Header Ads



பாகிஸ்தான் சிறுமிகளை ஆசைக்காட்டி ஷார்ஜாவுக்கு அழைத்து விபச்சாரம்

பாகிஸ்தானில் இருந்து சிறுமிகளை அழைத்து வந்து ஷார்ஜாவில் விபசாரத்தில் ஈடுபடுத்திய பாகிஸ்தான் வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஷார்ஜாவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் பாகிஸ்தான் வாலிபர் ஒருவர் சிறுமிகளை வீட்டில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இதனையடுத்து புகாரில் குறிப்பிட்ட வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டினுள் 13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்ட போலீசார் அவர்கள் அனைவரையும் மீட்டனர்.

சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு வாலிபர், ஷார்ஜாவில் வீட்டு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி, அவர்களை அழைத்துவந்து வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்துஇ மீட்கப்பட்ட சிறுமிகளை பாதுகாப்பு இல்லத்தில் அனுமதித்த போலீசார்இ அவர்களை கடத்தி வந்த பாகிஸ்தான் வாலிபனை கைது செய்துஇ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 comment:

Powered by Blogger.