Header Ads



கண்கள் தோண்டியெடுக்கப்பட்ட சிறுவன்


சீனாவின் வட மாகாணத்தை சேர்ந்த  shanxi எனும் பிரதேசத்தில் வசிக்கும் Guo என்றழைக்கப்படும்   ஆறு வயதுச்சிறுவன் வீடிற்கு வெளியே விளையாடச்சென்றபோது காணாமல் போனான்.பின்னர்  அவன் இரத்த வெள்ளத்தில் நனைந்த முகத்துடன் கண்டேடுக்கப்பட்டபோது அவனது கண்கள்  பிடுங்கக்ப்பட்டிருந்ததை காண முடிந்தது.

பொலிசாரால் மீட்கப்பட்ட அச்சிறுவன் கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகின்ற போதிலும் அவனுக்கு அவனது பார்வை போய்விட்டதுபற்றி தெரியாது.அவன் ஏன் இன்னும் சூரியன் உதிக்கவில்லை? ஏன் இன்னும் இருட்டாக இருக்கின்றது என்று  அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கின்றானாம்.

மனித உறுப்புகளை விற்பனை செய்யும் ஒரு கும்பலின் வேலையாகவும் இது இருக்கலாம் என்று அந்நாட்டு போலீசார் சந்தேகிப்பதுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிபற்றி உண்மை தகவல் வழங்குபவர்களுக்கு 16000 அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மனதை உருக்குகின்ற இந்த நிகழ்வின் பின்னர் ,சிறுவன் ஏன் இருட்டாக இருக்கின்றது என்று அடிக்கடி கேட்கும் கேள்விக்கு  கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது,அதனால் கட்டுப்போட்டுள்ளார்கள்,அதை அகற்றியவுடன் சரியாகி விடும் என்று பல்வேறு பொய்களை சொல்லி சமாளித்துக்கொண்டிருப்பதாக அவனுடன் வைத்தியசாலையில் உள்ள அவனது மாமா ஒருவர்  செய்தி வளங்கியிருகின்றார்.

தனது வாழ் நாளில் இனி ஒளியே கிடையாது என்று தெரிந்தால் அந்தப்பாலகன்   எவ்வாறு  அதை சமாளிப்பானோ தெரியாது?

No comments

Powered by Blogger.