Header Ads



யாழ் முஸ்லிம் சாதனையாளர்களின் ஒன்று கூடல் + பாராட்டு விழா


யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே கல்வித்துறை, விளையாட்டுத்துறை, கவிதைகள் மற்றும் நூல் வெளியீடுகள், குர்ஆன் மற்றும் மார்க்க கல்வி போன்ற  பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிலைநாட்டிய நபர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வொன்றை ' சாதனையாளர் பாராட்டு விழா ஏற்பாட்டுக்குழு' விரைவில் ஏற்பாடு செய்யவுள்ளது. இது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கான முதல் கூட்டம் கடந்த 17.08.2013 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பில் இடம்பெற்றது.  

இதில் எம்.எஸ்.கியாரத் ஆசிரியர், எம்.எம்.எம்.ஜான்ஸின், என்.பி.சலீன், ரம்ஸான் அம்ஜதீன்,  ஜே. ஜுனைஸ், எம்.ஜனோஸன், ஏ.சி.நகீப், எம்.எஸ். சேகுமொஹிடீன், இப்ராகிம் இர்ஸாத், எம்.இர்ஸாத், எஸ்.எச்.எம்.ரிஸ்வி, எம்.எஸ்.எம். ஜலீஸ், ஜே.எம்.சபீர் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதன் பிரகாரம் கடந்த 75 ஆண்டுகளில் யாழ்ப்பாண மண்ணில் பிறந்து யாழ்ப்பாணத்திலோ இலங்கையிலோ அல்லது உலகில் எங்காவது கல்வித்துறை விளையாட்டுத்துறை கவிதைகள் மற்றும் நூல் வெளியீடுகள், குர்ஆன் மற்றும் மார்க்க கல்வி போன்ற  ஏதாவது ஒரு துறையில்  சாதனைகளை நிலைநாட்டிய நபர்களை ஒன்று சேர்ந்து அவர்களில் மூத்தவர்களை இளையவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் அறிமுகப்படுத்தி கௌரவப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அவர்களில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கவும் விழா முடிவில் மதிய போசன விருந்து வழங்கவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சி எதிர் வரும் ஒக்ரோபர் மாதமளவில் நடத்துவதற்கும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இதன் இரண்டாம் கட்ட கூட்டம் வருகின்ற புதன் கிழமை மாலை 5.30 மணியளவில் தெஹிவளை கவுடான பொகுன வீதியிலுள்ள ஆசிரியர் எம்.எஸ்.எம். கியாரத் அவர்களின் வீட்டில் இன்ஷா அல்லாஹ் நடைபெறும். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்புகளையும் தகவல்களையும் வழங்குமாறு சகல  யாழ் முஸ்லிம் கல்விமான்களையும் கேட்டுக் கொள்கின்றோம். 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை சித்தி, சாதாரண தர மற்றும் உயர்தரங்களில் திறமைச் சித்தி பெற்றவர்கள், பல்கலைக்கழக பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு, ஆசிரியர், நிர்வாகத்துறையிலான படிப்புகள், ஆலிம் மார்க்க கல்வி, காபிழ் காரிகள், சைக்கியோட்டம், மரதன் ஓட்டம், ஓட்டப்போட்டிகள், உதைப்பந்தாட்டம், கிறிகட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்கள், கவிதைகள் கட்டுரைகள் நூல் வெளியீட்டாளர்கள், பத்திரிகைத்துறையில் கடமையாற்றுவோர், விமானி, கணக்காளர்கள், என்ஜினியர்கள், வைத்தியர்கள், விரிவுரையாளர்கள் போன்றவர்கள் தமது விபரங்களை தர முடியும்.   மேலும் இவ்விழாவில் தமது ஏதாவது ஒரு துறையிலான சாதனைகளை  இடம்பெறச் செய்ய விரும்பும் அத்தனை பேரும் தமது விபரங்களை  jansin@hotmail.co.uk    என்ற ஈமெயில் முகவரிக்கு தமது தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள். 


1 comment:

  1. இது போன்ற கூட்டங்களை புத்தளத்தில் நடத்தினால் நல்லது

    ReplyDelete

Powered by Blogger.