விரிவுரையாளர் நியமனங்கள் தொடர்பில் எழுத்து மூலம் முறையீடு
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமிய பீடத்துக்கென அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 05 விரிவுரையாளர் நியமனங்கள் முறைகேடான வகையில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவை மற்றும் மேல்சபை ஆகியவற்றிடம் எழுத்து மூலம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்குப் பல்ககைலக்கழகத்தின் அரபு இஸ்லாமிய பீடத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் 07 பேர் ஒப்பமிட்டு மேற்படி முறையீட்டினை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக மேற்படி முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவதுளூ கடந்த மே மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மேற்படி 05 விரிவுரையாளர்களுக்குமான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆயினும், நேர்முகப் பரீட்சையின் போது, இஸ்லாமிய கற்கைத்துறைத் தலைவரின் ஆலோசனைகள் எவையும் இந்த நியமனங்கள் தொடர்பில் பெறப்படவில்லை. மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆட்சேர்ப்பு முறைமைக்கு முரணாகவே மேற்படி நியமனங்கள் தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன என மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முறையற்ற நியமனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதோடு, குறித்த நியமனங்களை ரத்துச் செய்யுமாறு முறையீட்டாளர்கள் அந்த முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.jpg)
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த செய்தி தொடபாக சில கருத்துரைகளை அடியேன் வழங்குவது கட்டாயமானதாகும்.நானும் இதே பீடத்தில் நான்கு ஆண்டுகள் இடையறாத இன்னல்களுக்கு மத்தியில் கற்று, சிறப்பு சித்தியுடன் இஸ்லாமிய வங்கித்துறையில் விரிவுரையாளராக இரண்டு வருடங்களாக பணி புரிகிறேன். அண்மைய நியமனங்கள் தொடர்பில் முழுமையான விபரங்கள் அறிந்தவர்களுள் நானும் ஒருவன். இங்கு பிரசுரமான செய்தியை நான் முற்றாக மறுக்கிறேன். ஏனெனில் இந்த நியமனம் முற்றிலும் சட்டபூர்ப்வமாகவும், நீதியாகவும், மதிப்புக்குரிய உபவேந்தர், பீடாதிபதி, துறைத்தலைவர்கள் , மூதவை உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள் அனைவரினதும் அங்கீகாரத்தின் ஊடாக மிகவும் திறமையானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் எங்களது பீடத்தின் தொழில்வாய்ப்பை ஊர்ஜிதப்படுத்தக்கூடிய பாடத்திட்டத்தை மையமாகக்கொண்டு மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உந்துதல் அளிக்கக்கூடிய பாடநெறியினை சிறந்த முறையில் கற்ப்பிக்க கூடிய இளம் விரிவுரயாலர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மேற்சொன்ன நியமனங்கலானது முழுமையாக சட்டரீதியானது. சில விஷமிகள் எண்கள் பீடத்தின் அபரிதமான வளர்ச்சியை போருக்க முடியாமல் இவ்வாறான செய்திகளையும், முறையீடுகளையும் பரப்பி வருவது மிகவும் வேதனைக்குரிய விடயம். எழு விரிவுரையாளர்களின் கையொப்பங்கள் பெறப்பட்டதாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. இஸ்லாமிய துறைத்தலைவரின் அனுமதியில்லாமல் நியமனங்கள் வளங்கப்படுள்ளதாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியிலும் உண்மை இல்லை. இவ்வாறு பொய்யான செய்திகளை தயவு செய்து பிரசுரிக்காமல் பீடத்தினதும் பல்கலைக்கலகத்தினதும் அபிவிருத்தியை மையமாகக்கொண்ட செய்திகளை மட்டும் பிரசுரிக்குமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
ReplyDeleteஇந்ததச் செய்தியானது முற்றிலும் தவறானது. ஏனெனில் நான் இந்தப் பீடத்தில் இஸ்லாமிய கற்கைகள் துறையில் கற்றுவருகின்றவொரு 2ஆம் வருட மாணவன். அண்மையில் தெரி;வு செய்யப்பட்ட இந்த 05 விரிவுரையாளர்களும் மிகவும் சிறப்பான முறையில் கற்பித்;துத் தருகிள்றார்கள். அத்தோடு இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகச் செயற்படுகின்றவர்களின் திட்டமிட்ட சதியே இந்த முறைகேடு.எனவே இந்த செய்தி தொடர்பில் கல்விமான்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.இப்பீடம் அண்மைக்காலமாக அதி வேகமாக வளர்ந்து வருகிறது என்பது கண்கூடு. அவ்வாறான அபரிதமான வளர்ச்சியை குலைக்கும் நடவடிக்கையில் தயவு செய்து யாரும் ஈடுபடவேண்டாம். இலங்கையில் இஸ்லாமிய கற்கை மற்றும் அரபுமொழியை கர்ப்பிக்கின்ர ஒரே ஒரு பீடமே எமது பீடம். அத்தகைய சிறப்புமிக்க பீடத்தில் தவறுகள் இடம்பெறுவதில்லை.மிகச்சிறந்த நிர்வாகத்தை கொண்டுள்ள இப்பல்களைக்கழகமும் இவ்வாறான தவறான முடிவுகளை எடுப்பதில்லை.எனவே இவ்வாறான முறையீடுகளை இனிமேல் மேற்கொள்ள வேண்டாம் என்று தாழ்மையாக வேண்டுகிறேன்.
