அன்று தொப்பிக்காக போராடிய சமுதாயம், இன்று பள்ளிகளையே விட்டுக் கொடுக்கின்றது
ரஸ்மின் MISc (துணை செயலாளர் SLTJ )
நாங்கள் வெளிநாட்டவர்கள் அல்ல, நாங்கள் அரபு நாட்டு இறக்குமதிகள் அல்ல, நாங்கள் இந்திய வம்சா வழியினர் அல்ல. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், இலங்கை நாட்டின் புத்திரர்கள், இலங்கை எங்கள் தாய் நாடு. இதில் இலங்கை முஸ்லிம்கள் யாருக்கும் எச்சந்தர்ப்பத்திலும் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.
ஆம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பல பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம்களின் பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றது, வியாபார தாபனங்கள் தாக்கப்படுகின்றன, முஸ்லிம் பெண்களின் ஆடைகள் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன.
மொத்தத்தில் முஸ்லிம்களின் மத சுதந்திரம் பாதிக்கப்பட்டு, எதிர்கால இருப்பே கேள்விக்குள்ளாக்கப் படுகின்றது. இப்படியான கால கட்டத்தில் நமது சமுதாயத் தலைவர்களின் கையாளாகாத் தனம் மற்றும் அரசியல் தலைமைகளின் சுய இலாப மோகம் போன்றவை முஸ்லிம் சமுதாயத்தை மீண்டும் மீண்டும் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்குள் தம்புள்ளை பள்ளிப் பிரச்சினையில் ஆரம்பித்து கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளி வரைக்கும் இது வரை 24 பள்ளிவாயல்கள் காவிக் காடையர்களினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இவற்றில் ஒன்றுக்குக் கூட எவ்விதமான நிரந்தரத் தீர்வுகளும் எட்டப்படவில்லை.
போராடிப் பெற்ற உரிமைகளை போகிற போக்கில் தாரைவார்க்கும் முஸ்லிம் தலைமைகள்.
பள்ளிகளை அமைப்பதும், அதில் முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசினால் முஸ்லிம்களுக்காக வழங்கப்பட்டுள்ள உரிமைகளாகும். இந்த உரிமைகளை பறிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு இலங்கை முஸ்லிமும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.
ஆனால் இன்றைய இலங்கை இஸ்லாமிய முஸ்லிம் தலைவர்களோ உரிமைகளை பாதுகாப்பதற்குப் பதில் தாராளத் தன்மையுடன் விட்டுக் கொடுக்கும் வேலையை லாவகமாக கையாள்கின்றார்கள்.
துருக்கித் தொப்பி போராட்டம்.
1905.05.02 ல் சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள் துருக்கித் தொப்பி அணிந்து கொண்டு ஒரு வழக்கில் ஆஜரானார். அப்போது அவர் அந்த வழக்கில் வாதாடுவதை நீதியரசர் லயட் எதிர்த்தார். அப்போது தான் தொப்பி அணிந்து வாதாடுவது எனது உரிமை நான் அதனை கழற்ற முடியாது என மறுத்தார் சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள். இதன் போது ஏற்பட்ட பிரச்சினையில் சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள் நீதி மன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
இந்தச் செய்தி அக்கால முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த அறிஞர் அஸீஸ் அவர்களுக்கு எட்டியது. உடனே அஸீஸ் அவர்கள் அன்றைய முஸ்லிம் முக்கியஸ்தர்களை அழைத்து1905.10.27 ல் தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமை முஸ்லிம்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமாக்குவதற்காக வேண்டிப் போராடும் விதமாக துருக்கித் தொப்பி போராட்டக் குழு என்ற பெயரில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடும் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்.
போராட்டத்தின் முக்கியத்துவத்தை நாட்டு முஸ்லிம்களுக்கு விளக்கும் விதமாக நாட்டின் முக்கிய 30 நகரங்களில் மாபெரும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அன்றைய கால முஸ்லிம்களின் பிரபல பத்திரிக்கைகளான முஸ்லிம் நேசன், முஸ்லிம் பாதுகாவலன், இஸ்லாம் மித்திரன் போன்றவை இந்த மாநாட்டிற்காக பலத்த விளம்பரங்களை செய்தன. நாடு முழுவதும் மக்களை விழிப்புணர்வூட்டிய அறிஞர் அஸீஸ் அவர்கள் 1905.12.31 ல் மருதானையில் 30 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி துருக்குத் தொப்பி உரிமை மீட்பு மாநாடு ஒன்றையும் நடத்தினார்.
