Header Ads



கொழும்பிலுள்ள அத்திடிய பள்ளிவாசலுக்கு பௌத்த தேரர் தலைமையிலான குழு அச்சுறுத்தல்

கொழும்பு - அத்திடிய பகுதியிலுள்ள பள்ளிவாசலுக்கு இன்று சனிக்கிழமை, 3 ஆம் திகதி பௌத்த தேரர் தலைமையிலான குழுவொன்று சென்று அப்பள்ளிவாசலை உடனடியாக மூடிவிடும்படி அச்சுறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த பள்ளிவாசல் உரியமுறையில் பதிவு செய்யப்பட்டு, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் நிலையிலேயே இந்தப் பள்ளிவாசலை உடனடியாக மூடும்படி பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் குறித்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரையில், விகாராதிபதி தலைமையில் அங்குள்ள பௌத்தர்கள் அழைக்கப்பட்டு, குறித்த பள்ளிவாசலுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

9 comments:

  1. ippadiye poi kondu irundal innum kinja nalil muslim kalaiye kali seiyya solluvanuha
    engalmuslim ministtar maar arasangattukku innum vaal pidittuk kondirundal nilamai innum minchum
    iniyawadu nalla mudivai edupparhala....?

    ReplyDelete
  2. ஆரம்பிச்சுட்டாங்களா... ?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. வந்தவங்களுக்கு ரெண்டு போட்டு அனுப்ப இருந்திச்சி தானே இனி பேச்சி அமைதி வந்து உதவாது.செய்ய வழியில்லை எங்களுக்கும் மரணம் அவங்களுக்கும் மரணம் தான்.இப்படியே சும்மா இருந்தால் எங்களை பொன்னயங்கல் என்று தான் நினைப்பார்கள்.

    ReplyDelete
  4. MAHINDA crop close 17 mosque hope with this 18 good target why they giving ifthar?

    ReplyDelete
  5. "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி.." என்ற செய்தியை மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம்கள் உரத்துச் சொல்வார்களா..?

    ReplyDelete
  6. We Muslims are very decent you see! Monks just have to tell us what they want and we are
    doing it at once or little later after seeing a Muslim politician's face or hearing his voice and
    we are doing it for a better tomorrow and for our next generation aren't we?Nothing serious
    will happen,we have our ulemmas,Hafis,Mufthis and they have better solutions for our rights!
    Are we not happier than the Miyanmar ones?Why not why not? And our Srilankan Buddhist
    Monks and their hooligans are very decent aren't they?Lucky escape lucky escape!!!

    ReplyDelete
  7. இதுக்கு பின்பும் இந்த அரசாங்கத்திற்கு வாக்கும் போடும் முஸ்லிம்களுக்கு என்ன சொல்வது. பெளத்தர்களே இந்த அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். இனிவேண்டாம் இக்காடையர்களின் திருட்டுத்தனமும் கூத்தும். எதிர்வரும் தேர்தல்களில் இவங்களுக்கு வாக்கும்போட்டாலும் நமக்கு இதைவிட மோசமான சங்கதிகள் நடக்கும் என்பது நிச்சயம் ஆகவே ஏதாவது ஒரு மாற்றுக்கட்சிக்கு எமது வாக்குகளை அளிப்போம். போனால் போகட்டும் எல்லாம் ஒன்றுதான்.

    ReplyDelete
  8. முஸ்லீம்கள் பயந்தவர்கள் என்று இவனுகளுக்கு நன்றாக புரிந்து விட்டது.
    பயந்தவனைத் தான் நாய் கடிக்கும்..!
    யா அல்லாஹ்.. எம்மைக் கோலைகளாக்கி விடாதே..!!
    யா அல்லாஹ்.. எம்மைக் கோலைகளாக்கி விடாதே..!!
    யா அல்லாஹ்.. எம்மைக் கோலைகளாக்கி விடாதே..!!

    ReplyDelete
  9. இதுதானே வழமை ஒரு பள்ளிவாயல் திறப்பது ,இன்னொரு பள்ளிவாயல் மூடுவது ,ஒரு இப்தார் , இன்னொரு பள்ளிக்கு அச்சுறுத்தல் .இதுதான் மகிந்தாவின் மகிமை,இவற்றினை எல்லாம் கண்டுகொள்ளக் கூடாது??????/

    ReplyDelete

Powered by Blogger.