இணையத்தளங்கள் என்னை மிக மோசமாக விமர்சிக்கின்றன - ஜனாதிபதி மஹிந்த கவலை
(அஸ்-ஸாதிக்)
எனது ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறுபவர்கள் ஜனநாயக வழியில் குரலெழுப்பும் சூழ்நிலை நாட்டில் காணப்படுகின்றது. இணையத்தளங்கள் என்னை மிக மோசமாக விமர்சிக்கின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
கம்பளை தொலுவையில் பிரதமர் டி.எம். ஜயரட்ணவின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை 19.08.2013 நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய மாகாண தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
2005 ஆம் ஆண்டு நாம் அரசாங்கத்தை பொறுப்பெடுத்த போது நாட்டில் ஒவ்வொரு கிராமங்களும் இராணுவ வீரர்களின் மரணங்கள் சம்பவிக்கும் கிராமங்களாக இருந்தன. கடந்த முப்பது வருட யுத்தத்தில் கொலை செய்தவர்களும் கொலையுண்டவர்களும் இளைஞர்களாவர். பயங்கரவாதத்தை முன்னெடுத்த தலைவரை பின்பற்றி பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் ஆயுதங்களை ஏந்தி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் மூலம் நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்தனர். அத்துடன் புனித பௌத்த மதஸ்தலங்களான தலதா மாளிகை ஸ்ரீமா மகா போதி உட்பட பல இடங்களில் குண்டுகள் வெடித்தன.
எமது மக்களுக்கு பதினான்கு நாட்கள் மட்டும் ஞாபக சக்தி உண்டு என்று பிரபாகரன் நம்பினார். ஆனால் இன்று எமது மக்கள் சகல விடயங்களையும் புரிந்து கொள்ளக்கூடிய அறிவைப் பெற்றுள்ளனர்.
நாடு எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச சவால்களை எதிகொள்ளவேண்டி ஏற்படும் போது அவற்றை எதிர்கொள்ள படித்த அரசியல்வாதிகள் அவசியம். எனவே நாடு எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்காக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு எதுவித போட்டியும் இல்லை. எனவே இத்தேர்தலில் முதலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். .

Impossible UPFA will never win wait and see.
ReplyDeleteபுளித்துப்போன கதை .
ReplyDelete