முஸ்லிம்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது..!
(Abdul Jabbar Thanees)
முப்பது வருடகால பயங்கரவாதத்திற்குள் சிக்குண்டிருந்த எமது நாட்டை அதிலிருந்து மீட்கப்பட்டு தற்பொழுது ஐக்கிய இலங்கை என்று கூறப்படுகின்றது. ஆனால் இன்று இக்கூற்றிற்கு எதிர்மறையான வாழ்வியலுக்குள் சிறு பான்மை மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
இக்கால கட்டத்தில் உலகிலே சுமார் 87 தேசிய இனங்கள் தமது சுய நிர்னய உரிமைக்காக போராடுகின்றனர். ஒவ்வொரு ஆதிக்க அரசும் தமக்கு எதிரான போராட்டங்களை பயங்கரவாதம் என முத்திரை குத்துவதே புதிய உலக ஒழுங்காகி போய்விட்டது.
எனவே இப்படியான வாழ்வியலுக்கு மத்தியில் யார் உண்மையான பயங்கரவாதி என்பதனை இனம் கான வேண்டிய தேவை பொதுமக்களாகிய எமக்கிருக்கின்றது. அந்தவகையில் பயங்கரவாதத்தை நாம் இரண்டு வகையாக பிரித்து ஆராய்வதன் மூலம் யார் பயங்கரவாதிகள் என்பதனை அறிந்து கொள்ளமுடியும். இதனை தொடர்ந்து முதலாவதாக வன் பயங்கரவாதம் அடுத்தபடியாக மென் பயங்கரவாதம் என இரண்டாக பிரிக்கப்படுகின்றது இதில்
வன் பயங்கரவாதம்
வன் பயங்கரவாதம் குண்டு வெடிப்புஇ துப்பாக்கிச் சூடுஇ விமானம் கடத்தல் போன்ற செயல் வடிவமாக வெளிப்படுகிறது. இதன் பாதிப்பை அனைவரும் அறிய இயலும். இது ஆயுதங்களைக் கொண்டு செயல் படுத்தப்படுகின்றது.
மென் பயங்கரவாதம்
மென் பயங்கரவாதம் அதிகார மீறல், ஊழல், பாகுபடுத்தல், ஒரு சார்பாய் நடத்தல், மதம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றைத் தாக்குதல் பொருளாதார அழிவுகளை ஏற்படுத்தல் போன்ற செயல் வடிவமாக வெளிப்படுகிறது. இதன் பாதிப்புகள் வெளிப்படையாக தெரியாது இது பணம், அதிகாரம், பதவி, ஆசை எனும் கருவி கொண்டு ஆயுதங்களின் துணையுடனோ அல்லது துணையின்றியோ செயல் படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வன் பயங்கரவாதமும், தீவிரவாதமும் மென் பயங்கரவாத்தினுடைய குழந்தைகள் என மிகசுறுக்கமாக கூறப்படுகின்றது.
இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் தங்களால் தாங்கும் நிலைக்கு பொறுத்துப் போகின்றன. பொறுமை காப்பதனால் பலன் இல்லை எனும் நிலையில் அனைத்து உயிரினங்களுமே போராட துணிகின்றன. ஏனெனில் அவை போராடாவிட்டால் வாழ்கை என்பதே இல்லாது உணரப்படுகிறது. சமத்துவமின்மை நிலவும் போது இது பயங்கரவாதமாகவோ அல்லது தீவிரவாதமாகவோ வெளிப்படுகிறது.
எனவே எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் இலங்கையை ஆட்சி செய்த அனைத்து தலைவர்களும் மென் பயங்கரவாதத்தின் ஊடாகவே தங்கள் பதவிகளை காத்து கொண்டனர். ஆனால் இன்று ஆண்டு கொண்டிருக்கின்ற தலைவர் கூட மேற்படி வரலாற்றிற்கு மாறுபட்டவர் இல்லை என்பதனை இன்று சிறுபான்மை மக்கள் மீது தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற வன்முறைகள் சான்றுபகிருகின்றன. எனவே என் அன்பான மக்களே யார் உண்மையான பயங்கரவாதிகள்; என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்வியலுக்கான அனைத்து அடிப்படை உரிமைகளும் மீறப்படுகின்றன. ஆனால் எந்த விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு பெறமுடியாத மானங்கெட்ட சமூகமாக வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இதற்கான காரணம்தான் என்ன..?
