை பொருத்த வகையில் நாங்கள் தமிழ் மொழியினை தாய் மொழியாக கொண்டவன்.அதனை நேசிப்பவன்இஎனது தாய்மொழியில் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புபவன்இஅந்த வகையில் முஸ்லிம்களும் இலங்கையில் தாய் மொழியினை தனது மொழியாக கொண்டிருப்பது இன உறவுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

3 comments:

  1. இந்த அரசியல் வாதிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய தென்னமட்டைகள் தான், எந்த வழியிலாவது அரசைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறர்கள் சமுதாயமோ, மார்க்கமோ எல்லாம் இரண்டாம் பட்சம்தான்

    ReplyDelete
  2. Sir
    Kattayam MM.Ameen,B.Rifhan & Alikan Shariff Vettriparuwargal

    Allah uthavi saiwan

    SHMWAJITH
    MUSALI

    ReplyDelete
  3. மக்கள் பாவம்

    ReplyDelete

Powered by Blogger.