Header Ads



நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இஸ்ரேலுடன் கூட்டுவைக்குமா..?

அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)

இலங்கையில் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய கொடுமைகள் நடக்கும்போதும் வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின் அவர்களின் உரிமைகள் கிடைக்கபெறாத நேரத்திலும் முஸ்லிம்கள் விடயத்துக்காக எதிர்க்குரல் கொடுக்காத இந்த PMGG கட்சி தற்போது முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வடமாகான சபை தேர்தலில் தமிழரசு கட்சியுடன் கூட்டணி அரசியலில் இறங்கியுள்ளனராம்.

அதுவும் இலங்கையில் பேரினவாத  அரசைவிட கேவலமான அரசியல் செய்துவரும் தமிழரசு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து முஸ்லிம்களை காப்பாற்ற போகின்றனாராம்.

என்னமோ தெரியவில்லை இந்த சிந்தனை கொண்ட இவர்கள் யாருடன் கூட்டணி வைகின்றனரோ அவர்கள் நல்லவர்களாகவும் நடுநிலமைவாதிகலாகவும் ஆகிவிடுகின்றனர் அவர்கள் பார்வையில்.

இஸ்ரேலுடன் இவர்கள் கூட்டணி வைத்தாலும் இஸ்ரேல் நடுநிலைமை வாதியாகவும் நல்லவனாகவும் ஆகிவிடுவான் இவர்கள் பார்வையில்.எப்போது இவர்கள் கூட்டணி முரிகிறதோ அப்போது எதிர்தரப்பு துரோகி என்றும் மோசடி காரர்கள் என்றும் ஆகிவிடும் இவர்கள் பார்வையில். இவர்கள் ஆதரவு இயக்கமான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சி இப்படியான பிரச்சாரத்தையே எகிப்தின் எதிர்கட்சிகளுக்கு கூட்டணி முறிந்த பின் சொல்லிவருகின்றனர்.

இலங்கையில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் துரோகம் செய்த துரோகம் செய்துவருகின்ற கட்சியான தமிழரசு கட்சியுடன் இவர்கள் கூட்டணி வைத்து முஸ்லிம்களை காப்பாற்ற போகின்றரா?மன்னாரில் முஸ்லிம்களுக்கு தமிழரசு கட்சியினால் இழைக்கப்படும் கொடுமைகள் துரோகத்தை இவர்கள் அறியாமல் இல்லை.

எகிப்தில் இவர்கள் ஆதரிக்கும் இக்வான்கள் லெபறல் கட்சிகளுடன் கூட்டணி வைத்த போது அவர்களை நடுநிலைமை வாதிகள் என்று கூறி நியாயபப்டுத்தியவர்கள் இப்போது இக்வானிய ஆட்சி வீழ்ந்ததும் அவர்களை காபிர்கள் என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் நிலை ஆகிவிட்டது.

PMGG கட்சி பற்றிய அடையாள குறிப்புகள் 

சென்ற கிழக்கு மாகான சபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகளை தோற்கடிக்கும் வங்குரோத்து அரசியலை கனகச்சிதமாக மக்கள் நல்லாட்சிக்கான இயக்கம் செய்து முடித்தது.

ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லி முஸ்லிம்களின் வாக்குகளை பிரித்தாளும் வேலையை செய்யும் இவர்களை மக்களிடம் இனம் காட்டுவது காலத்தின் தேவையாகும். ஜனநாயக நாட்டில் விகிதாசார தேர்தல் முறைமையில் காத்தான்குடி பிரதேசத்தில் எவ்வாறு அரசியல் காய் நகர்த்த வேண்டும் என்பதை அறியாமல் தேர்தலில் குதித்து இஸ்லாமிய ஓட்டுகளை பிரித்து பேரினவாதிகளுக்கு வெற்றிமாலை கொடுத்துள்ளனர்.

அரசியல் சானாக்கியம் உள்ளவர்கள் என்று தம்மை தாமே சொல்லிக்கொண்டு வடிகட்டிய முட்டாள் தனத்தை இந்த தேர்தலில் அரங்கேற்றியுள்ளனர்.