போராட்டத்தின் வெற்றி துருக்கித் தொப்பி சட்டமாக்கப்பட்டது.
துருக்கித் தொப்பிக்கான அறிஞர் அஸீஸ் தலைமையிலான போராட்டத்தின் விளைவாக முஸ்லிம் சட்டத்தரனிகள் நீதி மன்றத்தில் தொப்பி அணிந்து கொண்டு வழக்கில் வாதாட முடியும் என்ற சட்டம் ஆங்கிலேய அரசினால் சட்டமாக்கப்பட்டது.
மார்க்கத்தில் இல்லாத மார்க்கம் சொல்லாத தொப்பி என்ற ஆடையை ஆங்கிலேய அரசு தடை செய்தது என்பதற்காக உரிமையை எவரும் பறிக்க முனையக் கூடாது என்பதை ஆங்கிலேய அரசுக்கு அறிவிக்கும் முகமாக அறிஞர் அஸீஸ் அவர்கள் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள் 1905 காலப் பகுதியில்.
மார்க்கம் காட்டித் தராத தொப்பிக்காகவே இவ்வளவு பெரிய போராட்டம் என்றால் மார்க்கத்தின் அச்சாணியாக இஸ்லாத்தின் கேந்திர நிலையமாக இருக்கும் பள்ளிகளுக்காக நாம் எந்தளவுக்கு போராட வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
தொப்பிக்காக போராடிய சமுதாயம் பள்ளியை விட்டுக்கொடுக்கலாமா?
அன்று சாதாரண தொப்பி விஷயத்திற்காக நமது தலைவர்கள் போராடினார்கள். ஆனால் இன்றைய நமது அரசியல், ஆன்மீகத் தலைமைகளோ நமது உயிர் நாடியான பள்ளிகளையே தாரை வார்ப்பதில் தாராளத் தன்மையை பேணுகின்றார்கள்.
இதுவரைக்கும் சுமார் 24 பள்ளிவாயல்கள் இலங்கையில் தாக்கப்பட்டுள்ளன. சில பள்ளிவாயல்கள் மூடுவிழா கொண்டாடிவிட்டன. சில பள்ளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில பள்ளிகள் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கின்றன.
இப்படி நாளுக்கு நாள் முஸ்லிம்களின் வணக்கத்தளங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது நமது தலைமைகள் தலையணை வைத்து நிம்மதியாக தூங்குவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. உயிரைப் பணயம் வைத்துப் போராடினாலும் இறுதியில் தலைமைகளின் உறுதியின்மையினால் பள்ளிகள் தாரைவார்க்கப்படுகின்றதை நினைக்கும் போது கவலை தாங்க முடியவில்லை.
அன்று – தலையில் இருக்கும் சாதாரண தொப்பிக்காகவே போராடிய முஸ்லிம் சமுதாயம். இன்று – தலையை பணிக்கும் பள்ளிகளையே விட்டுக் கொடுக்கும் அவல நிலையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தலைவர்களின் சுய இலாபமும், தலைமைத்துவ மோகமும், பதவி ஆசையும் தான் இன்றைய முஸ்லிம் உம்மாவின் வீழ்ச்சிப் பாதைக்கு வழி செய்துள்ளது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
புறப்படத் தயாராவோம். இது நமது தாய் நாடு. இங்குதான் நாம் பிறந்தோம். இங்குதான் நமது முன்னோர்களும் பிறந்தார்கள். இங்குதான் நாம் இறப்போம். இங்குதான் நமது முன்னோர்களும் இறந்தார்கள். இந்த பூமியை விட்டும் வெளியே செல்ல நாம் ஒன்றும் பிற நாட்டவர்கள் அல்லர். இந்த நாட்டின் மைந்தர்கள். இனியும் விட்டுக் கொடுக்க இயலாது. இனியும் மௌனம் காக்க முடியாது. இனியும் கை கட்டி வேடிக்கை பார்க்க கூடாது. புறப்படுவோம் போராட்க் களத்தை நோக்கி. வெற்றி நம் பக்கம் விரைந்து வரும். வேடிக்கை பார்ப்பவர்கள் ஓரம் போய் விடுங்கள். வீரர்களையும் சோரம் போக வைக்காதீர்கள். புறப்படத் தயாராவோம். ஜனநாயக வழியில், சுதந்திர வேட்கையில், வெற்றி கோஷத்துடன், கொடியேந்துவோம் வாருங்கள். நமது பள்ளிகளை நாமே பாதுகாப்போம். அரசியல் சாக்கடைகளும் வேண்டாம். ஆன்மீக பச்சோந்திகளும் வேண்டாம். இறைவனின் ஆலயத்தை மீட்டெடுக்க இறைவனுக்காக அர்பணம் செய்யத் துணிந்த இளைஞர்களே!
