Header Ads



ஜம்மியத்துல் உலமா சபையை திட்டுபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்..!

(ஜெம்ஸித் அஸீஸ்)

ஷவ்வால் பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (அ.இ.ஜ.உ.) எடுத்த தீர்மானம், அ.இ.ஜ.உ.வின் கிண்ணியா கிளை எடுத்த தீர்மானம் பற்றியெல்லாம் சகலரும் அறிந்ததே.

இவ் இரு தீர்மானங்களும் நாட்டின் பல பாகங்களிலும் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு வகை தெளிவின்மையை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதனால் இன்று பலர் நோன்பு நோற்றிருக்கின்றார்கள்ளூ இன்னும் பலர் பெருநாள் கொண்டாடுகின்றார்கள்ளூ மற்றும் பலர் இன்று நோன்பு நோற்காது இருந்து விட்டு நாளை பெருநாள் கொண்டாடுவோம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.

இம்மூன்று நிலைப்பாடகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும் எனப் பிரார்த்தித்தவனாக இவ்விவகாரம் தொடர்பாக எனது தனிப்பட்ட சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன், இன்ஷா அல்லாஹ். 

இலங்கை வாழ் முஸ்லிம்கள் வௌ;வேறு இஸ்லாமிய இயக்கப் பின்னணியில் இருந்தாலும் இஸ்லாமிய இயக்க சிந்தனை இல்லாவிட்டாலும் தமது மார்க்க விடயங்களிலும் மற்றும் சில விடயங்களிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுகளுக்கே கட்டுபட்பட்டு நடக்கின்றார்கள். கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாஎடுக்கம் தீர்மானங்களை பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்ளூ அதன்படி செயலாற்றி வருகிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் சமூகத்திற்கு கூட்டுத் தலைமைத்துவம் வழங்குகின்ற ஓர் அமைப்பும்கூட.

அந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இறுதி முடிவை ஏற்றுக் கொண்டு தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு நடப்பது சிறந்தது. இது அ.இ.ஜ.உலமா பிறைக்குழு பிரதிநிதி ஒருவரது தன்னிச்சையான முடிவுமல்ல. இது அ.இ.ஜ.உலமா ஷுராவின் தீர்மானம். இஜ்திஹாத் அடிப்படையில் இத்தீர்மானம் எட்டப்பட்டிருக்கும். இவ்விடயத்தில் அ.இ.ஜ.உலமா தவறான ஒரு முடிவை எடுத்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடம் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடமை அவர்களைச் சாரும்.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கள், அ.இ.ஜ.உலமா பிரதிநிதிகளை தனிப்பட்ட ரீதியில் ஏசுபவர்கள், திட்டுபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்.

ஆனாலும் பிறை விவகாரம் தொடர்பில் ஒரு சில நியாயமான கேள்விகள் பலராலும் எழுப்பப்படுகின்றமை கவனத்துக்குரியது. 

இஸ்லாமிய வானவியல் அறிஞர்களின் ஆய்வு முடிவை நம்பிய, ஏற்றுக் கொண்ட அ.இ.ஜ.உலமாவினால் நாட்டில் பிறையைக் வெற்றுக் கண்களால் கண்டதாகக் கூறும் நல்லவர்களின், நம்பிக்கையானவர்களின், மார்க்கப்பற்றுள்ளவர்களின் கூற்றை நம்ப முடியாமற் போனது ஏன்?

இஸ்லாமிய வானவியல் அறிஞர்களின் ஆய்வு முடிவின்படி நேற்று குறித்த நேரத்தில் தலைப்பிறை வெற்றுக் கண்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றிருந்தால் பிறைக் குழு கூடியது ஏன்?

கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வேண்டுகோளையும் மீறி கிண்ணியா பகுதியில் இன்றை தினத்தை பெருநாள் தினமாக அறிவித்தது ஏன்?

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறை விவகாரத்தில் வானவியல் ஆய்வை 100 வீதம் நம்புகிறதா? அப்படியாயின் வெற்றுக் கண்களால் காண்பது என்பதன் அர்த்தம் என்ன?

ஆகிய கேள்விகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பதிலளித்து அல்லது பிறைத் தீர்மானத் எடுத்ததற்கான நியாயத்தை முன்வைத்து இலங்கைவாழ் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கு தீர்வு சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

இல்லாதபோது பலரும் பல கருத்துக்களைச் சொல்லி முஸ்லிம் சமூகத்துக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கலாம். அல்லாஹ் காப்பாற்றுவானாக! 

