Header Ads



ஞானசாரரிடம் சென்றே முஸ்லிம்கள் தம் பிள்ளைகளுக்கு உடை தைக்க அளவு கேட்க வேண்டிவரும் - வீடியோ

பொதுபல சேனவிற்கு சவால் விட்டதன் காரணமாக நேற்று விஷமிகளால் தாக்கப்பட்ட மஹியங்கனை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வட்டரக்கே விஜித ஹிமி ஆற்றிய உரையின் வீடியோ காட்சி இத்துடன் உள்ளது.

சுமார் 40 நிமிடங்கள் கொண்ட சிங்கள் மொழியிலான அவ் உரையின்தமிழ் மொழிச் சுருக்கம் கீழே தரப்படுகிறது. ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது. மொழிச் சுருக்கம்,

உலகத்திலுள்ள சகல பெண்களும் அணியக் கூடிய பொருத்தமான ஆடையே பர்தாவாகும். சில சிங்களப் பெண்கள் கட்டை கவுனுடன் வந்து நாற்காலியில் அமர்கின்றனர். அப்போது தமது கையிலுள்ள புத்தகத்hல் உடலின் ஒரு பகுதியை மறைக்கின்றனர். அதனைத் துணித் துண்டால் மறைத்துக் கொண்டால் என்ன?

இலங்கையில் அதிகமாக மாமிசம் உண்ணபவர்கள் பௌத்த சிங்களவர்கள். அவர்கள் கிளி, மைனா, முதல் ஆந்தை மயில், என்றும் பன்றி, கரடி குரங்கு என்று பெயர் குறிப்பிட முடியாத அனைத்தையும் உண்பவர்கள். குறிப்பிட்ட ஒரு சில இறைச்சியை மட்டும் தெரிவு செய்து உண்பவர்களைப் பார்த்து அவர்கள் மாடு கொள்பவர்கள் மிகக் கேவலமான இனம் என்று பிரசாரம் செய்வது நியாயமா?

இன்று அதிகமாக முச்சக்கரவண்டி விபத்திற்குக் காரணம் முச்சக்கரவண்டிச் சாரதிகளில் கண்களில் ஆடைக் குறைப்புப் பெண்கள் தெரிபடுவதனாலாகும். சமய அடிப்படையில் ஒருவர் அணியும் ஆடைக்கு விமரிசனம் செய்யமுடியாது. காவி உடை அணிந்த சிலர் பெண்கள் துஷ்பிரயோகம், களவு போன்ற ஒழுக்கக் கேடுகளில் ஈடுபட்டதை வைத்து அனைத்து பௌத்த குருமாரும்  காவி உடையைக் களையவும் என்று கூறினால் அது நியாயமாகுமா?

மறைந்த அமைச்சர் அஷ்ரப் உடன் பயனம் செய்த போதுதான் நான் கண்டேன் அவர் சிறு நீர்கழிக்க தண்ணீருடன் சென்றார். அன்றுதான் நான் தெரிந்து கொண்டேன் முஸ்லீம்கள் சிறுநீர் கழித்த பின் அதனை சுத்தம் செய்கிறார்கள் என்பதை. நாம் அப்படிச் செய்வதில்லையே. பள்ளிவாயலுக்கு செல்லும் முன் கைகால் கழுவி சுத்தம் செய்கிறீர்கள். எவ்வளவு சுத்மான உங்களைப் பார்த்து அசுத்மானவர்கள் என்று கூறுவது எவ்வளவு பாரதூரமான பொய்?

உலகத்தில் வாழும் எந்த இனமும் தமது அன்றாடக் கடமைகளில் ஒன்றாக இறைவனை வணங்க குறிப்பிட்ட நேரத்தை வழமையாக ஒதுக்குவதில்லை. ஆனால் முஸ்லிம்கள் தினமும் ஐவேளை தமது அன்றாடப் பணிகளில் ஒன்றாக தொழுகைக்கு நேரம் ஒதுக்கி அதனை ககட்டாயமாக நிறைவேற்றி வருகின்றனர்.

போகும் போக்கைப் பார்க்கும் போது ஞானசார தேரரிடம் சென்றே முஸ்லிம்மக்கள் தமது பெண் பிள்ளைகளுக்கு உடை தைக்க அளவு கேட்க வேண்டிவரும். ஏனெனில் அவர்தான் இன்ன விதமாக உடை அணியுங்கள் எனக் கூறுகின்றார்.

