Header Ads



அம்பாரை மாவட்ட தமிழ் மொழிமூல அரச அதிகாரிகளின் விபரங்கள் திரட்டல்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள அம்பாரை மாவட்ட தமிழ் மொழி மூல அரச அதிகாரிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன.

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு.மன்னார்.வவுனியா ஆகிய மாவட்டங்களில் உதவித்தெரிவத்தாட்சி அலுவலர்கள் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோத்தர்களாக இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களிருந்து பெற்றுக்கொள்ளப்படும் விபரங்களினடிப்படையில் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து தெரிவு செய்யப்படும் ஒரு தொகுதி  உத்தியோகத்தர்கள் வட மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அம்பாரை மாவட்ட உதவித்தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.