திரண்டு வாருங்கள்! தீர்வு நமது கையில் துணையாக ஏகன் அல்லாஹ் இருக்கின்றான். இன்ஷா அல்லாஹ்……

I am leader(secretary,speecher) of thowheed thowheed thowheed ...........why should have differents between muslims with each others???Go ahead without any separets.
ReplyDeletehttp://www.jaffnamuslim.com/2013/08/blog-post_1449.html,
ReplyDeleteMr. Rasmin, Why don't you take legal action against people who are accusing you, people are accusing of terror activities its serious accusation. Without writing Tamil essays call a press conference and ask the BBS to come up with facts or you go to courts. at least there will be some a record saying you denied the allegation.
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதரர்களே,
ReplyDeleteஇதன் பிறகும் நாம் அரசியல் வாதிகளையோ, ஜம்மியத்துல் உலமா சபையோ நம்பி, இருக்கின்ற துணிமனிகளையும் தாறைவாரிகொடுத்து பின்னோக்கி ஒட முடியாது. மற்றும் இயக்க ரீதியாக பிலவுபட்டு நடப்பதென்பதும் இதுபோன்ற விடயங்களுக்கு வெற்றியலிக்காது.
24 பள்ளிகளை உடைத்தும் எந்த ஒன்றுக்கும் குறைந்தது ஒன்றுக்காவது வழக்கு தாக்கல் செய்து சட்ட படி, ஜனநாயக முறைமைக்கு அமைய நடவடிக்கை எடுத்ததாக யாராலும் காட்ட முடியாது.
அல்குர்ஆனை கொச்சை படுத்திய போது (சிங்களவர்களுக்கு உணவுகள் கொடுக்கும் போது முஸ்லீம்கள் அதில் ழூன்று முறை துப்பிவிட்டு தான் கொடுக்கிறார்கள். இது குர்ஆனில் இருக்கிறது) 100% சாச்சிங்கள் இறுந்தும் அந்த செய்திக்கு எதிராக வழக்கு தாக்கல் சொய்யாதது ஏன்? இதை அன்றே ஜம்மியதுல் உலமா சபை முன்னின்று முடித்திருந்தால் BBS சின் பொய் முகம் முழு நாட்டு மக்களுக்கும் சென்றிக்குமல்லவா...
ஹலால் விடயத்திலும் ஜம்மியதுல் உலமா சபை BBS சின் வாதங்களுக்கு தக்க பதில்கள் சரியாக கொடுக்காததினால் தனே அன்று அதையும் தாரைவார்து விட்டோம்.
Grandpass பள்ளியை உடைக்கும் இரவு வாறாத இந்த உலமா கூட்டம் ஏன் காலை டீ குடிக்கும் சபைக்கு மற்றும் வந்து அந்த பள்ளியையும் தாரைவார்க வேலை செய்தது.
இப்படி நிரையவே சொல்லிக்கொண்டு போகலாம்..... ஆனால் அது இப்போதைக்கு தேவையற்றது என்றாலும் ஓர் சிலருக்கு புரியவேண்டுமென்ற நோக்கோடு இவைகளை வைத்தேன்.
