இனியவன் இஸாறுதீனின் 'முள்மலர்கள்'
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
இனியவன் இஸாறுதீனின் 'முள்மலர்கள்' கவிதை நூல் வெளியீடு சனிக்கிழமை 14-09-2013 வெள்ளவத்தை கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக மேல் நீதிமன்ற நீதவான் எம்.எம்.அப்துல் கபூர் மற்றும் பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் எஸ்.எச்.எம்.ஜெமீலிடமிருந்து பெற்றுக் கொண்டார். கே.எஸ்.சிவகுமார், கவிஞர் மேமன் கவி, ஊடகவியலாளர் எம்ஏ.எம்.நிலாம் மற்றும் நூலாசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது நூலாசிரியர் நிகழ்வுக்கு தலைமை வகித்த எஸ்.எச்.எம்.ஜெமீலை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.





Post a Comment