Header Ads



அரசாங்கத்தின் செயற்பாடு ஆத்திரமூட்டுகிறது

அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் வேட்பாளரை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடைசி நேரத்தில் நீக்கியுள்ளது.  ஆளும்கட்சியின் இந்த நடவடிக்கை குறித்து, கடும் விசனம் கொண்டுள்ள வாசுதேவ நாணயக்கார, இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு  கடிதம் எழுதியுள்ளார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வவுனியா மாவட்டத்தில், இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்துக்கு, சங்கரலிங்கம் என்ற வேட்பாளரை நிறுத்த வாசுதேவ நாணயக்கார முடிவு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்துக்கு அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவருக்கு இடமளிக்கப்பட்டது. 

இது அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு பலத்த ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அவர் தனது ஆழ்ந்த அதிருப்தியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிறேம் ஜெயந்தவிடம் தெரிவித்துள்ளார். 

மேலும் தமது வேட்பாளர் எதற்காக நீக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்ககும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கு ஜனாதிபதியிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  அரசாங்கம் தனது கட்சியை முறையின்றி நடத்துவது சினங்கொள்ள வைக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. வாசுதேவ ஐயா முஸ்லிம்களுடன் குழம்பிக்கொள்ளட்டும் என்றெண்ணி மகிந்தவின் புதியதொரு திருகு நாடகம்தான் இது ஆகவே நாம் ஒரு போதும் இதுபோன்ற கீழ்த்தரமான விடயங்களுக்கு யோசிக்காமல் யாரும் காரியங்களில் இறங்கி ஒருவரையொருவர் பகைத்துக்கொள்ளக்கூடாது. ஐயா வாசுதேவ நாணயக்காரர் முஸ்லிம்களுக்காக எத்தனை இடங்களில் பேசியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.