முஸ்லிம்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு தங்களுக்கு ஆதரவு வழங்கிய ஐயாயிரம் வாக்குகளை ஒரு அமுக்க குழுவாக செயல்பட்டு ஒரு முஸ்லிம் அரசியல் கட்சிக்கு வழங்கியிருந்தால் ஒரு பேரினவாதியின் மாகாண சபை ஆதிக்கத்தை இஸ்லாமிய மாகாணமான கிழக்கில் குறைத்திருக்கலாம்.

இவர்களும் இவர்கள் சார்பு இயந்திரங்களின் ஆரம்ப நிலை என்ன முடிவு நிலை என்ன? போன்ற நடை முறை மனப்பதிவுகளையும் வரலாற்றையும் ஒருங்கிணைத்து நோக்கும் ஒருவரே இவர்கள் பற்றிய உண்மை முகத்தை கண்டுகொள்ள முடியும்.

இவர்கள் ஒரு சாதாரண சாமான்யமானவர்களாக இருக்கும்போது நடு நிலை வாதியாகவும்  மாற்றுக்கருத்தை பக்குவத்துடன் ஏற்றோ மறுத்தோ இயங்கும் தரப்பாக தங்களை மக்கள் மன்றத்தில் அடையாலபடுத்துவார்கள்.
பின்னர் குறித்த பிரதேசத்தில் ஆதிக்க சக்தியாக மாறிய பின்னர் ஒற்றுமை என்பதற்கு முதல் எதிரி இவர்கள்தான். நடுநிலமைக்கு உலைவைக்கும் சக்தியே இவர்கள்தான்.மாற்றுக்கருத்தை அவமதித்து மாற்று கருத்துடையோரை மக்களிடம் தவறான கண்ணோட்டத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்த துணிபவர்கள் இவர்கள்தான்.

தமது அடிப்படை கொள்கையான அரசியல் இலாபங்களை அடைவுகளை அடைந்துகொள்ள வெட்கம் இல்லாமல் முன்னுக்கு பின் முரண்பட்டு பேசுவார்கள்.அதை ஒரு அரசியல் ஆய்வாளன் சுட்டி காட்டும்போது அப்பட்டமான தவறில் தாம் இருக்கின்றோம் என்று தெரிந்தும் மழுப்பி எதையாவது உளறி பதில் என்று ஒன்றை வைத்துவிட்ட மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.

ஆன்மீக  பெயர்களில் அரசியலை உள்வாங்கி ஆன்மீகத்துக்கே குந்தகம் விளைவிப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களின் நகர்வு நடுநிலைமை, ஒற்றுமை, மாற்று கருத்தை மதிக்கும் தன்மை கொண்ட ஒரு தரப்பாக மக்களிடம் தமது தனித்துவத்தை காட்ட எத்தனித்து ஆதிக்கம் வந்தவுடன் இம்மூன்று அழகிய பண்புக்கும் உலை வைத்து உதைத்துவிடுவர்கள்.

இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் ஆன்மீக தஹ்வா நகர்வுகளில் அனுசரிப்பு என்ற பெயரில் இவர்கள் காட்டும் அவல நிலைகளை நாம் கண்டுவருவது புதிதல்ல. அதே நேரம் இவர்கள் சமூகத்தில் உள்ள தலையாய பிரச்சினைகளுக்கு தீர்வுப்பொதியை பல சங்கடங்களை சந்தித்தே வைக்க வேண்டிய நிலை வரும் பட்சத்தில் ஒதிங்கி நின்று பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் தங்களை உள்வாங்கி விடாது இஸ்திரி போட்ட கோட்டும் ஷூட்டும் அனுகாமல் பிசகாமல் குலையாமல் ஒதிங்கி நின்றுவிட்டு சமூக தீர்வுக்கு தலையை முட்டி மோதி தியாகித்து சென்ற தரப்பை மிகவும் இலகுவாக ஒரு அறிக்கையில் விமர்சித்துவிட்டு முஸ்லிம்களின் பிரதிநிதி நாமே என்ற திமிருடன் வெட்கமின்றி நிமிர்ந்து செல்வார் இவர்கள்.