மாமஸ்மி எனடபன் பர்தா உடையுடன் நடமாடியதாகக் கூறும் இவர்கள் ஏன் அந்த உடையில் அவனைக் கைது செய்ய வில்லை. இது ஒரு அபாண்டம். முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் வகையில் இன்று அபாண்டங்களும், பலிச்சொல்லும் பரப்பப் படுகின்றன.

அன்று கொடிய யுத்தத்தின் போது யாழ் முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டு விரட்டப்பட்டனர். ஆனால் இன்று என்ன நடந்துள்ளது. மஹியங்கனையில் இருந்த மூன்று குடும்பங்கள் பொதுபல சேனாவின் மஹியங்கனைக் கூட்டத்திற்கு முதல் நாள் கிழக்கு மாகாணத்திற்கு விரட்டப்பட்டனர்.

ராவய பத்தரிகையில் ஒரு எழுத்ததாளர் குறிப்பிட்டிருந்தார் குடித் தொகையைப் பரப்வேண்டும் என்று. இன்று ஒரு பக்கட் பால் மா வாங்க முடியாதவர்கள் எப்படி குழந்தை பெறுவது? மதுப் பாவனை காரணமாக இன்று 60 சத வீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிரிந்து வாழ்கின்றனர். சகல குடும்பங்களிலும் பிரச்சினை. அப்படியாயின் எப்படி அவர்களால் பிள்ளைகளை பெற்று வளர்க்க முடியும்?

ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிக் கவில்லை என்றும் அப்படி நிறூபித நிறூபித்தால் காவி உடையைக் களைவதாகவும் கூறுகிறார். அவர் இப்போது அதைச் செய்துதான் ஆகவேண்டும். ஏனெனில் ஞான சாரதேரர் வெளியிடும் வசனங்கள் வெடிகுண்டை விட பலமானது.

மஹியங்கனைப் பள்ளியில் பன்றிக் கழிவுகள் வீசப்பட்டது. சீனி முகம்மதுக்கு மிளகாய் தூள் வீசப்பட்டது. இதுபோல் இன்னும் பல.

எங்காவது முஸ்லிம் ஒருவர் புதையல் தோண்டி அகப்பட்டுள்ளாரா? ஆனால் ஒரு பூசாரி, இராணுவ வீரன், பொலீஸ் அதிகாரி, பௌத்த குரு, அரசியல் பிரமுகர்கள், பிரதேச சபை அங்கத்தவர் என்றெல்லாம் பட்டியல் நீள்கிறது. புத்தர் சிலையின் தலையை உடைக்கின்றனர். வயிற்றையும், நெஞ்சையும் பிளக்கின்றனர். இதனை முஸ்லீம்களா செய்தார்கள்?

முஸ்லீமகளே நீங்கள் சகல பேதங்களையும் மறந்து ஒன்றிணையுங்கள். அதன் பின் நாம் போராடுவோம். உண்மை வெல்லும். இப்படி நான் கூறுவதால் எனக்குப் பல சவால்கள் வந்துள்ளன. என்னை சிலர் முஹம்மத் விஜித ஹிமி என்று கூடச் சொல்கின்றனர். உனது 'டொங்களை' தரித்துக் கொள் என்று கூடக் கூறியுள்ளனர்.

24 comments:

  1. யா அல்லாஹ் இந்த விஜித ஹிமி தேரருக்கு இன்னுமின்னும் ஹிதாயத்தைக் கொடுத்து நேரான வழியில் செலுத்திடு அல்லாஹ்.

    ReplyDelete
  2. Ya Allah. Guide him to the staright path...

    ReplyDelete
  3. intha urai unmail Namadu musamilukku kidaika seiyavum janaka therarai thaathavaaha thaththedutha musamilluku anupavum

    ReplyDelete
  4. Rrally wondefull speach

    ReplyDelete
  5. He is a human rights well done just say that some of words from our president. From our muslims side full support for you. we need.all the religion in sri lanka. Without fighting. He is the original buddist guru.