21 comments:

  1. Best comment I ever read. Hats off to you brother.....

    ReplyDelete
  2. Masahallah Sheikh Rizvi mufthi மிகவும் அழகாகவும் தெளிவாகவும் நோன்பு பிறை பற்றிய விளக்கம் தெளிவுப்படுத்தினார்,இதையும் மீறி ஒருவர் கருத்து தெரிவிப்பரானர் அது அவரின் சொந்த முட்டாள் தனமான கருத்து தான்.
    இன்ஷா அல்லாஹ் இலங்கை வாழ் முஸ்லிம் சகோதர்களுக்கு நாளை வரும் பெருநாள் Eid Mubarak வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. Please reply to the questions by jammiathul ullama

    ReplyDelete
  4. neenga allakku payandu mudiyukal eduththirundal engalthu eththenayo urimaikal paathukaakappttrikum.enna allahwa solli payankkatta pakkiringala.ungada kavarchiyana pechchala appawi makkala emaththitinga.

    ReplyDelete
  5. அல்லாஹ்வை அஞ்சியவர்களாக அ.இ.ஜ.உ. வும் பிறைக்குழுவும் தீர்மானம் எடுக்கவில்லை என்பது அவர்கள் முன்வைக்கும் தெளிவுரைகளே சான்று பகர்கின்றன.

    பிறை கண்டதாக அறிவித்த முஸ்லிம்களின் நம்பகத்தன்மையை அவர்கள் மறுக்கவில்லை.
    அந்தச் சாட்சிகளை ஏற்காது விட்டது நபிவழிக்கு மாற்றம்.

    நியாயப்படுத்தும் உரையில் அ.இ.ஜ.உ.வின் தலைவர் இப்னு தைமிய்யாவின் ஃபத்வா ஒன்றைக் காட்டி இவர்களின் தீர்மானம் சரி என்று முழங்கினார். ஒருவர் அல்லது பலர் பிறை கண்டதாகச் சாட்சியம் சொன்னால் அவர்களைத்தான் அந்தப்பிறை கட்டுப்படுத்தும் மற்றவர்களைக் கட்டுப்படுத்தாது என்றுதான் அவ்விமாம் ஃபத்வா கொடுத்ததாகச் சொல்லி அந்த அடிப்படையில் தீர்மானித்ததாகச் சொன்னார்.

    நபிவழியைப் பற்றி இவர்கள் ஒரு துட்டுக்கும் கணக்கெடுக்கவில்லை. இவர்கள் நபியைப் பின்பற்றுகிறார்களா அல்லது பிறை விடயத்தில் மட்டும் இப்னு தைமிய்யாவைப் பின்பற்றுகிறார்களா?

    மல சலம் கழிப்பது சம்பந்தமாகவும் ஒரு வழிமுறையைக் காட்டித்தந்த நபி (ஸல்) அவர்கள் பிறை விடயத்தில் இப்னு தைமிய்யாவைப் பின்பற்றுங்கள் என்று சொன்னாகளா?

    ஆம்,,, தகுதியில்லாதவர்களேல்லாம் தலைவர்களானால் இப்படித்தான் நபி (ஸல்) அவர்களிலும் குறை காண்பார்கள்.

    அக்கூட்டத்திலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக.

    வழிகேட்டைப் போதிக்கும் எவராயிருந்தாலும் அவரின் அந்த வழிகேடு விமர்சிக்கப்பட வேண்டும். ஏனென்றால், இஸ்லாம் அ.இ.ஜ.உ. சொத்தல்ல உரிமம் (Copy Right) கோருவதற்கு.

    ReplyDelete
  6. When ACJU heard moon vision news of Kinniya it should have assembled again and retrieved it decision, because this a matter of Deen and Ibadhdth