PMGG கட்சி கிழக்குமாகாண சபை தேர்தலில் தனித்தும் வடமாகாண சபை தேர்தலில் கூட்டணி வைத்தும் போட்டியிட காரணம் 

காத்தான்குடியில் இவர்கள் ஆதிக்கம் பெற வேண்டும் என்பதால் ஹிஸ்புல்லாவையோ முஸ்லிம் காங்கரசசையோ  ஆதரிப்பதில் இவர்களுக்கு எந்த வித நன்மையுமில்லை என்பதை உணர்ந்த இவர்கள் ஹிஸ்புல்லாவை எதிர்ப்பதன் மூலமே எதிர்த்தரப்பை தமக்குள் உள்வாங்க முடியும் என்ற ரீதியில் எதிர்கின்றார்களே தவிர இவர்களின் அடிப்படை அறிக்கைகள் மாற்றுக் கருத்தை எதிர்க்கும் தரப்பாக காட்டாது.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் இவர்கள் நோக்கம் எதுவோ அதை ஓரளவு செய்தனர்.தமது கட்சி வெற்றிபெறவில்லை என்றாலும் முஸ்லிம் பிரதிநித்துவம் உடைக்கப்படவேண்டும் என்ற அவர்கள் நோக்கம் ஓரளவு நிறைவேறியது. 

அதே நிலைதான் தற்போது வடமாகாண சபை தேர்தலிலும் நடகின்றது.ஆனால் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது.தமது கட்சியின் பிரதிநிதியும் வெற்றிபெறவேண்டும் அதே நேரம் முஸ்லிம் ஓட்டுகள் முஸ்லிம் கட்சிக்கும் போக கூடாது என்ற வியூகம் அமைத்தே தமிழரசு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர்.வடமாகாண சபை தேர்தலில் இவர்கள் தனித்து போட்டியிட்டால் தமது கட்சியின் வங்குரோத்து வெளிப்பட்டுவிடும் என்று தெரிந்து தமது ஆதரவை முஸ்லிம் தரப்பு அல்லாத ஒரு சாராருக்கு கொடுத்து பதவியில் வந்துவிட துடிக்கின்றனர்.இவர்கள் கட்சி அல்லாத வேறு முஸ்லிம் கட்சி பிரதிநிதித்துவம் இல்லாமல் போக வேண்டும் என்பதற்கே இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இலங்கையில் கிழக்கு மாகாண சபை தேர்தளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்று இழக்கபட்டதற்கு இவர்கள் முக்கிய பங்காளிகள் என்ற அடிப்படையிலும் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவ படுத்துவதட்காக பல கட்சிகள் அரசியல் அரங்கில் ஏலவே இருப்பதால் இஸ்லாமிய சமுதாயத்தில் அரசியல் ரீதியாக இழக்கப்பட உரிமைகளும் சலுகைகைகளும் அதிகம் என்ற வகையில் அதை சீர் செய்ய சிந்தனை அடிப்படையில் அதற்கான மாற்றீடு ஒன்றை முன்வைப்பது இயல்பே. ஆனால் அதை முன்வைத்த முறையிலேயே மக்கள் நல்லாட்சிக்கான இயக்கம் வரலாற்று தவறோன்ரை நிகழ்த்தியுள்ளது.

இலங்கை அரசியலில் இத்தேர்தலில்  மாற்றீடு என்பது இருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்துக்கு மத்தியில் ஒரு  இணக்கப்பாட்டை முன்வைத்து  அரசியல் தீர்வை நாடுவது. இது சாத்தியம் ஆகாத பட்சத்தில் இக்கட்சிகளுக்கு மத்தியில் ஓரளவு ஏற்கத்தக்க நியாயங்களை கொண்ட சமூக நலன் சார்ந்து கட்சிக்குள்ளேயே ஓரளவாவது ஜனநாயகம் பேணகூடிய ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து அதை சீர்படுத்த எத்தநிப்பதே வரலாற்று  ரீதியாக நாம் கண்ட பின்னடைவுக்கு தீர்வு பொதியாக அமைந்திருக்கும்.

