Header Ads



பொத்துவில் தொடக்கம் கல்முனை வரை தனியார் பஸ் வேலை நிறுத்தம் (படங்கள்)

(ஏ.ஜி.ஏ.கபூர் + எஸ்.எல். ஆப்துல் அஸீஸ்)

வரையறுக்கப்பட்ட தென்கிழக்குத் தனியார் பேரூந்து அமைப்பினர் இன்று 15-08-2013  ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசமான பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையான போக்குவரத்தை இடைநிறுத்தி தமது வேலை நிறுத்தத்தை வெளிக்கொணர உள்ளதாக வரையறுக்கப்பட்ட தென்கிழக்குத் தனியார் பேரூந்து அமைப்பின் செயலாளர் எம்.ஏ.எம். அஸ்பர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அமைப்பின் செயலாளரின் எழுத்து மூல அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அக்கரைப்பற்று தொடக்கம் பாசிக்குடா வரையாக பயணிப்பதற்கான பஸ்வண்டி ஒன்றிற்கான அனுமதிப் பத்திரம் ஒன்றினை சட்டத்திற்கு புறம்பாக வழங்கி உள்ளமையை அறிய முடிகின்றது.

மேற்படி விடயத்தை கண்டித்தும், குறிப்பிட்ட அனுமதிப்பத்திரத்தினை இறத்துச் செய்யக்கோரியுமே இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாககுறிப்பிட்டுள்ளார்.

 

No comments

Powered by Blogger.