சமய சகவாழ்வை தகர்ப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப் போவதில்லை - மஹிந்த
தேசிய மற்றும் சமய சகவாழ்வை தகர்ப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து இலங்கையர்களுக்கும் தற்போது ஒரே வகையான அச்சுறுத்தலே தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வரலாற்று ரீதியாக பாதுகாத்து வந்த ஐக்கியத்தை சீர்குலைக்க முற்படும் சகல சக்திகளையும் தோற்கடிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பொருட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.
தப்போவ, போதிமாலக புஷ்பாராம விஹாரையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்துகளை கூறியுள்ளார்.
2500 வருடங்களுக்கும் அதிக வரலாற்றையும், கலாசாரத்தையும் இலங்கை கொண்டுள்ளதுடன், அந்த மரபுரிமைகளை அழித்துவிட உலக நாடுகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் இலக்கியம், கலாசாரம் என்பவற்றைப் பாதுகாப்பதுடன், பண்புள்ள எதிர்கால சந்ததியொன்றை கட்டியெழுப்புவதற்காக, அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பௌத்தர்களுக்கு என்ன அச்சுறுத்தல் யாரால் எங்கே ஏற்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி மஹிந்த விலாவாரியாகத் தெளிவு படுத்த வேண்டும். சும்மா பேச்சுவாக்கில் சொல்லக்கூடாது.
ReplyDeleteபண்புள்ள எதிர்கால சந்ததியினரைத் தோற்றுவிக்க முதலில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இன மத வாதிகளான சம்பிக்க, மேர்வின் போன்றவர்களை ஜனாதிபதி களையெடுக்க வேண்டும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-