இன்று முஸ்லிம் மக்களின் தலைவர்களாக இருப்பவர்கள் மேற் கூறப்பட்டிருக்கின்ற இரண்டுவகையான பயங்கரவாதங்களுக்கப்பால் ஒரு படி உயர்ந்த சுயநல பயங்கரவாதிகளும்இ இரட்டை வேட நடிகர்களும் ஆவார்கள். எம் சமுகத்தின் வாழ்வியலுக்கான உரிமைகள் மீறப்படுகின்ற போது இவர்கள் அபிவிருத்தி அபிவிருததி; என்று கூறி இனவாதிகளின் அத்து மீறல்களை மூடி மறைத்து மக்களை திசை திருப்பி அடிமைப்படுத்துகின்ற மாபெரும் துரோகிகளே இன்றய தலைவர்கள் என்பதனை எம் சமுகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அபிவிருத்தி என்று கூறும் போது
நாட்டில் அடிப்படை, அத்தியவசியப் பொருட்களின் விலை புலி வேகத்தில் பாய்ந்து செல்கிறது ஆனால் தனி நபர் வருமானம் ஆமை வேகத்தில் இழுகிக் கொண்டிருக்கின்றது. நாளைய நாள் பற்றி சிந்திப்பதற்கு கூட எமது மக்கள் நாதியற்று கிடக்கின்ற இக்கால கட்டத்தில் இவர்களால் அபிவிருத்தி என்ற போர்வையில் கூறப்படுகின்ற கல்முனை வெளிசச்ம் இன்னும் இதர வெளிச்சங்கள் யாவும் ஒரு மெழுகுவர்தியின் வெளிச்சம் என்பதனை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இன்னும் எம்சமுகம் சிந்திப்பதற்காக வேண்டி ஓர் ஒப்பீடு
இலங்கை வாழ் சிறுபான்மை தமிழர்களுக்கு இருந்த இருக்கின்ற பிரச்சினை உயிர் பிரச்சினைகள் ஆகும் ஆனால் தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட பின்னர் சுயநலம், சுகவாழ்வுக்காக வேண்டி எந்தக்கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்ததில்லை. மாறாக மானமுள்ள, ஞானமுள்ள, வீரமுள்ள, சமுதாய தோழனாகவும் வர்ழ்வதற்கான ஆழ்வதற்கான உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடனும் தனிக்கட்சியாக நின்று போராடிக் கொண்டே இருக்கின்றார்கள். இதனால்தான் இன்று உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றது என்பதனை யாவரும் அறிந்த உண்மையாகும். அடுத்தபடியாக இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினை உரிமை பிரச்சினைகள் ஆகும் ஆனால் முஸ்லிம் மக்களின் பிரதான கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்போடு ஒப்பிட்டு பாருங்கள் பிரிவதையும் பின் இணைவதையும் தவிற அவர்கள் வேறெதையும் சாதித்ததில்லை என்பதனை முஸ்லிம்கள் பொறுப்புடன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் மக்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது.
முஸ்லிம்களே தன்மானமுள்ள சமுகமாக வாழ நீங்கள் தயாரா??
பதவியை சுகமாக நினைத்து வாழ்பவன் தலைவன் அல்ல சுமையாக நினைத்து உழைப்பவன்தான் தலைவன் இதனை உணர்ந்து செயற்படாத துரோகிகளை அடித்து விரட்டுவதற்கு நீங்கள் தயாரா?
நான் யானைக்காரன், குதிரைக்காரன் என்று கூறி மிருகங்களாக வாழ்வதா? அல்லது மனிதனாக மீழ்வதா?
எழும்புத் துண்டுகளுக்காக போதை பொருட்களுக்காக வேண்டி இன்னும் நாம் கோதுமை கரைத்த சட்டிகளுடனும், சுவரொட்டிகளுடனும் மேய்ந்து கொண்டிருப்பதா? அல்லது உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக எமது மண்ணிற்கும் இந்த மண்ணில் வாழுகின்ற சமுதாயத்திற்கும் ஏற்படுகின்ற பிரச்சினைகளை உடைத்து எரியக்கூடிய அகிம்சை படை வீரனாக நாங்கள் மீழ்வதா??
என் அன்பான உறவுகளே விடியாத பொழுது என்று ஒன்றில்லை நாளை முடிவாகும் எமது ஊர் தொல்லை தடையாக இங்கு எவர் வந்தாலும் அகிம்சை படையாக நாம் நின்று போராடுவோம் ஒன்று பட்டு வாருங்கள்.

that is real
ReplyDelete