Header Ads



வடமாகாணத் தேர்தல், பலமுனைப் போட்டி

(சத்தார் எம்.ஜாவித்)  

எதிர் வரும் செப்டம்பர் மாதம் நடாத்தப் படவிருக்கும் வடமாகாண சபைத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகின்றமையை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் வடமாகாணத்தில் தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பதென்ற திண்டாத்திலேயே உள்ளன. யார் யாருடன் இணைந்து போட்டியிடுவது, எவ்வாறு வடமாகாண சபையில் தமது உறுப்பினர்களை பெற்றுக் கொள்வது என்பதில் கட்சிகளிடையே பலமான குழப்ப நிலை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

இன்று பல கட்சிகளில்  தேர்தலில் யார் யாரை களமிறக்குவது என்பதிலும் ஒரு இழுபறி நிலை காணப்படுவதும், அவர்களுக்குள்ளேயே கருத்து முறண்பாடுகளும் , போட்டித் தன்மைகளும், சுயநலப் போக்குகளும் வழுப்பெற்று வருகின்றன. எது எவ்வாறாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தேர்தல் களத்தில் தாம் தாம் வெற்றி கொள்வதிலே வியூகங்களை வகுத்த வன்னமுள்ளனர். எனினும் இவர்கள் மக்களின் மனங்களை கவர்வதில் காட்டும் ஆர்வத்தைவிட தமக்குள்ளேயே போட்டித் தன்மைகளை உருவாக்கி உட்கட்சிப் பூசல்களை தோற்றுவித்து வரும் நிலைகளும்  அதிகமாகவுள்ளது.

மக்களின் தேவைகளையும், அவர்களின் உணர்வுகளையும் கவனத்திற் கொள்ளாது தாம் வெற்றி பெற்றால் சரி என்ற வாதங்கள் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியை எடுத்துக் கொண்டால் அங்கு பல கோணங்களில் போட்டித் தன்மைகள் காணப்படுகின்றது. குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு அதிகம் ஆதிக்கம் செலுத்தும் நிலைப்பாடு காணப்படுகின்றது மட்டுமல்லாது வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பான தீர்மானங்களை தான்தான் மேற்கொள்வேன் என்ற பிடிவாதம் ஒரு பக்கம், மறுபக்கம் அரசாங்கம் நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தி  தற்போது அரசின் பாதுகாப்பில் பல சவ்கரியங்களுடன் வாழும் புலி உறுப்பினர்களை களமிறக்கும் தந்ரோபாயமும் காணப்படுவதுடன் மறுபுறம் அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி மற்றும் ஆனந்த சங்கரியின் தமிழரசுக் கட்சி. சுpத்தார்த்தனின் புளொட் என்பன யார் யாரை எப்படி களமிறக்குவது என்பது தொடர்பான இழுபறியில் மட்டுமல்லாது தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா? அல்லது தனித்துப் போட்டியிடுவதா? என்ற தர்மசங்கடமான நிலையிலும், இழுபறி நிலையிலும் காணப்படுகின்றன.

இதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று வடமாகாணத்தில் பலமானதொரு முனைப்பைக் காட்டிவருவதுடன் இதுவரை காலமும் கட்சியின் வளர்ச்சிப் போக்கில் பின்னடைவு ஏற்பட்டாலும் தற்போதைய அரசின் சில கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நோக்குடன் மக்கள் மத்தியில் தம்மை முதன்மைப்படுத்தும் செயலிலும் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதுடன் அவர்களுக்குள்ளும் போட்டித்தன்மைகளும், உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் தோன்றியுள்ளதுடன் அக்கட்சியில் இருந்து பலர் மாற்றுக் கட்சிகளுக்கு மாறிவருவதும் தொடர்ந்தும் இடம்பெற்ற வன்னமேயுள்ளன.

