Header Ads



கிழக்கே போகும் ரயில் பொத்துவில் வரை போகுமா..?

( எம்.எம்.ஏ.ஸமட்)

கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மாகாணமாகும். இம்மாகாணத்தில் திருகோணமலை முதல் பொத்துவில் வரையான கரையோரப் பிரதேசங்களே அதிகளவு மக்கள் சனத் தொகையைக் கொண்ட பிரதேசங்களாகவுள்ளன. இம்மாகாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் பல்வேறு வகையிலும் இம்மாகாண மக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்தனர். குறிப்பாக சுதந்திரமாகப் போக்குவரத்துச் செய்ய முடியாதொரு நிலவரம் இம்மாகாணத்தில் நிலவியது. 

அச்சூழ்நிலைகளிலிந்து இம்மாகாண மக்கள் விடுபட்டு, சுதந்திரமாகவும் அச்சமின்றியும் பயணிக்கக் கூடியதொரு நிலையில,; போக்குவரத்து நிலவரங்கள் இன்னும் திருப்திகரமற்றதாகவே உள்ளன. இலங்கையில் பொரும்பாலும் தலைநகர் கொழும்பை மையப்படுத்தியே சகல பிரதான போக்குவரத்து மார்க்கங்களும் அமைந்துள்ளன. குறிப்பாக இலங்கையின் புகையிரத சேவையானது கொழும்பு புறக்கோட்டை புகையிரத மத்திய நிலையத்தை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுகிறது. 

1864ஆம் ஆண்டு இலங்கையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது ரயில் பாதை கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸைக்குமிடையே நிர்மானிக்கப்பட்டது. பொருளாதார தேவையை நோக்காகக் கொண்டு  தொடங்கப்பட்ட புகையிரத சேவையானது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய தேயிலை மற்றும் கோப்பி என்பவற்றை மலையகத்திலிருந்து கொழும்புக்கு கொண்டுவருவதற்காக ஆரம்ப காலத்தில் உபயோகப்பட்டது. பல வருடங்களாக உற்பத்திப் பொருட்களையும் ஏனைய பொருட்களையும் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சாதனமாக விளங்கிய புகையிரதமானது, அதிகரித்த மக்கள் சனத்தொகை கருத்திற்கொள்ளப்பட்டு  பயணிகள் போக்குவரத்து சாதனமாக மாறியது.

1905ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்துக்கு விஸ்தரிக்கபட்ட புகையிரத சேவையானது கிழக்கு மாகாணத்துக்கு 1928ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஓரே ஆண்டில் கிழக்கின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்குப் புகையிர சேவை ஆரம்பிக்கப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கதாகும்

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட நீண்ட தூர சேவை மட்டக்களப்புக்கான புகையிரத சேவை என்பதும் அதன் பின்னர் நீண்ட தூரங்களுக்கான புகையிரதப் பாதைகள் உருவாக்கப்படவில்லையென்பதும் இலங்கையின் ரயில் சேவை வரலாறு செல்லும் உண்மைகளாகும்.

கிழக்கு மாகாணத்தின்  3 மாவட்டங்களிலும் திருகோணமலைக்கான புகையிரதசேவைக்கான பாதை சீனக்குடா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்புக்கான புகையிர சேவைக்கான பாதை மட்டக்களப்பு நகர் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பாதை விஸ்தரிப்பை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் வரை விஸ்தரிப்புச் செய்வற்கான  வாய்ப்புக்கள் உள்ள போதிலும,; அது தொடர்பில் அரசினால் இன்னும் கவனம் செலுத்தப்படவில்லை என்பதே மட்டு நகர் முதல் பொத்துவில் வரையுள்ள கரையோரப் பிரதேச மக்களின் பெரும் ஆதங்கமாகவும் கவலையாகவும் இருந்து வருகிறது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு காலை, மாலையில் இரு மெல்ல நகரரும்  சேவையும் இரவில் ஒரு கடுகதி புகையிர சேவையுமாக மூன்று சேவைகள் தினமும் இடம்பெறுகின்றன. ஏறக்குறைய ஆயிரம் பயணிகள் தினமும் இப்புகையிரதங்களினூடதாக பயணிப்பதனால் நாளொன்று சராசரி 2 இலட்சம் ரூபா பயணிகள் மூலம் புகையிரதத் திணைக்களத்துக்கு வருமானமாக் கிடைக்கப்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இப்புகையிர சேவையினால் மட்டக்களபு மற்றும் அப்பாறை மாட்டங்களிலுள்ள தூரப் பிரதேச மக்களினால் பயன்பெற முடிவதில்லை. குறிப்பாக கல்முனை, அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் அம்பாறை போன்ற தூரப் பிரதேச மக்களுக்கு இப்புகையிரத்தினூடாக கொழுப்புக்குச் செல்வதும் கொழும்பிலிலிருந்து தங்களது பிரதேசங்களுக்கு வருவதும் எட்டாக்கனியாகவேவுள்ளது. இதற்குக் காரணம் இப்புகையிரத சேவையானது மட்டுநகரிலிருந்து விஸ்தரிக்கப்படாமையாகும்.

