புல்மோட்டை முஸ்லிம்கள் வீதியில் இறங்கி போராட்டம் (படங்கள்)
இன்று 19-08-2013 புல்மோட்டைப்பிரதேசத்தின் 14ம் கட்டை பிரதேசத்தை அண்டிய நாக விகாரைக்கான காணியை அளவிடுவதற்காக நில அளவைத் திணைக்களத்தினால் ஏற்கெனவே விதிக்கப்பட்ட பல தடைகளையும் தாண்டி மீண்டும் திடீரென வருகை தந்தனர். அதனால் பொதுமக்கள் வீதிக்கு இறங்கி எதிர்ப்பை காட்டிய அதே வேளை இது விடயம் தொடர்பாக புல்மோட்டை ஜம்மியத்துல் உலமா, உப தவிசாளர், பொலிஸ் மற்றும் கி.மா.ச.உ அன்வர் ஆகியோர் இது தொடர்பான உயர் அதிகாரிகளிடம் பேசி காணி அளவிடுவதனை உடனடியாக நிறுத்தம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் சம்பவ இடத்தை விட்டு அகன்றனர்.



Post a Comment