இதற்கு உதாரணமாக கடந்த புதன் கிழமை பாராளுமன்ற உறப்பினர் தயாசிறி அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமையைக் குறிப்பிடலாம். இவையெல்லாம் தேர்தல் காலத்து டாம் விளையாட்டுக்கள்தான் ஆனால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதேபோல் இன்று பலராலும் ஏன் சர்வதேச அரங்கிலும் பேசப்பட்டு வரும் கட்சியாக வடமாகணத்தையே முற்றிலும் பிரபலிக்கவிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. வடமாகாண மக்கள் நம்பியிருக்கும் ஒரு பலமான கட்சி என்றாலும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் ஒரு இழுபறி நிலைக்கு மத்தியில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தள்ளனர்.

இந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஷ்வரன் பெயரிடப்பட்டது பலராலும் வரவேற்கப்பட்டாலும் அக்கட்சியினுல் சில உட்பூசல்களும், கருத்து முறண்பாடுகளும் காணப்படுவதாக பரவலாக பேசப்படுகின்றது அதற்குக் காரணம் முதலமைச்சர் வேட்பாளர் அரசியல் அனுபவமற்றவர் என்ற விடயமாகும். எனினும் இவற்றிக்கு எல்லாம் மேலாக எடுக்கப்பட்ட முடிவில் தீர்க்கமாகவுள்ளமை தமிழ் மக்கள் இத்தேர்தலில் அதிகமான ஆசனங்களை தம்வசப்படுத்திக் கொள்வதற்கான நிலைமைகளே அதிகம் இருப்பதால் ஏனைய கட்சிகளிடத்தில் ஒரு கலக்கத்தை தோற்றுவித்துள்ளது.

அதிலும் அரசாங்கத்தரப்பு இந்தவிடயத்தில் அதிகம் கலக்கமடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் தமிழ் கூட்டமைப்பு மாகாண சபையை தம்வசப்படுத்தினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்ச உணர்வாகும்.

இவ்வாறு ஒவ்வொரு கட்சிகளும் தமக்கிடையே போட்யிட்டுக் கொண்டிருப்பதானது மக்களிடத்தில் நகைப்புக்கு இடமானதாகவுள்ளது. இதுவரைக்கும் எந்வொரு கட்சியும் தமது கொள்கை நோக்கங்களை வெளிப்படுத்தாத நிலையும், மக்களின் நலன்கள் தொடர்பாகவும் மக்கள் கடந்த மூன்று தஸாப்த காலத்தில் அனுபவித்த துன்ப துயரங்களுக்கு அவர்கள் செய்யப்போகும் பரிகாரம் தொடர்பாகவும் எதுவித கரிசனையம் காட்டாத நிலையுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் வாக்காளர்களையும்  குழப்பநிலைக்கு உட்படுத்தியுள்ளனர். முதலில் தேர்தலில் களமிறங்கும் அரசியல் கட்சிகள் தமது உறுதியான நிலைப்பாட்டை அல்லது அவர்களின் திட்டங்களை மக்கள் முன் வைத்து மக்களின் கருத்துக்களை பெறவேண்டிய தேவைப்பாடுகளும் கூட அவற்றிற்கு உண்டு என்பதனை அவர்கள் புரிந்து செயற்பட வேண்டியுள்ளது. மக்களுக்கு தமது விடயங்களை தெளிவு படுத்தாத வரை மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்பது காணல் நீராகும் என்பதனை அரசியல்வாதிகள் புரிந்த கொள்ளவேண்டும்.

