Header Ads



நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு ஒரு போனஸ் ஆசனத்தை யாசகமாக தருவோம் என்றால்..!

(பழுளுல்லாஹ் பர்ஹான்)

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் PMGG நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் முஸ்லிம்கள் சார்ந்த புரிந்துனர்வு ஒப்பந்தத்தை வடக்கு தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் வி.டீ.எம். முபாறக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு தேர்தலுக்கு முன்னர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் சமூகம் சார்பாக ஒரு புரிந்துனர்வு ஒப்பந்தம் செய்யப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறாயின் அவ்வொப்பந்தத்தில் வடக்கு முஸ்லிம்கள் சார்ந்து எவ்வாறான விடயங்கள் உள்ளக்கட்பட்டுள்ளது என்பதை முதலில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். அவ்வொப்பந்தம் வெறுமனே ஒரு போனஸ் ஆசனத்தை பெற்றுக் கொண்டு தங்களது தொழில் வளங்களை பெருக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தமா? அல்லது வடக்கு முஸ்லிம்களின் வாழ்வாதாரம், மீள்குடியேற்றம், மற்றும் பாதுகாப்பு, இன ஒற்றுமைக்கான ஒப்பந்தமா? அல்லது கடந்த காலத்தில் ஹக்கீம் பிரபாகரன் செய்து கொண்டு கிழித்தெரியப்பட்பட்ட  விருந்தோம்பல் ஒப்பந்தமா? என்பதை மக்களுக்கு பகிரங்கப்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும். 

கடந்த 1990ம் ஆண்டு வடக்கு முஸ்லிம்கள் இரவோடு இரவாக உடுத்த உடையுடன் புலிகளால் விரட்டியனுப்பட்ட போது அவர்களை மீள்குடியமர்த்துவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர்கள் கடந்த 2002ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை செய்ததாக தெரிவித்தனர் ஆனால் அவ்வெப்பந்தத்தில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதை வெளிப்படுத்தப்படாமல்  பிரபாகரனால் கிழித்தெரியப்பட்ட வரலாறு இன்னும் மறையவில்லை. அன்றைய புலிகளின் ஊது குழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வரைக்கும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளாததுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீள்குடியமர்த்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளையும் முழுமையாக தடுத்து வருகின்றனர். 

இலங்கையில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் கொள்கையும் நடைமுறையும் இலங்கைக்கு பொறுத்தமற்றது என கூறியதோடு அதனை முழுமையாக விமர்சித்ததுடன் புதிய அரசியல் சித்தாந்தை உருவாக்கி அதன் அடிப்படையில் மக்களை அரசியல் நாகரித்திற்கு கொண்டுவரப் போவதாக கூறி கடந்த 2006ம் ஆண்டு காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் முதலாவதாக சுயேட்சைக் குழுவாக களமிறங்கி ஒரு உறுப்பினரை பெற்றுக் கொண்ட  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அடுத்து வந்த 2011ம் நகர சபைத் தேர்தலில் இரண்டு உறுப்பினர்களை பெற்றுக் கொண்டனர்.

அத்தேர்தலைத் தொடர்ந்து நாங்கள் அரசியல் உச்சக்கட்ட வளர்ச்சியடைந்து விட்டோம் என்றும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மாணிக்கின்ற ஒரு  ஆசனமாக எமது ஆசனம் அமையும் என்ற மமதையோடு கிழக்குமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகிய போது ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கொமும்பிலிருந்து காத்தான்குடிக்கு வருகை தந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்தனர். 

அதனை முற்று முழுதாக நிராகரித்து கட்சியே இல்லாத தங்களது கட்சிக் கொள்கையை கட்சிதமாக கூறி சூரா சபையின் மசூராவை மீறுவது தமது இயக்கக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது என ஐக்கிய தேசியக் கட்சியை வழியனுப்பி வைத்து விட்டு தங்களது நல்லாட்சிக்கான மக்கள் இயக்க  முக்கியஸ்தர்களில் ஒருவரான சூரா சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வழியனுப்பி வைத்த பெருமை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தையே சாரும். 

அத்தோடு நின்று விடாமல் தங்களது வரட்டுக் கௌரவத்திற்காக நல்லாட்சிக்காக மக்கள் இயக்கம் மீண்டும் ஒரு சுயேற்சைக் குழுவாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கி சுமார் 5500 வாக்குகளை சிதரடித்து காத்தான்குடிக்கான ஒரு முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை இல்லாது செய்த பெருமையும் புகழும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தையும் அதன் சூரா சபையின் மசூராவையுமே சாரும்.