'குறைந்த தொழிற்பாட்டுச் செலவுடன் தரைமார்க்கப் போக்குவரத்து முறைமையொன்றை அபிவிருத்தி செய்து, பொருளியல் ரீதியில் எமது போட்டி நிலைமையை மேம்படுத்துவதும் எம்மக்களின் வாழக்கைத் தரத்தை உயர்த்துமான திறமையான சிக்கனமான போக்குவரத்து முறையொன்றை மீளக்கட்டியெழுப்பும்' நோக்கை இலக்காகக் கொண்டுள்ள புகையிரதங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சு கிழக்கின் மட்டக்களப்பு வரையுள்ள புகையிரத சேவையை, அதற்கான பாதையை பொத்துவில் வரை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் இம்மக்கள் மத்தியில் நிலவுகிறது.

மட்டக்களப்பு வரையுள்ள ரயில் பாதையானது பொத்துவில் வரை விஸ்தரிக்கப்பட வேண்டும். கிழக்கின் மடடக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட கரையோர மக்கள் பல வழிகளிலும் நன்மையடைய வேண்டும். அதற்காக மட்டக்களப்பு – பொத்துவில் வரை ரயில் சேவைக்கான பாதை உருவாக்கப்பட வேண்டும் என்ற தூர நோக்கு சிந்தனையுடன் 1992 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சியின் ஆட்சியில் வர்த்தக, வாணிப்பத்துறை அமைச்சராகவும் கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினராகவும்; இருந்த ஏ.ஆர்.எம். மன்சூர் முயற்சி  மேற்கொண்டார். 

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அனுமதிக்கிணங்க ஈரான் இஸ்லாமியக் குடியசிக்குச் சென்று இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னால் அமைச்சர் மன்சூர்; மேற்கொண்டார். அதன்பயனாக, 1993ஆம் ஆண்டு ஈரான் அரசியின் பொறியியில் நிபுணர்குழு இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்துக்கு விரைந்து, ரயில் போக்குவரத்துப் பாதையை மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை விஸ்தரிப்புச் செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான திட்ட வரைவுகளையும் பூர்த்தி செய்தனர். விஸ்தரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில,; 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டதுடன் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட அமைச்சர் மன்சூர் திட்டமிடப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அப்பாதை விஸ்தரிப்பு தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் பின்னர் வந்த அதிகாரம் படைத்தவர்களினால் முன்னெடுக்கப்படவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வரலாறுகள் என்றும் நினைவு கூறக் கூடிய பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்த போதிலும,; அமைச்சர் மன்சூரினால் முன்னெடுப்பட்ட இம்முக்கியத்துவமிக்க மட்டக்களப்பு- பொத்துவில் வரையான புகையிரதப் பாதை விஸ்தரிப்பை உரிய காலத்துக்குள் முடித்துக்கொள்ள அக்கறைகாட்டாமல் போனது இப்பிரதேச மக்களுக்கு நிகழ்ந்த பெரும்துரஷ்டவசம் என்றே சொல்ல வேண்டும். 