இதற்கு மாறாக புதிய கட்சியின் உருவாக்கத்தின் தேவைப்பாட்டை விட மீண்டும் சமூக உடைவை தோற்றுவிக்காத  எளிய சமூகம் சார்ந்த தீர்வுப்பொதி ஒன்று எமக்கு மத்தியில் வெள்ளிடை மலையாக இருக்கும் இவ்வேளையில்  பிரிவினையை தூண்ட கூடிய புதிய கட்சி உருவாக்கம்தான் தீர்வு என்பது எந்தவகையிலும் அரசியல் சானாக்கியம் உள்ளவர்களால் ஏற்க முடியாது.

நிலை இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அறிஞர்கள் என்றும் சமுதாய தலைவர்கள் என்றும் தங்களை தாங்களே மக்கள் மன்றத்தில் அடையாளப்படுத்திகொண்ட இவர்கள் முஸ்லிம்களின் துரோகிகளான தமிழரச கட்சியை ஆதரிக்க முற்படுவதன் மூலம் சமுதாயத்துக்கு இவர்கள் 

சொல்ல வரும் செய்தி என்ன?

வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் ஒழுங்கில் நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளைகொண்டு அரசியல் அடைவை எவ்வாறு சமுதாயம் சார்ந்ததாக நெறிப்படுத்த வேண்டும் என்பது தெட்டத்தெளிவாக இருக்கும் வேளையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்த்தின் இந்த பிரித்தாளும் முடிவு தமிழரசு கூட்டணியை  ஆதரித்திருப்பதானது மக்கள் மன்றத்தில்  அரசியல் சமூக ரீதியாக இவர்கள் ஒதுக்கப்படுவதட்கு தமக்கு தாமாக கொடுக்கும் அங்கீகாரமாகவே இதை நோக்கவேண்டி உள்ளது.

17 comments:

  1. நீங்கள் எகிப்தில் படித்தவர் என்பதற்காக சம்பந்தமில்லாமல் கொட்டி முழக்காதீர்கள். இங்கே எகிப்தைப் படித்தவர்களும் இஹ்வான்களை அறிந்தவகளும், எகிப்தின் தற்கால அரசியல் கள நிலவரங்களை அச்சோட்டாக அவதானித்து வருபவர்களும் அதிகம் உள்ளனர்.

    அது சரி தனித்துவமான முஸ்லிம் ஆசனங்களினால் கடந்த 15 வருடங்களில் சாதித்த சாணக்கியம்தான் என்ன? துருக்கித் தொப்பியை தாங்கிப் பிடித்த இந்தச் சமூகம் முழுப் பள்ளிவாயல்களும் மூடப்படுகின்றபோது கைபிசைந்து நிற்பதுதான் முஸ்லிம் ஆசனங்கள் பெற்றுத் தந்தவையா?

    முழுத் தேசத்திலும் தேசியப் பெரும்பான்மையோடு இணங்கிப் போய் இணக்க அரசியல் செய்வது சாணக்கியம் என்றால், மாகாணத்தில் மாகாணப் பெரும்பான்மையோடு இணக்க அரசியல் செய்வது சாணக்கியம் இல்லையா?

    சுற்றி வளைத்து நீங்கள் பாரம்பரிய அரசியலுக்காக, அந்த அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்திற்காக நீங்கள் எழுதுகின்றீர்கள் போலத் தெரிகின்றது. காத்தான்குடியில் அமையப்போகும் தொழிந்நுட்ப பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு ஒரு ஆசனம் கிடைப்பதற்காக தாங்கள் பிரயத்தனப் படுவதாகத் தெரிகின்றதே!