    ReplyDelete
  7. மதிப்புக்குரிய றிஸ்விமுப்தி அவர்களே
    உங்கள் வானொலிப் உரையை முழுமையாகக் கேட்டேன். அதில் சில கேள்விகள் என்னுள் எழுந்தன
    1.இது ஒரு தீ10ர்க்கமான முடிவை வேண்டி நிற்கின்ற விடயம் அவ்வாறிருக்க,
    'நாம் அவர்களுக்கு 2 மணி நேரம் கொடுத்தோம்....ஸஹர்வரையும் இழுத்துக் கொண்டு இருக்கமுடியாது' என்கிறீ10ர்கள்.
    கஸ்ரத் அவர்களே ஒரு எரியும் பிரச்சினை தொடர்பில் நீங்க்ள் கொடுத்த 2 மணிநேரம் போதுமா? இதற்கு முன்பு ஜ. உ. சபை ஸஹர் நேரத்தில் பெருநாளை அறிவித்த வரலாறு உண்டே!!!!!!!!!!!!?
    2.முஸ்லிம்வானியல் அறிஞர்கள் மூலம் குறித்த7.8.2013 ல் வெற்றுக்கண்ணுக்கு பிறை தெரியவராது என்று தெரிந்ததன் பின்பும் எதற்காக தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டு 'பிறை தெரிகிறதா பாருங்கள'; எனக் கேட்டீர்கள்?
    3.புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரை 8.8.2013ல்(பிறை கண்டு) பெரு நாள் கொண்டாடியிருக்க கிண்ணியாவை மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது ஏன்
    4.கிண்ணியாவில் பிறைகண்ட மௌலவியை கொழும்புக்கு அழைத்து அல்லது நீ10ங்கள் கிண்ணியா சென்று உங்கள் இருவருக்கிடையிலான உரையாடலை வானொலியில் ஒலிபரப்பாக்கியிருக்கலாமே.
    அதாவது நீங்கள் மாத்திரம் வானொலிவாய்ப்பை பெற்று கிண்ணியா உலமாவையும் ஊரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிய அதே நேரம் மாற்றுக்கருத்தை , தனது நிலைப்பாட்டை கூற அந்த உலமாவுக்கு நீங்கள் வாய்ப்புக் கொடுக்கவில்லையே
    நாட்டு மக்கள் அவரது வாயாலும் கருத்தைக்கேட்க மக்களுகக்கு வாய்ப்பைக் கொடுத்.திருக்கலாமே எ...இஸட் நீங்களே குற்றம் சாட்டி, விசாரித்து, தீ10ர்ப்பும் கொடுத்தவிட்டீர்களே. குற்றவாளி? என்னதான் சொல்கிறார் கேட்போமே...மொத்தத்தில் மக்களுக்கு ஒருவழித்தகவலும் தீ10ர்ப்பும் தானே வழங்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  8. Dear friend, what Islam says is " pirai parthu nonbu pidiyungal, pirai parthu nonbu vidungal". According to this, if you see the moon , you can simply celebrate Eid. That's all and very simple. Islam is a simple way of life. Why, these stupid so called people who call them they are the sole representatives of Sri Lankan, (nowadays Muslims have lost the faith on these people at all) living Muslims, cannot make a simple decision, even after seeing the moon. If they don't follow what Islam says, no Muslims have to follow their decisions. Its very simple as that.

    ReplyDelete
  9. If the sighting of the moon was correct in Srilanka, it would have been easier to sight the moon in other countries, located west.
    Now we can use advanced equipment to see the moon even at day light, such an observation has revealed that the phase of the moon was not enough to be sighted even by a powerful telescope.
    Read the report on the following link for observation done by the astronomer mohammed odeh in Jordan on 7th evening.

    http://icoproject.org/icop/shw34.html

    in this case its very certain that the visible moon was not there anywhere in the island on 7th after sunset.

    His observation is not a CALCULATION, he could capture the image of the moon through out the day until after sunset.

    Razeen

    ReplyDelete
  10. naangal arintha kaalathil irunthu pirai parpathu kinya or muthuur endru thaan kelvipattu erukkinroam. sontha pondatiyai santhehapaduramathirithan kinya,muthur matkalin karuthukali puramthalli meman samuhathai paarati acju thalaiwar peasiyullar. tamil samuhathai valinadathuroam enru oru koottam alivukku kondu poanamathiri muslim samuhathai alivukku kondu poai veduvarhaloo endru payamaha ullathu. padippu arappadippaha aahaamal erunthal sari.

    ReplyDelete
  11. naangal arintha kaalathil irunthu pirai parpathu kinya or muthuur endru thaan kelvipattu erukkinroam. sontha pondatiyai santhehapaduramathirithan kinya,muthur matkalin karuthukali puramthalli meman samuhathai paarati acju thalaiwar peasiyullar. tamil samuhathai valinadathuroam enru oru koottam alivukku kondu poanamathiri muslim samuhathai alivukku kondu poai veduvarhaloo endru payamaha ullathu. padippu arappadippaha aahaamal erunthal sari.

