Header Ads



நாட்டிலுள்ள பிரதான மதங்கள் இழிவுபடுத்தப்படுவதை தடுக்க வருகிறது சட்டம்

நாட்டிலுலுள்ள பிரதான மதங்கள் இழிவுபடுத்தப்படுவதைத் தடுப்பதற்கு பௌத்த சாசன அமைச்சு புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. 
 
அச்சு ஊடகங்களிலும் இணையத்தின் ஊடாகவும் பிரதான மதங்களின் மதக் கொள்கைகள், கோட்பாடுகளை இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது போதனைகள், மதத்தின் மரபுகளை அவமானப்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட தடை விதிக்கப்பட உள்ளது.
 
முதல் கட்டமாக பௌத்த மதத்தை இழிவுபடுத்துவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் வரைவுச் சட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தையோ அதன் கொள்கைகள் கோட்பாடுகளையோ இழிவு படுத்தக் கூடிய அச்சு மற்றும் இணைப் பிரசுரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உத்தேச வரைவுச் சட்டம் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்இ அனுமதி கிடைத்தவுடன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. What a policy: Protect the Buddhism and destroy the rest of religion...wow!!!

    ReplyDelete
  2. idilum mudalil budhist tan pirahu inda sattamum mudindu vidum

    ReplyDelete

Powered by Blogger.