    ReplyDelete
  2. இக்வான்கள் எகிப்தில் செய்த அரசியல் தவறை இலங்கையில் இந்த PMGG யினர் செய்துகொண்டுள்ளனர்.நளீம் ஹாஜியார் பணத்தை சாக்கடை அரசியலுக்காக வீனடிகின்றனர்.நலீமியா மூலம் இஸ்லாமிய சீர்திருத்தம் வரும் என்று பார்த்தல் மோசடி சாக்கடை அரசியல் வாதிகள்தான் அங்கிருந்து வருகின்றனர்.

    இஸ்ரேலை விட மோசமான தமிலரசுடன் கூட்டணி வைத்துவிட்டு நல்லவர்கள் வல்லவர்கள் நடுநிலமயானவர்கள் என்று தமது கூட்டணியை புகழ்வார்கள்.அதே கூட்டணி கலைந்தால் துரோகிகள் என்பார்கள்.

    இவர்களை மக்கள் அடையாளம் காண கட்டுரை தந்த ஜப்னா முஸ்லிமுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. sahothararuku, israludan oppantham sammanthamaha ketkum ongaluku, rasoolullah seitha huthaibia udanpadikkaiyinaum pilayaha solluveerkal polum. Sila arasiyal vathikalin peyarkalai kurippittiruntheerkal pmgg avarkalai ethirkirathu enpathai vida avarkalin makkalai ematrum nadavadikkayinaye ethirkirathu enpthe unmai. Neengal sonna arasiyalvathikal samokathukaha seitha oru oppanthaththai pakiranka paduthuvarkala? Tamil makkaludan oru kalum inayakkoodathu enra mokkuthanamana kolkai ungaludaya arasiyal ariveenathaye kattukirathu. Ivalavu nalum muslimkaluku nadantha aneethikal thodarpil arasudan ivarkalal peram pesa mudiyavillai. Thodarum.. MUSHATHIK

    ReplyDelete
  4. Vaai moodi mounihalaha irukkum muslim pirathi nithihalai vida'illaamal iruppathu siranthathu allawa.ina thuwasaththai valakka vendam entru oru kaafir sollum alavukku poi vittathu,muslimgalin nilai

    ReplyDelete
  5. தமிழ் மக்களுடன் பகைமை பாராட்டி முஸ்லிம் சமூகம் வடகிழக்கு மாகாணத்தில் தனது அரசியல் சமூக பயணத்தை எடுத்து செல்வது புத்திசாதிரியமானதோ யதார்த்தமானதோ விடயமல்ல. எனவே PMGG இனது முயற்சி நல்ல ஆரோக்கியமான விடயம் தான். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அஹமத் ஜம்சாத், உங்கள் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துவதட்காக இனங்களுக் இடையே இனவாதம் பேசுவதை தவிர்த்துக் கொள்ளுவது அரசியல் நாகரிகமாகவும் சமூக நல்லிணக்கத்தையும் மேன்படுத்தும் என்பது எனது பணிவான கருத்தாகும்.

    ReplyDelete
  6. Allah will be always with good Muslims and Allah is the master planer
    we can realize our previous incidents enough

    ReplyDelete
  7. சுயநல அரசியலில் ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல தெரிகிறது, வருமானம் குறைதுவிடும் என்று அஞ்சுகிறீர்களோ????

    ReplyDelete
  8. அஹ்மத் ஜம்ஷாத் நீங்கள் ஒரு பொதுபலசேன உறுப்பினரா அல்லது அல்லது பேர்தாங்கி முஸ்லிமா

    ReplyDelete
  9. Hasarath, Neenaga Ennathan Solla Vareenga ????

    Sabeel

    ReplyDelete
  10. I can understand your articles are mostly attacking a certain Islamic movement in SL. I agree that you can express your own opinion or you hate that movement. When you mention in the above article "Islamic Province" Kalmunai, I think this is too much to say like that. There are Muslims each and every corner of the country. You should focus your thinking about all Muslims in the country not just those live Eastern provinces!!!