    ReplyDelete
  12. மதிப்புக்குரிய றிஸ்விமுப்தி அவர்களே
    உங்கள் வானொலிப் உரையை முழுமையாகக் கேட்டேன். அதில் சில கேள்விகள் என்னுள் எழுந்தன
    1.இது ஒரு தீ10ர்க்கமான முடிவை வேண்டி நிற்கின்ற விடயம் அவ்வாறிருக்க,
    'நாம் அவர்களுக்கு 2 மணி நேரம் கொடுத்தோம்....ஸஹர்வரையும் இழுத்துக் கொண்டு இருக்கமுடியாது' என்கிறீ10ர்கள்.
    கஸ்ரத் அவர்களே ஒரு எரியும் பிரச்சினை தொடர்பில் நீங்க்ள் கொடுத்த 2 மணிநேரம் போதுமா? இதற்கு முன்பு ஜ. உ. சபை ஸஹர் நேரத்தில் பெருநாளை அறிவித்த வரலாறு உண்டே!!!!!!!!!!!!?
    2.முஸ்லிம்வானியல் அறிஞர்கள் மூலம் குறித்த7.8.2013 ல் வெற்றுக்கண்ணுக்கு பிறை தெரியவராது என்று தெரிந்ததன் பின்பும் எதற்காக தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டு 'பிறை தெரிகிறதா பாருங்கள'; எனக் கேட்டீர்கள்?
    3.புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரை 8.8.2013ல்(பிறை கண்டு) பெரு நாள் கொண்டாடியிருக்க கிண்ணியாவை மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது ஏன்
    4.கிண்ணியாவில் பிறைகண்ட மௌலவியை கொழும்புக்கு அழைத்து அல்லது நீ10ங்கள் கிண்ணியா சென்று உங்கள் இருவருக்கிடையிலான உரையாடலை வானொலியில் ஒலிபரப்பாக்கியிருக்கலாமே.
    அதாவது நீங்கள் மாத்திரம் வானொலிவாய்ப்பை பெற்று கிண்ணியா உலமாவையும் ஊரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிய அதே நேரம் மாற்றுக்கருத்தை , தனது நிலைப்பாட்டை கூற அந்த உலமாவுக்கு நீங்கள் வாய்ப்புக் கொடுக்கவில்லையே
    நாட்டு மக்கள் அவரது வாயாலும் கருத்தைக்கேட்க மக்களுகக்கு வாய்ப்பைக் கொடுத்.திருக்கலாமே எ...இஸட் நீங்களே குற்றம் சாட்டி, விசாரித்து, தீ10ர்ப்பும் கொடுத்தவிட்டீர்களே. குற்றவாளி? என்னதான் சொல்கிறார் கேட்போமே...மொத்தத்தில் மக்களுக்கு ஒருவழித்தகவலும் தீ10ர்ப்பும் தானே வழங்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  13. ஜம்சித் அசீஸ், மிக மிக ஆரோக்கியமான கேள்வி. இதற்கு ஜம்யத்துல் உலமா கட்டாயம் பதில் கூறியே ஆக வேண்டும். அப்படி தவறும் பட்டசத்தில் பெரும் பான்மையான முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டி வரும் என்பது எனது பணிவான கருத்தாகும்.

    ReplyDelete
  14. why can't believe i witnessed? i thing this is against to shillalah alaihi wasallam. kannal kanpathu poyyah?

    ReplyDelete
  15. that the jamiathul Ulama is one of controversial setup they always act as stooge of politician and act without any responsibility because of their involvement of the political activity(visiting UNO, HALAL certification process without government permission) now muslims are under attack. now deciding a eid day also controversial. Niyas Moulavi gone behind the politician and behaved on the high street and uttered the nonsense loudly to back the politician. these are bad example.

    ReplyDelete
  16. ஷெய்க் றிஸ்வி முப்தியின் விளக்கவுரையிலிருந்து சில கேள்விகள்!!!!!!!!

    1. நாட்டில் பல பாகங்களிலும் ஜம்இய்யதுல் உலமாசபை கிளை நிறுவனங்களையும், சுமார் 10,000 உலமாக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அவருக்கு ஜம்இய்யதுல் உலமா கிண்ணியாக் கிளையின் தற்போதய தலைவர் யாரென தெரியாது போனது ஏன்?

    2. கொழும்பில் வெற்றுக் கண்ணால் பிறையைக் கண்ட ஒருவரின் சாட்சியத்தின்படி நோன்பு நோட்கும் தீர்மானத்தை எடுத்த இவருக்கு கிண்ணியாவில் 10 உலமா உட்பட வெற்றுக்கண்ணால் பிறையைக்கண்ட தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது போனதேன்?