1992ஆம் ஆண்டு முன்னால் அமைச்சர் மன்சூரினால் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சி முற்றுப்பெறாமல் தொடரப்பட்டிருந்தால் கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசம் பெரும் நன்மையடைந்திருக்கும் மக்களின் வாழ்வு செழிப்புற பொருளாதர வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். ஒரு நாட்டினதோ அல்லது ஒரு பிரதேசத்தினோ பொருளாதார வளர்ச்சி;க்கு இலகுவான போக்குவரத்து வசதிகளே முக்கியமானதாகும் என்பது பொருளாதார நிபுணர்களின கருத்தாகும்.

மட்டகளப்பு முதல் பொத்துவில் வரையான தூரம் ஏறக்குறைய 100 கிலோமீற்றர்களாகும். 1992ஆம் ஆண்டு முதல் இற்றைவரை 21 வருடங்கள் கழிந்தோடியுள்ளன. அமைச்சர் மன்சூர்; முன்னெடுத்த திட்டமானது அவரின் அரசியல் அதிகாரத்தோடு நின்றுவிடாது, பின்னர் வந்த  அரசியல் அதிகாரங்களைக் பெற்றுக்கொண்டவர்களினால் ஒரு வருடத்துக்கு 5 கிலோமீற்றர் தூரம் வரை இப்பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகயை மேற்கொள்ள அவர்களின் அரசியல் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் இன்று பொத்துவிலில் ஒரு புகையிரத நிலையத்தைக் கண்டிருக்கலாம். 

ஒருவர் கொண்டு வரும் திட்டம் மக்களுக்கு நன்மையுள்ளதாக அமையுமாயின் அத்திட்டம் அவரால் நிறைவு செய்ய முடியாது போகும் நிலையில், பின்னர் வருபவர்களினால் அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட வேண்டும். அதுதான் நாகரியமான அரசியல் சிந்தாந்தம் தெரிந்தவர்களின் நல்ல மனப்பாங்காகும.; அந்த மனப்பாங்கு இன்றுள்ள அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளிடம் உருவாக வேண்டுமென்பதே ஜனநாகவாதிகளினதும் நல்லுள்ளம் கொண்டோரினதும் அவாவாகும். 

இருப்பினும், கடந்த வருடம் இப்பாதை விஸ்தரிப்பின் அவசியம் தொடாபில் முன்னால் அமைச்சர் மன்சூரினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்;டதாகவும் அதற்கு ஜனாதிபதியிடமிருந்து தங்களது வேண்டுகோள் தொடர்பில் புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரினால் கவனம் செலுத்தப்படும் என்று பதில் வந்ததாகவும்  பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்தமை நாம் அறிந்ததே. ஆனால், அப்பதிலோடு தொடர்புபட்ட நடவடிக்கை எதுவும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசம் சமகாலத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பணிகளின் சொர்காபுரியாக மாறிவருகிறது. பொத்துவிலி அரும்பைக்குடா மற்றும் அதை அண்டிய பிரதேசங்கள் உல்லாசப் பயணிகளினாலும் உல்லாச விடுதிகளினாலும் நிறைந்து காணப்படுகிறது, இன்று உல்லாசத் துறையை அபிவிருத்தி செய்வதிலும் உல்லாசப் பயணிகளைக் கவர்வதிலும் அரச முழுக் கவனம் செலத்தி வருவதுடன் உல்லாசப் பயணத்துறை வருமானத் அதிகளவு ஈட்டித்தரும் ஒரு துறையாகக் கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கின் பொத்துவில் பிரதேசம் அத்துறையின் ஒரு கேந்திர நிலையமாகவுமுள்ளது.

ஆனால் இப்பொத்துவிலுக்கு இலகுவான வழியில் அசௌகரியமின்றி போக்குவரத்து செய்வதில்தான்  பல்வேறு சிரமங்கள் எதிர்கொள்ளப்படுவதாக உல்லாசப் பயணிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது. குறிப்பாக  நேர விரையங்கள் ஏற்படுவதாக அவர்கள் கூறுவதைக் காணமுடிகிறது.