தயவு செய்து! நம் சகோதரர்களே இவ்விரு கூடத்தை நம்பி இனிமேலும் இருக்கவேண்டாம். இயக்க குரோதங்களை மறந்து இவர்களாலாவது என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்பதற்க்காகஆவது ஒன்றுதிரளுவோமாக. ஜனநாயக முறையில் பல நல்வலிகள் இருக்கின்றன போராடுவதற்க்கு எனவே, அவைகளை கையாண்டு நம் இருப்பிடைத்தையாவது தக்கவைதுக்கொள்வோம்.
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் சீறான பாதையையும் வெற்றியையும் தந்தருல்வானாக!
முதலில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பியுங்கள்
ReplyDelete1979 halil tamilar viduthali kuuttani thalaivarhal peasiya veeraapu peatchu madiri erukkuthu.paawam peasiya thaliwarhaliyea antha inathawarhali poattu thallivittarhal. neengal poallaikuduthu adiwaangamal erunthal sari.
ReplyDeleteஇன்ஷாஹல்லாஹ் புறப்படுவோம் வாலிபர்களே கொளுத்த சீதனம் தேடியலயாமல் எளைக்குமர்களுக்கு வாழ்வும் உங்களுக்கான வாரிசேயும் கொடுத்துவிட்டு சீக்கிரம் புறப்படுங்கள்,பணக்காறேர்கள் கொடுத்தபணம் வட்டிஉடன்வரும்வரை பாத்திராமல் வாரிவளேன்கிவிட்டு புறப்படுங்கள் ,மாடிமேல் மாடிகட்டி உலகையாளும் ஆசையை குளி தோன்டி புதைத்துவிட்டு புறப்படுங்கள்,மக்களை மாடாக்கி மடய்ராக்கி சொகுசாகவாழும் சாக்கடை அரசியல்வாதிகளே பட்டம்பதவியைதுறந்து புறப்படுங்கள்,உலமாக்களே நான்கண்டால்தான் பிறை மத்தவெர்கண்டால் மறை என்ரெ பிடிவாதத்தைவிட்டு ஒரே அல்லாஹ் என்று புறப்படுங்கள். இன்ஷாஹல்லாஹ்உலகத்தில் எந்த மூலைலும் தங்கமுடியாதவாறு காவிக்காடெயர்கலைவிரெட்டலாம்.
ReplyDeleteசகோதரர் ரஸ்மின் உங்கள் விடயங்கள் ஒன்றும் தப்பென்று நான் சொல்லவில்லை தெளகீத் கொள்கை வரவேற்கக்கூடியது என்பதில் எனக்கு அதிகளவில் குறைபாடுகள் இல்லாதபோதும் ஒருவிடயத்தில் பாரிய குறைபாடுள்ளது, மற்றவர்களை தூசிப்பது மிக மனவேதனையான விடயம் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? தற்போது முஸ்லிம்கள் அனுபவித்து வரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் உமது விமர்சனங்கள் அவசியம்தானா? இதனால் மாற்று மதத்தவர்களுக்கு எம்மேல் நற்பெயர் ஏற்படுமா அல்லது இஸ்லாம் என்றால் குழப்பமாக இருக்காதா?
ReplyDeleteஅன்று எம் சமூகம் இவன் தவ்ஹீத்வாதி ,இவன் தப்லிக்காரன், இவன் தரீகாவாதி என்று பிரிந்து இருக்கவில்லை.இதனால் எம் சமூகம் ஒற்றுமையுடன் முஸ்லிம்களின் உரிமைக்காக போராடி வெற்றி பெறவும் முடிந்தது.ஆனால் இன்று நிலைமை நினைதுக்கூட பார்க்க முடியாத அளவு மார்கம் என்றும் குர்ஆன் சுன்னாவை மட்டும் 100%பின்பற்றும் தூய மார்க்கம் என்றும் முஸ்லிம் உள்ளம் சுக்கு நூறாக பிரிந்து காணப்படுகிறது.இதை நம் எதிரிகள் நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு நம்மை அவகள் விரும்பிய விதத்தில் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நம் சமூகத்திலுள்ள முஸ்லிம் பெயர் தாங்கிகள் ஓர் அளவாவது நம்மை வழி நடத்தும் தலைமைத்துவத்தை மலினப்படுத்தி முஸ்லிம் சமூகம் கேட்பாரற்ற அனாதை சமூகமாக மற்றுவதற்கு உள்ளிருந்தே கருவருத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் அவசர முடிவுகளை விட நிதானமான முடிவுகளெ ஆரோக்கியமானது. முதலில் நம் சமூகத்தை ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவோம் பின் எதிரியை எதிர்ப்பது(அகிம்சா வழி) மிகவும் இலகு அல்லாஹ்வின் உதவியும் நிச்சயம் கிடைக்கும்.ஒற்றுமை யில்லாமல் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்பது மடமையாகும்.
