Header Ads



பள்ளிவாசல் தீயிடப்பட்டதை நவநீதம் பிள்ளை பார்க்கச்சென்றாரா..? விமல் வீரவன்ச கேள்வி

(மொஹொமட் ஆஸிக்)

இங்கிலாந்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை வெள்ளைக்காரர்கள் தீயிட்டுள்ளனர். அச்சம்பவத்தின் போது அந்நாட்டு முஸ்லிம்கள் பொறுமையாக இருந்ததற்கு  பொலிஸார் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் நாடுகளுக்கு செல்லாமல் ஐ.நா.வின். மனித உரிமைக் குழுவின் ஆனையாளர் இங்கு வருவது நியாயமா என தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவரும் வீடமைப்புத துறை அமைச்சருமான விமல் வீரவன்ச கேல்வி எழுப்பினார்.
2013 08 31  கண்டி பூஜாப்பிட்டிய நகரத்தில் இடம பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனயின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்ம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவிததார். இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாரும் தெரிவித்தார்.

இன்று நாங்கள் தேர்தல் ஒன்றை எதிர் நோக்கிக் கொண்டுள்ளோம். இது தேசிய தேர்தல் ஒன்று இல்லாவிட்டாலும் தேசிய தேர்தல் ஒன்றின் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்று சர்வதேசம் இத் தேர்தலை வைத்து அரசை எடை போடப் போகிறது. 

முப்பது வருடங்கள் எம்மை பீடித்த யுத்தத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்தார். இதனை சகிக்க முடியாத வெளி நாட்டு சக்திகள் ஐநாவின் போர்வையில் எமது நாட்டை சீண்டுகின்றன. ஐநாவின் மனித உரிமைகள் பிரிவின் உயர் ஸ்தானிகர்  நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்து  நாங்கள் பெற்ற யுத்த வெற்றியை திசை திருப்ப முயற்சிக்கினறார்

பிரபாகரன் உற்பட புலி உறுப்பினர்கள்  கொல்லப்பட்ட நந்திகடல் பகுதியில் மலர் வைக்க முயற்சித்ததலிருந்து 'பிள்ளை'யின் சுயரூபம் தெளிவாகின்றது. 2015 அல்லது 2016 ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது ஸ்திரமற்ற ஒரு அரசாங்கத்தை உருவாக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பனயக்கைதியாக்கி யுத்தத்தால் பெற முடியாது போனதை அரசியல் மூலம் பெற்றுக் கொடுக்க சர்வதேச சக்திகள் அயராது உழகைகின்றன.

இங்கிலாந்தில் இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றை வெள்ளைக் காரர்கள் தீயிட்டு கொழுத்தி உள்ளனர். அச் சம்பவத்தின் போது அன் நாட்டு முஸ்லிம்கள் பொருமையாக இருந்ததற்கு அந்நாட்டு பொலிஸார் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அவ்வாரான நாடுகளுக்கு செல்லாமல் இங்கு வருவது நியாயா என்று கேட்க வேண்டியுள்ளது. நாட்டில் சர்ச்சைகள் அதிகரித்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் நாங்கள் மிகவும புத்தி சாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். 


No comments

Powered by Blogger.