முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினருக்கும் உள்ள புரிந்துணர்வு இழந்து கொண்டு போகின்றது
யுத்தம் முடிவடைந்து அமைதியான சூழலில் பல்லின மக்களும் சுதந்திரமான சுவாசக்காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் முரண்பாடுகளைக் கலைந்து புரிந்துனர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தருனத்தில் அண்மைக்காலமாக மதக் கலாச்சாரங்கள் மீது திட்டமிட்டு தமது கலாச்சாரத்தையும் சமய கொள்கைகளையும் பாதுகாக்கின்றோம் என்ற ஒரு தொணியில் இந்நாட்டிலே குழப்ப நிலையைத் தோற்றுவிக்கும் சில சதி முயற்சிகள் முஸ்லிம்களினது கலாச்சாரம் மதஸ்தளங்கள் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அடாவடித்தனத்தை ஏன் அரசாங்கத்தினால் முடிவுக்கு கொண்டுவர முடியாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக் தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (10.08.2013) மாலை மஃரீப் தொழுகைக்கு பின் நடைபெற்ற கிராண்ட்பாஸ் சுவர்ணசித்திய வீதியில் அமைந்துள்ள மேலேவத்தை மஸ்ஜிதுல் தீனுள் இஸ்லாம் பள்ளிவாசலை தாக்க முற்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கதாகும் ஏன் எனின் தொடர்ச்சியாக இவ்வாறான நிலை நடைபெற்றுக் கொண்டு இருப்பதனால் முஸ்லிம் மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இடையில் இருக்கின்ற புரிந்துணர்வு இழந்து கொண்டு போகின்ற நிலை காணப்படுகின்றது. இவ்வாரான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் அரசாங்கம் பாராமுகமாக இருக்காமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனின் இலங்கை அரசியல் அமைப்பில் கூறப்பட்ட உத்தரவாதம் அளிக்கப்பட்ட மதஉரிமையை மீரப்படுகின்ற தன்மையை தோற்றுவிக்கும்.
இந்நாட்டில் நடைபெற்ற கொடூரமான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புப் படையினரால் ஏன் இப்பிரச்சினையை இணங்கன்டு உரியவர்களை குற்றவாளி கூண்டின்முன் நிறுத்தி தண்டனையை பெற்றுக் கொடுக்க முடியாது என்ற கேள்வியும் எழுகின்றது.
எனவே அரசாங்கம் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உடனடியான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிவாசல் மீது தாக்குதலை வண்மையாக கண்டிப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக் தெரிவிக்கின்றார்.
முத்தலிப் பாவா பாறூக்
நாடாளுமன்ற உறுப்பினர்
.jpg)
Hon MP Where have u been for .......long ......long days ? i just know about u.
ReplyDeleteMuslimkal muzal ottrumaip pada wendum. Aalukku aal muslimkalaik kafirkalukku kaattik kodukindra munaafikkuhalahat than amzu shamooham ippozu ullazu. Kaaranam yar?
ReplyDeleteMuslimhalai pala kulukkalahap pirittha ulamakkakal.
Aaahavey muslimkalai ottrumaip padutta inde ulamakkal ottrumaippada wendum.
Aanal thatpozu emazu ulamaakkal irande kafirhalukkaha duappirarthanaiyil eedupattukkodirukkirarhal.
Innum innum makkalin ottrumai pattri shindikkal; thamazu laapangalaip patri maatrim yoshikkirarhal.