ReplyDeleteநீங்கள் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள்.அகீதவில் முரன்படாத எல்லா முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்த அனைவரும் முஸ்லிம்களே.எனவே சிந்தித்து செயற்பட முயளுங்கள்.ஒரு சமூகத்தையே வீழ்த்தி விட்டோம் எனும் இருமப்பில் இருக்கும் பேரினவாதத்தை முகம் கொள்ள ஆத்திர முடிவால் எமக்கு இழப்பு அதிகரிக்குமேயொழிய வெற்றியை கொண்டு தராது.எனவெ ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட்டு அந்த தலைமையின் கீழ் நிதானமக முடிவுகளை மேற்கொள்வதே தற்போதய நிலைமைக்கு பொருத்தமே யொழிய அவசர முடிவள்ள.
Thoppikku aatharam islathil illai enru Ivar engu pditharo?
ReplyDeleteதௌஹீத் ஜமாஅத்தின் அழைப்புக்குப் பதில்
ReplyDeleteபல இயக்கங்களாக சமூகத்தைப் பிரித்து வைத்து விட்டு ஒற்றுமை என்றும் போராட்டம் என்றும் பேசுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. உங்களிடம் இஹ்லாஸ் எனும் உளத்தூய்மை கிடையாது நீங்கள் எல்லாம் பேருக்காகவும் புகழுக்காகவும்தான் கத்துவீர்கள்
உண்மையில் உங்களிடம் இஹ்லாஸ் இருக்குமானால் தௌஹீத் என்ற அந்த பிரிவினைப் பெயரை விட்டு விட்டு இஸ்லாம் முஸ்லிம் என்ற பெயருடன் வாருங்கள் ஒன்று படுவோம்.
நீங்கள் கூறுவது போன்று ஏனைய இயக்கங்களும் அழைப்பு விடுத்தால் மக்கள் யாரை நம்புவது யாருக்குப் பின்னால் போவது?
முஸ்லிம்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் ஒரே தலைமைத்துவத்தின் கீழ்தான் இருக்க வேண்டும் அது ஒரு அற்பமான விடயமாக இருந்தாலும் சரியே.
அல்லாஹ் கூறுகின்றான்:
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அல்குர்ஆன்: 61:2)
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (அல்குர்ஆன்: 61:3)
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் ஒரே அணியில் நின்றுää அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோää அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான். (அல்குர்ஆன்: 61:4)
உங்களுக்குள் நீங்கள் ஒன்றுபட முடியாது பிறரின் ஒற்றுமை பற்றி பேசுகின்றீர்கள் எனவே இது அல்லாஹ்விடம் வெறுப்புக்குரியதாக உள்ளது.
ஆல்லாஹ் விரும்புவதெல்லாம் நாம் ஒரே அணியாக நின்று போராடுவதைத்தான். இயக்கதிற்கு ஒரு அணியாக நிறப்பதை அல்லாஹ் விரும்புவதில்லை.
இன்றைய எமது இந்த நிலையில் நடந்தவைகளை எல்லாம் மறந்து விட்டு அணைத்து இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களும் உலமா சபையுடன் இணைந்து ஒரு கூட்டுத்தலைமையினை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் செயல்படுதல்தான் பொருத்தமாக இருக்கும் எனக்கருதுகின்றேன்
நன்றி
வஸ்ஸலாம்
இஃது முனாப் நுபார்தீன்.
மின் அஞ்சல் :nubardeenjp@yahoo.com