Header Ads



அரசியல்வாதிகள் தமது அமானிதமான அரசியல் அதிகாரத்தில் பொடுபோக்காக உள்ளனர்

(எஸ்.அஷ்ரப்கான்)

இஸ்லாமிய அடிப்படையில் நோக்கும்போது எமது அரசியல்வாதிகள் தமக்கு வழங்கப்பட்ட அமானிதமான அரசியல் அதிகாரத்தை சரிவர செய்யாமல் பொடுபோக்குத்தனமாக இருப்பதனாலேயே இன்று  மக்கள் தமது தேவைகளை நிறைவேற்ற பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கூறினார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப்சம் சுதீனின் முயற்சியினால் சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் (சீடா) அனுசரனையுடன் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் “வாழ்வின் ஒளி” செயற்திட்டத்தின்கீழ் வாழ்வாதார உதவிகள்
வழங்கும் வைபவம் கல்முனைக்குடி அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை 17.08.2013 மாலை 4 மணிக்கு நடைபெற்றது. அதில் பிரதம் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்            மேலும்      அங்கு    உரையாற்றும்போது,

அரசியல்வாதிகள் எப்போது மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயற்படுகின்றார்களோ அப்போதுதான்  அரசியல்வாதிகளைப்பற்றி அன்பு, மக்கள் மத்தியில் நல்லெண்ணம்  ஏற்படும். இந்த நிலை ஏற்பட மக்களிடம் இருக்கின்ற வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக முஸ்தீபுகளுடன் செயற்பட வேண்டும் என்பதே எனது அரசியலின் பிரவேசமாகும். நான் அதிகாரத்தில் இருக்கும் வரை எனது சக்திக்குட்பட்ட வகையில் மக்களின் தேவையறிந்து சேவையாற்றுவேன். இதற்காக நான் எனது அறிமுக நண்பர்கள், சக அமைப்புக்களிடமும் தேவைகளை முன்வைத்து எமது பிரதேச மக்களுக்காக சேவையாற்றுவேன்.

தேர்தல் காலங்களில் மக்களுக்கு முன் தெரிவிக்கப்பட்ட செயற்திட்டங்கள் வாக்குறுதிகளை அரசியல் அதிகாரங்களினூடாக முன்னெடுத்து சேவை செய்வதே எனது இலக்காகவுள்ளது என்றும் அதற்காகவே 'வாழ்வின் ஒளி' செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்பி அவர்களின் வாழ்வில் எழுச்சியை
ஏற்படுத்துவதற்காக, மக்களின் மனைப் பொருளாதார விருத்திக்கு உதவுதல். தொழிலற்ற இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தொழில் வழி காட்டல், பெண்களிடையே சுய தொழில் முற்சிக்கான ஊக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் உற்பத்திக்குச் சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல். சேமிப்பையும் சிக்கனத்தையும் குடும்பங்களில் ஏற்படுத்த வழிகாட்டுதல் மக்களின் பொருளாதார விருத்திக்கான உதவிகளை உரியவர்களின் உதவி; கொண்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல். போன்ற மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்கான, அவர்கள் வேண்டி நிற்கும் பல்வேறு தேவைகள் கருதி ஒவ்வொரு துறைசார்பான பல முன்மொழிவுகள் மக்கள் முன் என்னால் முன்வைக்கப்பட்டன.

அந்த வகையில், அம்முன்மொழிவுகளை எனக்குள்ள அரசியல் அதிகாரங்களினூடாகவும் தனிப்பட்ட தொடர்புகளினூடாகவும் நிறைவேற்றி வைப்பதற்காக இந்த 'வாழ்வின் ஒளி' வாழ்வாதார உதவிச் செயற்றிட்டம் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது. வாழ்வின் ஒளி வாழ்வாதார உதவித்திட்டத்தினூடாக ஒளிமயமான வாழ்வுக்கான வழியை மக்களுக்கு ஏற்படுத்துவதே  இத்திட்டத்தின் இலக்காகவுமுள்ளது.

தேர்தல் வாக்குகளுக்காக மாத்திரம் மக்களின் காலடிகளுக்குச் சென்று அவர்களின் வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்ற பின் மக்களை மறக்கும் கலாசாரத்தை இப்பிரதேசத்தில் ஒழிக்க வேண்டும். தேர்தலுக்காக மாத்திரம் மக்களை நாடும் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நிலையிலிருந்து மாறி, என்றும் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து முடியாமான வரை இருக்கின்ற அதிகாரங்களினூடாக அவர்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டும்.

அதுதான் நாகரியமான அரசியல் பண்பாகும். அவற்றின் இலட்சியத்தோடு எனது வழிகாட்டலின் பெயரில் எமது அபிவிருத்திக்குழு பிரதேச மக்களின் தேவைகளை உரிய தகவல்களின் ஊடாக அடையாளம் கண்டு, அதன்படி அத்தேவைகளில் எத்தேவைகள் முன்னுரிமையுடையதாகவுள்ளதோ அத்தேவைகளை இறைவன் உதவியுடன் கட்டம்கட்டமாக நிறைவேற்றி வருகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

4 comments:

  1. Dear Eng. Mubarak & LLB Arif,
    உங்கள் சமூக சேவைக்கு வாழ்த்துக்கள். உங்களது சமூக பணியோடு நாங்களும் இணைந்து கொள்கின்றோம். உங்களது தூய எண்ணங்களுக்கு வல்ல அல்லா என்றென்றும் பரகத் செய்வானாக.

    ReplyDelete
  2. உங்கட அதிகாரத்த பொதுபலசேனாவிடம் காட்டுங்கோ நாட்டுல என்னமோ நடக்குது நீர் என்னடான்னா தேங்காய் ,மாங்காய் ,பட்டாணிச் சுண்டல் கதை கதைக்கிறீர் , நல்ல உலகம்டா இது

    ReplyDelete
  3. @ mirshal தேங்காய்,மாங்காய் இல்லாவிட்டாலும் சுண்டல் ஏனும் ஆரிஃப் மூலம் அவருக்கு வாக்களிக்காவிட்டாலும் அவரது முயட்சி மூலம் நமது மக்களுக்கு கிடைப்பதை பாராட்டுவோம்....ஆனால் நம்மை உசுப்பேற்றி வாக்கு பெற்றவர்கள் இன்னும் பதவிகளுடன் அரசின் சொகுசை அனுபவித்து BBS க்கு எதிராக ஒரு வார்த்தை ஏனும் பாராளுமன்றில் பறையாது இருப்பதை என்னவென்று சொல்வது....???

    ReplyDelete
  4. enna sir katha sulluringa ithuwalla mukkiyam enga nadakkinra matha suthanthiraththukku ennaththa ungalala seiya mudinthethue pooooo than kodukka mudium

    ReplyDelete

Powered by Blogger.