அத்தேர்தலில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதியைக் பெற்றுக் கொண்டு முஸ்லிம்களின் வாக்குகளை சிதரடித்து முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை குறைப்பதற்கு திரைமறைவில் தமிழ் தேசியக் கூட்மைப்பிற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் உதவி வருவதாக பல விமர்சனங்கள் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைக்கப்பட்ட போது அதனை அப்போது  நிராகரித்தனர். 

அன்றைய குற்றச் சாட்டை அடியொட்டியதாக நடைபெறப் போகும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மீண்டும் வடக்கு முஸ்லிம்களின் வாக்குகளை மிகத் தந்திரமாக பெற்றுக் கொடுத்து வடக்கு முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தை குறைப்பதோடு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முழுமையாக தடுத்து வரும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை வேட்பாளர் பட்டியலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். 

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கொள்கைகளையும் சூரா சபையின் மசூராவையும் புரம்தள்ளி விட்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் புதிய அரசியல் கொள்ளையை உருவாக்கியுள்ள இவர்கள் எதிர் காலத்தில் சிங்கள பெரும்பான்மை மக்கள் வாழும் மாகாணங்களில் ஒரு போனஸ் ஆசனத்தை யாசகமாக தருவோம் என்று கூறினால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு உறுப்பினர் பொதுபல சோனா இயக்கத்தின் வேட்பாளர் பட்டியலில்;நிறுத்தப்படலாம்  எனவும் அவர் தெரிவித்தார்.

11 comments:

  1. பதில் 01: ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் சகோதரர் வீ.டி.எம்.முபாறக் அவர்களுடைய கருத்துக்களை உள்ளடக்கிய ஆக்கத்தினை வாசிக்க கிடைத்தது. இவ்வாக்கம் முற்றிலும் ஒரு அரசியல் வங்குரோத்து நிலையினைக் குறித்து நிற்கும் ஆக்கம் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கிடையாது.
    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்பது நியாயமான கோரிக்கையாக இருப்பினும் இதுவரைகால முஸ்லிம் அரசியலில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒப்பந்தமாவது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை முதலில் சகோதரர் முபாரக் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன். இறுதியாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ்- மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன மேற்கொண்ட ஒப்பந்தமும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்பதை நினைவில் இருத்துக.
    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வயிற்றுப்பிழைப்புக்கும், பதவிப்போட்டிகளுக்கும் அரசியல் நடாத்தும் இயக்கம் அல்ல என்பது வரலாற்றுரீதியாக நிறுவப்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றது. இதற்கான ஆதாரங்கள் ஏராளம், ஐக்கிய தேசியக் கட்சியும்; நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை விலைக்கு வாங்க முயற்சித்து தோல்விகண்ட பல சந்தர்ப்பங்கள் இருக்கின்ற என்பதை சிலபோது ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை வேட்பாளர்களுள் ஒருவரான நீங்கள் அறியாமலிருக்க நியாயமில்லை.
    பொதுவாக எல்லா முஸ்லிம் அமைப்புகளும் புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படையாகத் தெரிவித்து வந்திருக்கின்றன. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர என்பதை மனதில் இருத்துக, அவனிடம் காசு வாங்கி இவனைக்காட்டிக்கொடுப்பதும், இவனிடம் காசு வாங்கி அவனைக் காட்டிக்கொடுப்பதும் பொதுவாக பெரிய அரசியல் கட்சிகள் என தம்மை அடையாளப்படுத்தும் பிழைப்புவாத அரசியல் கட்சிகளுக்கும், அதன் காவலர்களுக்கும் சொந்தமானவை என்பது நாம் கூறித்தான் தெரியவேண்டும் என்றில்லை, தாங்களும் கூட அவ்வாறான நிகழ்வுகளோடு தொடர்புகொண்டிருக்க முடியும். எனவே பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற கருத்துக்கு ஒப்ப தாங்கள் ஒரு அரசியல் வாதி, தாங்கள் நடந்துவந்த, சுற்றித்திரிகின்ற அதே பாதையில்தான் எல்லோரும் போவார்கள் என்று எண்ணுவது பொறுத்தமற்றது. குறிப்பாக புலிப் பூச்சாண்டி காட்டும் நடைமுறை பழையகாலத்து நடைமுறை என்பதை கருத்தில் கொள்க. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளும் அல்ல; நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஐக்கிய தேசியக் கட்சியும் அல்ல என்ற உண்மையினை புரிந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. பதில் 02: வாக்குகளைப் பிரித்தல் என்ற கருத்தை ஏதோ ஒரு பாரிய சமூகத்துரோகம் போல சித்தரிக்க முனைகின்றீர்கள்! சமூகத்திற்கும் மக்கள் நலனுக்கும் உபயோகப்படாமல் வாக்குகல் தேங்கிக் கிடப்பதை விடவும் அவை பிரிந்து சென்று சமூக மாற்றத்துக்கும் சமூக நலனுக்கும் பங்காற்றுவது போற்றத்தக்கதுவே. சாக்கடை அரசியல் நடாத்துவோர்க்கு, நதிகள் போன்ற சுத்தமான அரசியல் முயற்சிகளைக் காணும்போது பொறுக்காது என்பது உங்கள் விடயத்திலும் யதார்த்தமாகின்றது,
    வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவதால் எவ்வாறு பாதிக்கப்படும் என்று தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும், “வெற்றுவாய்க்கு வெற்றிலை கிடைத்தால் மேலும் கீழும் அழுத்தி அழுத்தி சப்தமிட்டு சாப்பிடுவாராம் வெற்று வெங்கடேசன்” என்று கூறுவார்கள், சும்மா கிடைக்கின்றது என்பதற்காக மெல்ல வேண்டாம் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கடந்த 2009-2013 வரை நான்கு வருடங்களாக படும் அவஸ்த்தையைப் பார்த்தால் இதற்கான முழுமையான காரணங்களையும் நாம் கண்டுகொள்ள முடியும்.
    ஒரு அமைச்சர், இரண்டுஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சில பிரதேச, நகர சபைகள், பல உள்ளூராட்சி பிரதிநிதித்துவங்கள், அரச உயர்மட்ட உத்தியோகத்தர்கள் என வடக்கு முஸ்லிம்கள் ஆளும் தரப்பாக இருக்கின்ற வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் 20% தன்னும் தாண்டவில்லை, குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் 5%இனையாவது எட்டவில்லை. என்ன காரணம் என்று நினைக்கின்றீர்கள். உதவித்திட்டங்கள், அரச உதவிகள் கிடைக்கப்பெறாமை என்று கூறினால் அதுவே மடமைத்தனம். “வடக்கில் தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாடு எட்டப்படவில்லை” என்ற அடிப்படைக் காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது குறித்து பிரிதொரு தருணத்தில் விரிவாக எழுதுகின்றோம்.
    என்னுடைய அறிவுக்கேட்ப நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முன்னெடுப்பானது பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அது முஸ்லிம் சமூக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வங்குரோத்து அரசியல், பிழைப்புவாத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி மிகவிரைவில் வைக்கப்படும். மக்களை உணர்சிவயப்படுத்தி அரசியல் செய்வதை விடவும் மக்களை அறிவூட்டி அரசியல் செய்யும் உன்னத நிலை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையில் தேசமெங்கும் முன்னெடுக்கப்படும். எனவே வங்குரோத்து அரசியலைப் பாதுகாக்க நினைக்கும் தங்களைப் போன்றவர்கள் இது குறித்து தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. very foolish article. no idea what is he trying to explain to the public.....better send him for a treatment...