    ReplyDelete
  11. இது உண்மையில் ஒரு மடத்தனமான மட்டமாகச் சிந்திப்பவர்களின் செய்தி என்றே கூறலாம். நாளை விக்னேஸ்வரன் வடக்கில் வெற்றி ‌பெற்றால் அங்கு வாழும் முஸ்லிம்களுக்காக யார் குரல் கொடுப்பது. எல்லா முஸ்லிம் கட்சிகளும், தலைமைகளும் பதவி, பணம் என்று ஈரமுள்ளவர்களுடன் மட்டு‌‌மே கூட்டுச் சேர்ந்தால் மாற்று அணிகளுடன் இணைந்து கொள்ளும் முஸ்லிம் பிரதிநிதிகள் யார். அவர்களின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்தது உண்மையில் மிகப் பெரிய இராஜ தந்திரம் என்றே சொல்ல வேண்டும். முஸ்லிம்களுக்கு எங்கும் எதிரி இருக்குமளவிற்கு நாம் அரசியல் செய்யக் கூடாது என்பதற்கான சிறந்த கூட்டே பீஎம்ஜீஜீ டீஎன்ஏ கூட்டு. அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. Funny article...! Think possitively....

    ReplyDelete
  13. காலத்தின் தேவை கட்டுரையின் நோக்கம் மக்களின் பாதுகாப்பு.

    அரசியல் சாக்கடைகள் ஒன்றோ சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தும் இல்லையேல் மார்கத்தை சொல்லி அதை விற்று அரசியல் நடத்தும். இது இரண்டாவது வகை சாக்கடை

    ReplyDelete
  14. PMGG யினரின் கூட்டு சிறப்பானது. அதனை யாரும் தவறாக பேசுகிறார்கள் என்றால் அவர்களின் சிந்தனை மடத்தனம் மிக்கது எனலாம். இந்தக் கட்டுரையாளர் நீண்ட ஒரு கட்டுரையில் வீண் விளையாட்டு ஒன்றை விளையாடி நமது நேரத்தை வீணடித்திருக்கிறார் என்பது மட்டும் திண்ணம்.

    ReplyDelete
  15. PMGG யினர் இஸ்ரேலுடன் கூட்டு வைத்தாலும் அதை நடுநிலை என்று நியாயப்படுத்துவார்கள் என்று கட்டுரையாளர் சொன்னதை அப்படியோ உண்மை படுத்தியுள்ளனர் இந்த PMGG ஆதரவாளர்கள்.

    PMGG கட்சி சார்ந்த சிந்தனை உள்ளவர்கள் நடுநிலைமை என்று சொல்வார்கள் மாற்றுகருத்தை பக்குவமாக விமர்சிக்க வேண்டும் என்று மொழுகி பேசுவார்கள் அரசியலில் அவர்களுக்கு லாபம் தேட அடிமட்டம்வரை இரங்கி நடுநிலைமை பக்குவம் என்பதற்கு முதல் எதிரிகளே இவர்கள்தான் என்று கட்டுரையாளர் சொன்னதை அப்படியே உண்மை படுத்தியுள்ளனர் அவர்கள் ஆதரவாளர்கள்.

    கட்டுரையாளர் மாற்று கருத்து உள்ளவர் என்றாலும் அவர் கட்டுரைகள் ஏதோ ஒருவகையில் அரசியல் மாற்று கருத்து மக்களுக்கு சொல்ல வழிவகுக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டியுள்ளது.

    சில வாசகர்கள் குதைபியா உடன்படிக்கையை இந்த தமிழரசு கூட்டணியுடன் ஒப்பிட்டுள்ளது அவர்கள் அரசியல் அறியாமையை எடுத்துகாட்டுகிறது.

    குதைபியா உடன்படிக்கை இரண்டு முரண்பட்ட தரப்பு இரு அணிகளில் இருந்துகொண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்த ஒப்பந்தமாகும்.

    ஆனால் இலங்கையில் நடப்பது அதுவல்ல.மாறாக இஸ்லாமிய எதிரியும் இஸ்லாமிய வாதியாக சொல்பவரும் ஒரே அணியாக நின்று முஸ்லிம் ஓட்டுகளை பிரித்தால துடிக்கும் ஒப்பந்தமாகும்.

