கொழும்பில் நடைபெறும் விபச்சார நடவடிக்கைகளுக்கு பொலிஸ் அதிகாரிகள் உடந்தை
கொழும்பு நகரில் இடம் பெறும் விபச்சார நடவடிக்கைகளில் சில காவற்துறை அதிகாரிகள் தொடர்புக் கொண்டுள்ளதாக இரண்டு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்களை அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள், உரிமையாளர்கள் மற்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழிற்சங்க ஒன்றியம் என்பன முன்வைத்துள்ளன.
நீண்ட நாட்களாக முச்சக்கர வண்டி சாரதிகளாக அல்லாதவர்கள் தமது தொழிலை முன் எடுப்பதன் காரணமாக தாம் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங் கொடுப்பதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், முச்சக்கர வண்டி தொழிற்துறையை கண்காணிப்பதற்கான நிறுவனம் ஒன்று அவசியம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்த பிரச்சினைகள் தொடர்பாக உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழிற்சங்க ஒன்றிய தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment