Header Ads



லசந்த விக்ரமதுங்க படுகொலை பிரதான சந்தேக நபர் விடுதலை

சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பிரதான சந்தேக நபரான இராணுவ புலனாய்வு உறுப்பினர், 06-09-2013 அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு கல்கிசை பிரதான நீதவான் ரங்க விமலசேனவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் நாள் அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்து வழக்கு தொடர்பான விசாரணைகள் கல்கிசை பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைகளுக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பிரதான சந்தேகநபரான குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரி அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் சந்தேகத்தில் நுவரெலியாவிலுள்ள வாகன திருத்துமிட உரிமையாளர் ஒருவரும், இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் வாகன திருத்துமிட உரிமையாளர் பிணையில் செல்ல முன்னரே சிறையில் வைத்து உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அறிக்கை சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று விசாரணைகள் நீதிமன்றத்தில் எடுத்துகொள்ளப்பட்டபோது சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். vi

No comments

Powered by Blogger.