கத்தார் வாழ் நிககொள்ள சகோதரர்களின் 'அம்வான்' அமைப்பின் பொதுக் கூட்டமும், நிர்வாகத் தெரிவும்
அஷ்ஷேக் ஷஹீர் (நளீமி)
கத்தார் வாழ் நிககொள்ள சகோதரர்களின் 'அம்வான்' அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் மௌலவி என்.ரீ.எம். ளரீஃப் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. அன்றையத் தினம் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு இஃப்தார் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
நிககொள்ள நலன்புரி சங்கமான 'அம்வான்' அமைப்பின் பொதுக் கூட்டத்திற்கு கத்தார் வாழ் நிககொள்ள சகோதரர்கள் பலரும் பல சிரமங்களுக்கு மத்தியில் குறித்த நேரத்துக்கு முன்னரே சமூகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
தலைமை உரையின் போது, மௌலவி என்.ரீ.எம். ளரீஃப் அவர்கள், இளைஞர்களின் சமூகப் பணியின் அவசியம் பற்றியும், கடல் கடந்து வாழ்வோர்களின் சமூகப் பொறுப்புக்கள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்துடன் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கான கலந்துரையாடலும் இடம் பெற்றது.
'அம்வான்' அமைப்பின் நடப்பு வருடத்திற்கான நிர்வாகத் தெரிவு கத்தார் வாழ் சகோதரர்களையும் நிககொள்ளயில் வாழ் சகோதரர்களையும் உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்பட்டது. அத்துடன், எதிர் காலத்தில் உள்ளுரில் தற்போது இயக்கத்தில் உள்ள சமூக சேவை அமைப்புக்களுடனும், ஏனைய நாடுகளில் வசிக்கும் பலருடனும் இணைந்து செயற்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த கட்ட நகர்வாக ஊரின் அவசரத் தேவைகளில் ஒன்றாகக் காணப்படும் கிளினிக்கின் (உடiniஉ) குறைபாடுகள் மற்றும் திருத்த வேலைகளை முன்னெடுப்பதாகவும் உத்தேசிக்கப்பட்டது.

Post a Comment