    ReplyDelete
  4. நல்லாட்சிக்கான இயக்கம் பற்றிய எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாமல் நீங்கள் வெறும் அறிக்கை விட்டிருப்பது மிக கவலையளிக்கின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் கைச்சாத்திடப்படவில்லை. ஒரு சமுகத்தின் பிரச்சினையை கையாளும் போது எப்போதும் வெளிப்படைத் தன்மையினையே Pஆபுபு பேணி வந்திருக்கின்றது. எனவே நிச்சயமாக ஒப்பந்தம் மட்டுமல்ல பத்திரிகையாளர் மாநாடு ஒன்றின் மூலமாகவும் தெளிவு படுத்துவார்கள்

    ReplyDelete
  5. முபாறக் நானா! நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் வேட்பாளர், நீங்கள் வெற்றி பெறமாட்டீர்கள் என்பது உலகறிந்த விஷயம். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் விருப்பு வாக்கு கோரமாட்டார்கள் என்பதும் நாமறிந்த விடயம். எனவே இவர்களை எப்படியாவது ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்த்துவிட்டால் அவர்களின் வாக்குகளையும் சேர்த்து நான் கிழக்குமாகான சபையின் உறுப்பினராக வந்துவிடலாம் என நீங்கள் போட்ட கணக்குப் பிழைத்ததினாலா உங்களுக்கு இவ்வளவு ஆதங்கம்? சமூகத்தின் நன்மையைப் பற்றி மட்டும் யோசியுங்கள் முபாரக் நானா.