அதுமாத்திரமின்றி, இப்பிரதேசங்களைச் சார்ந்த பல அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்களுக்குரித்தான இலவச புகையிரதச்சிட்டைப் பயன்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். வாழக்கைச் செலவின் அதிகரிப்பு  குறிப்பாக அரச ஊழியர்களைப் பலமாகப் பாதித்து வருகிறது. பல அரச ஊழியர்கள் கடனாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறான நிலையில், அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப சலுகைகளின் பயன்பாட்டைக் கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்மை துரஷ்டவசமே.

மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான பாதை விஸ்தரிப்பின் அவசியம் குறித்து பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் காலம் காலமாக விடுக்கப்பட்டு வருக்கின்றன. ஆனால் அக்கோரிக்கைகள் உரியவர்களின் கவனத்தை இன்னுமே ஈர்க்கவில்லையென்பது மிகக் கவலையான விடயம்.

புதிய சிந்தனை, தூர நோக்கு என்பவற்றின் அடிப்படையில் இப்பாதை விஸ்தரிப்பின் அவசியம் உணப்படும்போதுதான் மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான ரயில் பாதையையும் ரயில் சேவையையும் காண முடியும். அதுவரை  கிழக்கே போகும் ரயில் பொத்துவில் வரை போகுமா..? என்ற கேள்வி தொடரத்தான் செய்யும். 

3 comments:

  1. சிறந்த கட்டுரைதான்!இது எம் மட அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு தூரம் விளங்கும் என்றுதான் சொல்லமுடியவில்லை!! எனவே, தயவுகூர்ந்து இக்கட்டுரை ஆசிரியரான சமத் அவர்கள், இதன் பிரதிகளை ஒவ்வொரு கிழக்கு மாகாண வால் முதல் தலை அரசியல் வாதிகளுக்கு அனுப்பும்படி மிகவும் பணிவாக ஜமு வாசகர்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.
    நன்றி,

    ReplyDelete
  2. சிறந்த கட்டுரை
    இதைப்படித்தாவது நமது அரசியல்வாதிகள் தெரிந்துகொள்ளட்டும்,சிலவிடயங்களை.

    இந்தக்கட்டுரையை வாசிக்கையில் அரசின் அடிமனதில் இது பற்றிய எண்ணப்பாடு என்ன என்று நடந்த ஒரு சம்பவம் நினைவூட்டுகின்றது.

    கடந்த வருடம் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசுவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு ஒரு நிகழ்வு நடைபெற்ற ஞாபகம்,அதில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியிடம் ,பொத்துவில்வரை ரயில்சேவையை தொடரவேண்டும் என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த ஜனாதிபதி உங்களுக்கு இப்பொழுது கலம்பு போக எவ்வளவு நேரம் எடுக்கின்றது என்று கேட்டார்,பின்னர் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு செல்ல எவ்வளவு நேரம் எடுக்கும் என்று கேட்டார் ,விடையில் பஸ்ஸில் செல்வது குறைந்த நேரம் எடுக்கும் என்று கூறப்பட்டது,பதிலளித்த ஜனாதிபதி அப்ப எதற்கு புகையிரதம் என்று கேட்க கேட்டவர் வாயடைத்தார்.இதிலிருந்து நாம் எதைப்புரிந்து கொள்கின்றோம்?

    புகையிரதம் இங்கு இருந்தால் எமது மக்களது பொருளாதாரம் எங்கோ சென்றிருக்கும்.கைத்தொழில் துறை எவ்வளவோ வளர்ச்சி கண்டிருக்கும்.இன்னும் எத்தனையோ துறையில் எம்மவர் மிளிர்ந்திருப்பர்

    மட்டக்கலப்பிளிரிந்து பொத்துவில் வரை ஒருசிங்களா கரையோரக்கிராமம் இருந்திருந்தால் இந்நேரம் புகையிரதமும் போயிருக்கும்,விமானமும் இறங்கியிருக்கும் .நமது அரசியல் தலைவர்களுக்கு இதை தர்க்கரீதியாக முக்கியமான விடயம் என்று புரியவைக்க இதுவரை தோன்றவில்லை.

    ReplyDelete
  3. arasiyalvathihal konjam ikkadduraya padikka time eduppangalo puriyala

    ReplyDelete

Powered by Blogger.