Header Ads



ஜனாதிபதி மகிந்த, தான் சர்வாதிகாரி இல்லையென்பதை நிரூபிக்குமாறு சவால்

நான் சர்வாதிகாரியாக..? என்று மக்களிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தான் ஒரு சர்வாதிகாரி இல்லை என்பதை நிரூபித்து காண்பிக்குமாறு கருத்தொருமித்த மக்கள் உடன்படிக்கை (சமகி) அமைப்பு சவால் விடுத்துள்ளது. இந்த அமைப்பினால், ஜனாதிபதிக்கு எதிராக 9 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் தமது அமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மங்கள சமரவீர, கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, லால் விஜேநாயக்க ஆகிய வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை நீக்கி விட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும்.

2 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு, 17வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் அரச நிறுவனங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த முடியும்.

3 விருப்பு வாக்கு முறைமையை ஒழித்து விட்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்.

4 தகவல் அறியும் உரிமை உறுதிப்படுத்தி, பேச்சுரிமை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.

5 சட்டத்தின் ஆட்சியையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

6 ஊழலுக்கு எதிராக சட்டத்திட்டங்களை வலுப்படுத்தி அதனை செயற்படுத்த வேண்டும்.

7 தொழிற்சங்க உரிமைகளை ஏற்றுக்கொள்வதுடன் அதன் செயற்பாடுகளை சட்டவிரோதமாக அடக்குவதை ராஜபக்ஷ அரசாங்கம் முற்றாக நிறுத்த வேணடும்.

8 அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வாழ்க்கை செலவு புள்ளிகளை வர்த்தமானியில் வெளியிட்டு, வாழ்க்கை செலவை கட்டுப்படுத்த வேண்டும்.

9 ராஜபக்ஷ குடும்பத்தை சுற்றி கேந்திரப்படுத்தப்பட்டு அரசியல் அதிகாரம், அரச நிதி அதிகாரம் அமைச்சரவையி்லுள்ள அனைவருக்கு சமமான முறையில் பகிரப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை கருத்தொருமித்த மக்கள் உடன்படிக்கை அமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தான் சர்வாதிகாரி இல்லை என்பதை மகிந்த நிரூபித்தால், அவருக்கு தமது பூரண ஆதரவு வழங்கப்படும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. நானும் எனது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவேன்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.