    ReplyDelete
  6. முபாறக் காகா, நீங்க யாரு, இவ்வளவு நாளும் எங்க இருந்திங்க.... நீங்க காத்தான்குடிகாக என்ன செய்து இருக்கிங்க... தேர்தல் என்டா மட்டும் தானே உங்கள மாதிரி ஆக்கல பாக்கலாம் ஆனால் இப்ப இந்த அறிக்கயை வரைந்ததன் உள் நோக்கம் என்னவோ..... யால கூட கண்டு பிடிக்க முடியாத தகவல்களை எல்லாம் நீங்க எப்புடி காகா கண்டு பிடிக்கிறிஙக.... கொஞ்ஞம் சொல்லுங்கலன்

    ReplyDelete
  7. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கட்டணம் செலுத்தப்படாத ஒரு விளம்பரமே இது

    ReplyDelete
  8. ஐயா முபாரக்..!

    நீங்கள் ஒரு காத்தான்குடியான்தானே...........? அரசியலில் பழம் திண்டு கொட்டை போட்ட கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் அரசியல் அறிவே இல்லாமல் யார் எந்தக் கட்சி, எந்தக் குழுவின் உறுப்பினர் என்று தெரியமால் கருத்தெழுதும் உங்களைத்தானா மக்கள் பிரதிநிதியாக அனுப்பவேண்டும்......? சிப்லி பாறூக்கிடம் சென்று அவர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினாராக இருந்தாரா என்று கேட்டுப்பாருங்கள். காத்தான்குடியின் சிறு பிள்ளைக்கும் தெரியும் சிப்லி பாறூக்கின் வரலாறு ஆனால் அது உங்களைப் போன்றவர்களுக்கு தெரியாமல் போனதுதான் வேடிக்கையும் வினோதமும்.

    உண்மையில் உங்களைப் பார்த்ததால் பரிதாபமாக இருக்கிறது. கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலின் போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஐக்கிய தேசிய கட்சியுடன் கை கோர்க்கவில்லை என்று ஆதங்கப்படுகின்றீர்களே......! நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஒரு மக்களின் கட்சியாகும். அதன் தீர்மானங்கள், ஓன்றிணைவுகள், உடன்பாடுகள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தே அமையும். உங்களைப் போன்ற அரசியல் வியாபாரிகளைப் போன்று சுயலாபத்திற்காக மக்களை விற்று பிழைப்பு நடத்துவதற்கான உடன்படிக்கையாகவும், ஒன்றியைவாகவும் ஒரு போதும் இருக்காது.

    நல்லாட்கிக்கான மக்கள் இயக்கம் வாக்குகளை பிரிப்பதாக கருதுவதும், விமர்சிப்பதும் பாமரத்தனமானதாகும். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள், நோய்வாய்ப்பட்டிருக்கும் இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு சத்திர சிகிச்சை செய்து அதனை ஒரு இயங்கு நிலைக்கு கொண்டு வருகின்ற முயற்சியாகும். உதாரணமாக, ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியரைப் பார்த்து ஏன் இந்த வைத்தியர் நோயாளியின் கை கால்களை துண்டிக்கிறார், பாகங்களை மாற்றுகிறார் என்று ஏச முடியாது அவ்வாறு சத்திர சிகிச்சையை செய்யவில்லை என்றால் அந்த நோயாளியின் உயிரை காப்பாற்ற முடியாது. அதே போலதான் நோய்வாய்ப்பட்டிருக்கும் முஸ்லிம் அரசியலுக்கு சத்திர சிகிச்சை நடைபெறுகிறது. அதாவது, தேர்தல்களின்போது மக்கள் வழங்கும் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட கட்சிகளின் கீழ் குவிக்கப்பட்டு அது மக்களுக்கு எதுவித பிரயோசனைத்தையும் வழங்காது தனிநபர்ளின் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகின்றது. எனவே, அந்த வாக்குகளை மக்கள் நலன் சார்ந்து பயன்படுத்தும் முயற்சியையே நல்லட்சிக்கான மக்கள் இயக்கம் மேற்கொள்கிறது. இதனைப் பார்த்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வாக்குகளை பிரிக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களை விட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

    ReplyDelete
  9. He takes his revenge through this article

    ReplyDelete
  10. Islam Enral enna enru theriyatha ungalai pol kasukku valattum koottam endra ninaitheerhala.PMGG ALLAVIN OLIYIL VALARUM ORU VIRUTCHAM

    ReplyDelete
  11. Where is PUVI RAHMATHULLAH.........

    ReplyDelete

Powered by Blogger.