Header Ads



கம்பளை (ஆண்டியாகடவத்தை) அல் ஹிக்மா மகா வித்தியாலய அதிபர் மாற்றம்

(எம்.ஆர். பஸ்ருல் அலி)

அண்மைக் காலங்களில் கம்பளை நகரில் தலை சிறந்து விளங்கும் பாடசாலையாக கம்பளை அல்ஹிக்மா மகா வித்தியாலயம் காணப்படுகிறது. உயர்தரப் பிரிவில் (கலை) கடந்த வருடம் 3 மாணவர்களும், க.பொ.த (சா. தர) பரீட்சையில் 47 & மான சித்தியைப் பெற்று கம்பளை வலய தமிழ் பாடசாலைகளுக்கு மத்தியில் 7 ஆவது இடத்தைப் பெற்று முன்னேறிச் செல்லும் ஒரு பாடசாலையாக விளங்குகிறது.

பாடசாலையின் பௌதிக மற்றும் மானிட வள அபிவிருத்தியிலும், பாடசாலை பல முன்னேற்றகரமான மாற்றங்களை அண்மைக் காலமாக பெற்று வந்துள்ளது. இந்த முன்னேற்றங்களை பாடசாலைக்கு மிக குறுகிய காலத்தில் பெற்றுத் தந்த ஒரு அதிபராக ஓய்வு பெற்றுச் செல்லும் . P.ஆ.ஆ.காமில் அவர்கள் காணப்படுகிறார்கள். இவரின் சேவைகளை பாராட்டி பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றார்களினால் பிரிவுபசார வைபவம் கடந்த வியாழக்கிழமை (29ம் திகதி) பாடசாலையில் நடை பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக் கிழமை ஜும்ஆவின் பின் கம்பளை ஆண்டியாகடவத்தை அப்ரார் மஸ்ஜிதின் நிர்வாக சபையால் ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபரை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

அன்றைய தினம் பாடசாலையின் புதிய அதிபராக .ஆ.ர்.ஆ.நுஹ்மான் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார். இவர் கம்பளை கல்விப் பணிமனையின் ஆங்கில கல்வி ஆலோசகராக நீண்ட காலம் பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


1 comment:

  1. Alhamthulillah Alla puhalum allah vukka inda principal awrudaiya seyyum welaiku allah udavi seywhanaha ameen.

    ReplyDelete

Powered by Blogger.