    ReplyDelete
  6. This great man during his speech said one most important message that our Muslims community to be one unit for fighting against all evil activities. As a muslims we are requested from none Muslims to get advice" How important of unity "

    ReplyDelete
  7. யா அல்லாஹ் இந்த விஜித தேரருக்கு ஹிதாயத்தை வழங்கி இவர் மூலமாகவே அந்த சிங்கள சமுதாயத்துக்கு நேர்வழியைக் காட்டிடுவாயாக ..... ஆமீன்

    ReplyDelete
  8. Ya Allah
    nee indha manitharukku hidayaththai koduththu nalladiyargalin koottaththil serththu vaippayaga.

    ReplyDelete
  9. இந்த ஜானதேரரின் உரைக்கு நம்முஸ்லிம் சமூகம் நன்றி சொல்ல வேண்டும் காவியுடைக்குள்ளும் பல நல்ல உள்ளங்களும் உண்டு என்பதை இந்த உரை உணர்த்துகின்றது இதை முஸ்லிம் அரசியல் வாதிகள் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    ReplyDelete
  10. கை எடுத்து கும்பிடெ வேண்டியவரே அடிக்கானுகள் அடிக்கவேண்டியவரே பாதுகாக்கானுகள் என்னே ஆட்சிடா ?

    ReplyDelete
  11. He is the real human been we pray Allah to get hithaya he is a GREAT man dominant speech now i realize he is the real mung in srilanka this speech must rich to our president mahinda Rajpaksa AND kothabaya.

    ReplyDelete
  12. யா அல்லாஹ் ஹிதாயத்தைக்கொடு .......

    ReplyDelete
  13. வட்டரகே விஜித ஹிமி தேரர் அவர்களே !முடிந்தால் அல்-குர் ஆனின் சிங்கள மொழி பெயர்ப்பையும் படித்துப் பாருங்கள்.இஸ்லாம் மார்க்கம் மனிதனை புனிதனாக்குகின்றது என்பதை விளங்கிக் கொள்வீர்கள் ! யா அல்லாஹ் இவருக்கு ஹிதாயத்தைக் கொடுப்பாயாக !!!
    K.M.JAMEEL,KM/AL-MINA VIDYALAYA,NINTHAVUR.

    ReplyDelete
  14. Mr. Mohamed Vijitha Himi I respect U & I proud U. Inshaallah Allah Help U. Ples. U Read Holly AL-Quran & Allah hithayath tharuwan. Tharuwanahe....

    ReplyDelete
  15. who wish allah.he was guided true path...lnsa alla allah allah help you.

    ReplyDelete
  16. IVAN ORU POYYAN MAHIYANGANA PALLIWASAL MOODA IVANUM ORU KARANAM THERINDHAWARGALUKKU THERIYUM, UNGAL PECHCHUKKU NANRI NANGAL MUSLIMGAL SILAI WANAKKAM SEIBAVARGALAI NAMBAWE KOODATHU

    ReplyDelete
  17. This Bhikku really deserves respect from all not for supporting Muslims but for his forthright speech. Hats off!
    Rahmathullah

    ReplyDelete
  18. yah allah ivarukku hithyathai koduppaya ammeen

    ReplyDelete
  19. அடடா நம்ம சகோதர சகோதரிகள் தன்னை மறந்து பிரார்த்திக்கின்றார்கள், சந்தோசம் ஆனால், பால் எது கள் எது என்று உமக்கு வித்தியாசம் தெரியுமா? யார் எதைச்சொன்னாலும் அதை அப்படியே நம்புவது அடிமுட்டாள்தனம். இந்த தேரர் விடயத்தைச்சொல்லவில்ல உங்கள் நிலைப்பாட்டைச்சொல்கின்றேன். எல்லா வகையிலும் சற்று யோசித்து முடிவெடுங்கள் சகோதரங்களே, ஏனென்றால நாள இதே மனிதர் வேறு விதமாக பேசினால் நமக்கு திடீரென பல்டி அடிக்க முடியாமல் போய்விடும்.

    ReplyDelete
  20. he is the one who worried abobut muslim umma thanks a lot

    ReplyDelete
  21. சின்ன வயசில முஸ்லம் ஆக்கல்ட்ட நல்லாவவாங்ககி கட்டிக்கார் ேபால அதான் ஞாண தங்கத்துக்கு ேகாபம்

    ReplyDelete

Powered by Blogger.