யாழ்ப்பாணம் பௌத்த விகாரையின் மீது கைக்குண்டு தாக்குதல்
யாழ்.நாவற்குழி சிங்கள வீட்டுத்திட்டம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள மக்களால் அமைக்கப்பட் ட பௌத்த வணக்கத்தலம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. சனிக்கிழமை இரவு 8மணியளவில் மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
குறித்த பகுதியில் 2010ம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்த சிங்கள மக்கள் தங்கியிருக்கும் நிலையில் அவர்களின் வழிபாட்டுக்கென பிரஐசால வணக்க இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரவு 8மணியளவில் அப்பகுதியில் வெள்ளி நிறத்தினாலன வாகனம் ஒன்று நடமாடியதாகவும் அதன் பின்னரான சில நிமிடங்களில் பிரஐசால கூரை மீது பெரிய சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ள மக்கள் அந்தச் சத்தம் கேட்டதன் பின்னரான சில நிமிடங்களில் பாரிய சத்தத்துடன் வெடிப்புச் சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நிலம் மற்றும் பிரஐசால கட்டிடத்தின் சுவர்களில் சன் னங்களின் காயம் பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் சிங்கள மக்கள் மற்றும் பெருமளவு விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவத்தினர் என குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தின்போது பிரஐ சால உள்ளே சிங்கள மக்கள் சிலர் இருந்தபோதும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
எவர் செய்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
ReplyDelete