    3. மூதூர், கிண்ணியா மக்கள் சுனாமி மற்றும் அனர்த்தங்களின்போது பெற்ற நிவாரணப் பொருட்களுக்காக கண்ட பிறையை இல்லை என்று சொல்வதற்கு ஷரீஆ வழிமுறையில் ஆதாரங்கள் உண்டா?

    4. சுமார் 80,000 முஸ்லீம் சனத்தொகையைக் கொண்ட கிண்ணியாவின் பிரதிநிதிகளாக தங்களின் ஜம்இய்யதுல் உலமா கிண்ணியாக் கிளையை இவர் கருதுகின்றாரா? அல்லது கொழும்பின் மேமன் சங்கத்தைச் சேர்ந்த (எங்களுக்கு பாஷை புரியாத) அந்த இருவரையும் பிரதிநிதியாகக் கருதுகின்றாரா?

    5. பிறை கண்டவர்கள் மாத்திரம் நோன்பை விடுவதற்கும் பெருநாள் கொண்டாடுவதற்கும் ஷரீஆ வழிமுறை இருக்கும்போது தொடர்புச் சாதனங்கள் வளர்ச்சியடைந்த நவீன உலகில் பிறை கண்டமையை அதனூடாக உறுதிப்படுத்திக்கொண்டு நோன்பை விட்டவர்கள் பெருநாள் கொண்டாடியவர்கள் எந்த வகையில் பாவிகளாக மாறுவார்கள்?

    6. வானியல் ஆய்வாளர்களின் முடிவின் பிரகாரம் நோன்பு 29 இல் பிறை தென்படும் சாத்தியம் இல்லையென முன்னரே அறிந்துகொண்ட நீங்கள் இந்நாட்டு முஸ்லீம்களை பிறைபார்க்கச்சொன்னதேன்? உங்களின் அருள்பாளிக்கப்பட்ட மேமன் சங்க உறுப்பினர்களை அனுப்பியதேன்?

    7. வருடாந்தம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுக்கு மாற்றமாக பெருநாட்களைக் கொண்டாடிவரும் தௌஹீத் ஜமாஅத்தினர் தரீக்கா சகோதரர்கள் தொடர்பில் இதுகாலவரை எவ்வித பத்வாக்களையும் வழங்காத நீங்கள் கிண்ணியா மக்கள் தொடர்பில் மாத்திரம் பாவிகள் பத்வா வழங்குவதற்கு காரணமென்ன?

    8. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிருவாக உறுப்பினர்கள் பலர் நோன்பு நோற்காது விட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் பெருநாள் கொண்டாடி இருக்கின்றனர். இந்நிலையில் ஜம்இய்யாவின் மசூறாவின் நிலை என்ன? தலைமைத்துவக் கட்டுப்பாட்டின் நிலை என்ன? உங்களது உரை தன்னிச்சையான முடிவா?

    9. சமூக ஒற்றுமையில் விருப்பம் கொண்ட நீங்கள் கிண்ணியாவில் உண்மையில் பிறை கண்டிருந்தும் உங்கள் தீர்க்க தரிசனமற்ற முடிவால் இலங்கை வாழ் முஸ்லீம்களையும் ஊர்களையும் பிரிவினைக்குட்படுத்தியது ஏன்?

    10. இப்பிரச்சினையை உணர்வுபூர்வமான பிரச்சினையாக மாற்றியமைக்கு உங்களது உரைக்கு முக்கிய பங்குண்டு. இப்பிரிவினையும் குழப்பநிலையும் உங்களின் தவறா? அல்லது திட்டமிட்ட சதியா? அல்லது எவரினதும் வலைக்குள் சிக்கியிருக்கின்றீர்களா?

    ”ஈமான் கொண்ட முஸ்லீம் சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் மீது அச்சம் இருக்கின்றது. அவ் அச்சம் உங்களுக்கு மாத்திரமே இருக்கின்றது என நாங்கள் கருதவில்லை. அனைத்துக்கும் அல்லாஹ்வே போதுமானவன்”

    ReplyDelete
  17. Brother neenga Allah we payanthu kollongal

    ReplyDelete
  18. Give priority to scientific ways rather than blindly trusting people who claim they have seen the moon but refused to give any evidence.

    ReplyDelete
  19. நாங்களும் சொல்கிறோம் நீங்களும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் மஹ்சரில் உங்களை கேள்விக்கு உள்ளாக்குபவளில் ஒருவனாக நானும் இருப்பேன்.

    ReplyDelete

Powered by Blogger.