அரசாங்கத்தைப் பொருத்தவரை கடந்தகால யுத்த சூழ் நிலை, யுத்த வெற்றி, சமாதானக் காலம். கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள்  என்பனவற்றை வைத்து ஒப்பிட்டு நோக்கும்போது இனப்பிரச்சினை என்ற விடயத்தில் மீண்டும் பின்நோக்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

இனப்பிரச்சினை என்ற விடயத்தை முதன்மைப் படுத்தாமல் அரசாங்கம் இன்று தேர்தலில் தமது காலத்தை கழிப்கதையும், மாகாண சபை அதிகாரங்களில் இதுவரை காலத்திற்குமாவது குறைந்தபட்ச அதிகாரங்களை உரிய முறையில் வழங்கியிருந்தாலும் கூட மக்கள் ஏதோ ஒரு சிறிதளவாவது நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

ஆனால் இது எதுவுமே நடைபெறாமல் தற்போது மதங்களை நோவினை செய்யும் குழுக்களுக்கும், சட்டத்தை கையில் எடுக்கும் காடையர்களுக்கும் துனைபோவதும் அவற்றை கண்டும் காணாததும்போல் இருப்பதுமான நிலைமைகளில் தேர்தலில் எந்த முகத்துடன் முன்னிற்கப்ப போகின்றார்கள் என்ற பலமான கேள்வி ஒரு புறம், மறுபுறம் 13வது திருத்தத்தை அழிக்க துணைபோதல் போன்ற விடயங்கள் தாராளமாகவே மாகாண சபைத் தேர்தலில் வாய்க்கு அவலாக உள்ளதை அரசு மறந்துவிட்டாலும் மக்கள் மறக்கவில்லை என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இலங்கையின் வரலாற்றில் பண்டா – செல்வா ஒப்பந்தம் , டட்லி – செல்வா ஒப்பந்தம் . ஜேஆர்- ராஜீவ் ஒப்பந்தம் , கடந்த கால பலசுற்றுப் பேச்சவார்த்தைகள், தீர்வுத்திட்ட யோசனைகள் என்பன கிளித்தெறியப்பட்டு சமாதியாய் போய்விட்டன. இவ்வாறு வடமாகாண மக்கள் யுத்தத்தால் அல்லுண்டு புரண்டு  சமாதானக் காற்றை சுவாசிக்கும் ஏக்கத்துடன் இருந்த காலங்களை  எல்லாம் வீணாகிவிட்ட கவளையுடன் இருக்கும் இத்தருவாயில் அதனை ஏற்படுத்தாது தேர்தல்களை நடத்தி மக்களின் வாக்குகளை எவ்hறு பெறுவது? என்ற விடயமும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது.

இனப் பிரச்சினை விடயத்தில் தீர்வு கிட்டும் என இருந்த ஏக்கங்கள் தவிடு பொடியாக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அரசியல்வாதிகளுக்கோ அல்லத அரசியல் கட்சிகளுக்கோ மக்கள் வாக்களிப்பார்களா? என்பதனைச் சிந்திக்க வேண்டிய தருனம் இப்போது ஏற்பட்டுள்ளது. தற்போதும் கூட மாகாண சபை அதிகாரங்களின் அடிப்படையில்தான் வடமாகாண சபைத் தேர்தல் கூட நடைபெறுவதாக மக்கள் கூறுகின்றனர். 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இடம்பெற்ற வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வரதராஜப் பெருமால் வெற்றி பெற்று வடகிழக்கிற்கு முதலமைச்சராக செயற்பட்ட போதிலும் அக்காலத்திலும் கூட மாகாண சபைக்காண அதிகாரங்கள் உரியவாறு வழங்க்கபடவில்லை.

இதன் காரணமாக மாகாண சபையில் நிருவாக நடவடிக்கைகளில் பின்னடைவு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன், இதன் காரணமாக ஏற்பட்ட நிலைதான் வரதராஜப் பெருமாலால் தனிநாட்டுப் பிரகடனம் மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது எனலாம். இந்நிலைமை காரணமாக வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் நிருவாக நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டதன் காரணமாக வடக்கின் மாகாண சபைத்தேர்தல் இரண்டரை தஸாப்தமாக முடங்கிக்கிடந்தது எனலாம்.

