பசீர் சேகுதாவூத் எமக்கு அறிவிக்கவில்லை - முஸ்லிம் காங்கிரஸ் விளக்கம்
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், அமைச்சருமான பசீர்சேகு தாவூர்த் நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள மாட்டேன்' என்று முஸ்லிம் காங்கிரஸுக்கு இதுவரை அறிவிக்கவில்லையென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால், முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற மாட்டேன் என்று பசீர் சேகுதாவூத்த குறிப்பிட்டுள்ளமை குறித்து, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் விளக்கம் கேட்பதற்காக ஜப்னா முஸ்லிம் இணையம் ரவூப் ஹக்கீமின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டது. அப்போது அவர் தாருஸ்லாமில் தேர்தல் வேட்பாளர்களுக்காக நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து ஜப்னா முஸ்லிம் இணையம் இதுதொடர்பில் ஹசன் அலியிடன் விசாரித்தது. அதற்கு பதில் வழங்கிய ஹசன் அலி, பசீர் எமக்கு இதுவரை அப்படி அறிவிக்கவில்லை. எனினும் பசீரின் இந்த விவகாரம் குறித்து தலைவர் ரவூப் ஹக்கீமுடன் ஆராயப்படும் என்றார்.

அவர் அமைச்சராகப் பதவி ஏற்கப் போவதையே கட்சியின் தலைமைப்பீடத்திடம் அறிவிக்கவில்லை. அதற்கு கட்சித் தலைமைத்துவமும் எந்தவொரு நடவடிக்கைகளையம் உருப்படியாக எடுத்திருக்கவில்லை. இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டேன் என்பதை மட்டும் கட்சிக்கு அறிவித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுவாரா?
ReplyDeleteஅதுதான் 'ஜப்னா முஸ்லிம்' ஊடாக உலகறிய அறிவித்து விட்டாரே.. இனி நீங்கள் அவருக்கு எதிராக ஒரு துரும்பைத்தானும் உசுப்பி நடவடிக்கை எடுக்க முடியுமா?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
you can't do anything for him. you all in the same boat.
ReplyDelete