    முஸ்லிம்களின் வாக்குகளை பிரிக்கும் தமிழரசு கூட்டணியின் திட்டவரைபுக்கு தஉரம் இட்டு தீனிபோட்டு வளர்த்த வரலாறே PMGG யின் வரலாறு என்பதை முஸ்லிம்கள் அறிந்துவிட்டனர்.

    அரசியல் கட்டுரைகளை தாங்கி வரும் ஜப்னா முஸ்லிமுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  16. முஸ்லிம் வேட்பாளர் நியமனம் இதய சுத்தியானதா?.

    யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட ஒரு வரை மன்னார் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் நிருத்தி இருப்பது பல கேள்விகளை முன்வைக்கின்றது. யாழ்ப்பாண மேட்டுக்குடி வெள்ளாலர் சாதிய வெறிக்கப்பால் தமிழ் தலித்திய குழுக்களுக்கும் இட ஒதிக்கீடு செய்வது என்பது சிம்ம சொப்பனமாகவே அமைந்திருந்தது. 9 தலித்திய குழுக்கள் சுயேட்சையாக தேர்தலில் குதிப்பதனால் தமிழ் வாக்குகள் களைந்து விடும் என்பதற்காக யாழ் முஸ்லிம் பிரதிநிதியை உள்வாங்காமல் விட்டெரிந்தது தேர்தல்களின் பின்னால் எவ்வாறு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் அதன் தனித்துவ செயற்பாடும் தமிழ் குறும்வாதங்களுக்கப்பால் உறுதிப்படுத்தப்படும் என்பது இப்போதே கேள்விக்குறியாகி உள்ளது. மட்டுமில்லாமல் யாழ்ப்பானத்தைப் பொருத்தவரையில் 2139 (0.37%) ஆக காணப்படும் முஸ்லிம்களில் ஏற்கனவே மாற்று அரசியலில் தடம்பதித்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதியையும் மீறி எத்தனை வாக்குகளை முஸ்லிம் பிரதிநிதியால் தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக பெற முடியும் என்ற எதார்த்தங்களுக்குள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக் வாழும் மன்னரில் அவ்வேட்பாளரை நிருத்தி இருப்பது முஸ்லிம் வாக்கு களைப்பிற்கான முன்னேற்பாடா என்ற கேள்வியும் எழுகின்றது. உண்மையில் நல்லிணக்கத்திற்கான அடையாளமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இத்தகைய செயற்பாடு அமையுமாக இருந்தால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு வேற்பாளரை நிருத்தி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

    இது இவ்வாறிருக்க அமையப்போகும் வடமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றை வழங்குவதற்கான எழுத்துமூல உத்தரவாதம் இதுவரை வழங்கப்பட்டதாக தெரியவில்லை. எல்லாம் வாய்மொழி மூல உத்தரவாதமாகவே அமைந்திருக்கின்றது. சிலவேளை முஸ்லிம் பிரதிநிதித்துவம் தேசியப்பட்டியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாள் அது எவ்வாறு சுய அடையாளத்துடன் சுதந்திரமாக செயற்பட முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் கடந்த முறை பாராளுமன்ற தேசியப்பட்டியலில் முஸ்லிம்கள் சார்பில் கூட்டணியில் அங்கம் வகித்த இமாம் அவர்கள் வெரும் சர்வதேசத்திற்கு முஸ்லிம் சமூகம் சார்ந்த ஒரு காட்சிப்பொருளாகவே காணப்பட்டார் என்பது நன்கு தெரிந்தவிடயம். வடபுல முஸ்லிம்களுக்கு எதுவும் செய்ய முடியாதது மாத்திரம் அல்ல தேசிய அரசியலில் முஸ்லிம்கள் சார்பாக எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கூடாக மேற்கொள்ள முடியவில்லை என்பது வெளிப்படை. தொடர்ந்து ஆயுள்கால பிரதிநிதிகளாக சிலரை தொடர்ந்தும் பாராலுமன்றில் அமர்த்திய தேசிய கூட்டமைப்பு இமாமை தூக்கியெரிந்தது வரலாற்றுப்பாடமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.