Header Ads



மனித உரிமை மீறல்களை முதலில் சர்வதேசத்திற்கு முறை­யிட்டது மஹிந்ததான் - மங்­கள சம­ர­வீர

இலங்­கையில் மனித உரிமை மீறல் நட­வ­டிக்­கைகள் குறித்து சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென கோரி அது குறித்து ஆவ­ணங்­களை ஜெனீ­வா­வுக்கு எடுத்துச் சென்று மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விடம் முதலில் முறை­யிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜ­ப­க்ஷ அதனை இன்று மீறிச் செயற்­ப­டு­கின்றார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

இலங்­கையின் மனித உரிமை நட­வ­டிக்­கைகள் குறித்து சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம் என முதலில் எடுத்துக் கூறிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவே அதனை இன்று மீறி­யுள்ளார் என்ற தலைப்பில் அவர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது; இந்­நாட்டில் மனித உரி­மையை பாது­காப்­ப­தற்­காக யார் முன்­வந்­தாலும் அவர்­க­ளோடு இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு தான் தயார் என கடந்த 1990 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் அவர் தெரி­வித்தார்.

எனினும் அன்று ஆட்­சி­யி­லி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் அவ­ருக்குத் தேசத்­து­ரோகி என்ற பட்­டத்தை வழங்­கு­வ­தற்கு ஊட­கங்கள் மூலம் எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் அது குறித்த விசா­ர­ணை­களை மனித உரி­மைகள் ஆணைக்­குழு இலங்­கையில் மேற்­கொள்­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கி­யது ஜே.ஆர். ெஜய­வர்­த்தன, ஆர். பிரே­ம­தாஸ, டி.பீ.விஜே­துங்க மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் இவ்­வா­றா­ன­தொரு சிறந்த ஆட்சி முறையே நடை­பெற்­றது.

இந்­நாட்டின் உண்மை நிலை குறித்து அறிந்து கொள்­வ­தற்­காக சர்­வ­தே­சங்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்­கப்­பட்­ட­துடன் மனித உரி­மைகள் தொடர்­பாக மஹிந்த ராஜ­பக்ஷ உட்­பட்ட பிர­மு­கர்கள் ஐக்­கிய நாடுகள் அமைப்­புக்கு முன்­வைத்து முறைப்­பாடு குறித்து தெரிந்து கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­பமும் வழங்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் இலங்­கையின் நட­வ­டிக்­கைகள் குறித்த விசா­ர­ணைக்கு வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் மற்றும் அமைப்­புக்­க­ளுக்கு 2005 ஆம் ஆண்­டி­லேயே தடை விதிக்­கப்­பட்­டது.

இலங்­கையில் மனித உரிமை குறித்து சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம் என்று ஐக்­கிய நாடுகள் சபை­யிடம் முதலில் முறைப்­பாடு செய்த மஹிந்த ராஜ­பக் ஷ 2005 ஆம் ஆண்டு அதற்­கான தடையை விதித்­த­வ­ராவார்.
2009ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்­கு­ழுவைச் சந்­தித்து இலங்­கையின் மனித உரி­மையைப் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்­த­துடன் அது குறித்து அறிக்­கை­யொன்றை சமர்ப்­பிப்­ப­தா­கவும் கூறி­யது.

இதற்­கி­ணங்க கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைத்து அவர்­களின் சிபா­ரி­சுக்கு ஏற்ப நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கவும் உறுதி அளித்­தது. அதே­வேளை ஐ. நா. மனித உரிமைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு இலங்­கைக்கு வருகை தரு­மாறும் அழைப்பு விடுத்­தது.

மேற்­படி நட­வ­டிக்­கையை ஏற்­பாடு செய்த அர­சாங்கம் இன்று ஐ. நாடுகள் மனித உரிமை ஆணைக்­குழு மற்றும் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை ஆகியோர் மீது குற்­றஞ்­சாட்டி அதில் இருந்து தப்­பித்துக் கொள்ள முயற்­சிக்­கின்­றது.

இவ்­வா­றான கீழ்த்­த­ர­மான செயற்­பா­டுகள் கார­ண­மாக இந்­நாட்டில் எழுந்­துள்ள பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாது. மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் இன்று சர்­வ­தே­சத்தின் அப­கீர்த்­தியை சம்­பா­தித்­துள்­ளது.

ஆகவே இந்­நி­லை­யி­லி­ருந்து நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காத்துக் கொள்ளும் முதல் நட­வ­டிக்­கை­யாக 17 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தினை மீண்டும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஐ. தே. கட்­சி­யினர் கொண்டு வரப்­ப­ட­வுள்ள அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்து சுதந்­தி­ர­மா­னதும் நேர்­மை­யா­ன­து­மான சமூகம் ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

17வது அரசியலமைப்புச் சட்டத்தை மீண்டும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியமாகும். 17 ஆவது அரசியல் அமைப்புச் சட்டத்தை வளப்படுத்துவதற்கு அரசு எதிர்ப்புத் தெரிவிக்குமாயின் அதனூடாக ஏற்பட போவது நவநீதம்பிள்ளை கூறிய இலங்கை ஏதேச்சதிகாரப் போக்கில் செல்கின்றது என்பதை அரசாங்கமே நிருபீப்பதாகவே அமைந்து விடும் எனவும் கூறினார்.

No comments

Powered by Blogger.