இந்தவகையில் பார்க்கும்போது அக்காலத்திலேயே அரசாங்கம் சரியான பாதையில் மாகாண சபைகளை இட்டுச் சென்றிருந்தால் கடந்த மூன்று தஸாப்த கால துன்பியல் நிலைகைளில் இருந்து இலங்கை விடுபட்டிருப்பதுடன் மக்கள் நிம்மதியாகவும், சமாதானத்துடனும் வாழும் நிலைமைகள் தோற்றம் பெற்றிருக்கும். அத்துடன் தற்போது அரசு கூறிவரும் இலங்கை ஆசியாவின் அதியம் என்பது எப்போதே இலங்கை ஆசியாவின் அதிசயமாக மலர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தொகுத்து நோக்கும்போது அரசாங்கம் எப்போதுமே மக்கள் நலனில் அக்கறை கொண்டு நாட்டில் எந்தவொரு இனமும் பாதிக்கப்படாது சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் இனவாதத்திற்கோ அல்லது அரசியல் ஏமாற்றத்திற்கோ இடம்கொடுக்காது. ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கங்களும், அதிகாரம் கொண்ட அரசியல் தலைமைகளும் விட்ட தவறுகள் இன்று இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது எனலாம்.

எனவே கடந்த கால தவறுகளை ஒரு படிப்பினையாக எடுத்து அரசியல் தலைமைகள் இனிவரும் காலங்களில் இலங்கை இனவாதமற்ற ஒரு சுதந்திரமான நாடாகவும் ஜனநாயகம் சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்படும் நாடாகவும் மலர வழி சமைக்கவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

1 comment:

  1. Excellent. This is the way forward.

    I am a Muslim by birth in Jaffna. I have lots of Tamil friends during those good old days of 70's. The Tamil mothers of my friends treated me and welcomed me as their own child and fed me also. We are same in culture and tradition and only difference is we follow different religion. That’s fine for everybody. Now is the time to unite forgetting old wounds.
    Let’s go forward. During the forthcoming election let us join hands with TNA and vote for them and lets Justice Vigneswarn become Chief Minister. And let us proclaim to the world
    that we can rule the Northern Province honestly and successfully without any corruption. nepotism and violence. This will be the staging post for all Tamils and Muslims for our dreamland of Tamil Eelam.

    My dear Eastern Brothers, you have missed the chance to join Sampanthan Ayya’s request to join hands with TNA, instead you have joined hand with SL Muslim Congress and what happened at the end, the Chief Minister of EP is a Poodle from SLFP. None of them save you from The Halal issue, Mosque attacks and insult to our ladies of their head scarfs. Do not trust these opportunist politician.

    Lastly, I would like to say to Southern Muslim brothers and sisters including our so called Colombo Elites !!! You always made remarks and disrespectful to Northern and Eastern Muslims in silence and sometime in public.
    Your mother tongue was Tamil and will be always Tamil. In any Sri Lanka mosque the Friday sermon is always in Tamil and normal speech is always Tamil. Why? Most of the religious and Islamic books are always in Tamil. And you always try to hide your Tamil identity by speaking in Sinhala and English in public. Why? Are you ashamed to speak in Tamil?

    Think Now. What is happening to you in the south? Who is going to save you from BBS, Hela urumaya, Ravaya and racist ect.,etc. They are stopping you from eating your staple food Beef. What about Halal issue and your ladies headscarfs. Recently, in Kolonnawa, the religious leaders ask Muslims to stay indoors and not to wear caps in public. Nobody knows what is going to happen to Muslims in the south.

    Dear all, Wake up. Forget the past.

    Let’s join hand with your fellow Muslim in the Eastern and Northern and we all collectively
    Support TNA and proclaim our dreamland of Tamil Eelam for Tamil speaking people.

    VAALHA TAMIL VALARHA TAMIL, MALARHA EELAM !!!!!!!

    GOD BLESS YOU ALL !!!!!

    ReplyDelete

Powered by Blogger.