ReplyDeleteமுகம்மது பாறூக்
இரண்டாம் வருடம்
நான் எனது கருத்தை நிராகரிப்பதுடன், இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்பதுவும், நியமனங்கள் சட்ட ரீதியாக வளங்கப்படுள்ளதாக அறிகின்றேன். உண்மையில் இளம் விரிவுரையாளர்கள் நியமிக்கபட்டுள்ளது பாரட்ட தக்கது , நிம்சித் என்பவரை பற்றி பிழையான தகவல்கள் வெளிவந்ததுதான் நான் முன்பு கூரிய கருத்துக்கு காரணம். நியமங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் இந்த சந்தர்பத்தில் பல்கலை கழக பிடதிபதீஇடம் ஒன்றை தெரிவிக்கின்றே உங்கள் நட்பெயருக்கு களங்கம் விளைவிக்க சில விருவுரையளர்கள் செயற்படுகிறார்கள் எனவே தாங்கள் கவனமாக நடந்து கொள்ளவும். உங்கள் நியம்னத்திக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநிச்பார் அஹ்மத், பாரூக் மொதமேது, ஹில்மி போன்றவர்கள் பொய் சொல்லுகின்றார்கள், நிச்பார் முன் கூறியது உண்மை ஆனால் அவரும் இப்போது பொய் சொல்லுகின்றார். நிச்பார் அஹ்மத் கு பொறியில் பீடத்தில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்க்காக இப்போது அவரும் பொஇசொல்ல்வது கண்டிக்கதக்கது. மற்றைய இருவரும் நிம்சித் அவர்களின் நண்பர்கள் (ஹில்மி, பாரூக்) நிம்சித் மாத்திரம் 3 லட்சம் ரூபா பணம் கொடுத்தது நிருபிக்க எங்களிடம் அதிகமான ஆதாரங்கள் உள்ளது. நாங்கள் கோருவது இந்த நியமனகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்பதுதான். யாரையும் பலி வாங்குவது எங்கள் நோக்ககம் அல்ல. நாங்கள் தொடர்ந்தும் அவதானித்து கொண்டிருகின்றோம். இல்லை என்றால் எங்கள் நடவடிக்கை இனி வித்தியாசமாக இருக்கும் ..
ReplyDeleteதெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் "
முழுப் பூசனிக்காயை சோற்றில் மநறக்க முடியுமா
ReplyDeleteஅன்மையில் இடம்பெற்ற அரபு மொழி மற்றும் இஸ்லாமிய பீடம் கற்கை நெறிகள் பீடத்தில் இடம் பெற்ற நியமனங்கள் தொடர்பாக வெளியான செய்தியை மூடி மறைக்கும் வண்ணம் தனது சீடர்களைக் கொண்டு எழுதப்'பட்ட மறுப்பு அறிக்கையின் உண்மைத் தண்மையினை வாசகர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்
ஏற்னவே திட்டமிட்ட தனது சீடர்களையம் எதிர்கால அரசைில் வாழ்வுக்காக உழைக்கும் நபர்களையும் நியமிப்பதற்காக சுமார் ஓர் ஆண்டுக்கு முதல் திட்டமிட்டடு இதற்கான நடவசடிக்கையினை உபவேந்தர் மேற்கொண்டார். உயர் கல்வி அமைச்சரினால் சிபார்சு செய்யப்பட்ட நபருக்கு தொழில் வழங்பகுவதற்காக ஒன்றறை இலட்சம்(150000) செலவிட்டு தற்காலிக உதவி விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரியிருந்தார். இதற்கான நேர்முகப் பரீட்சையில் தான் நினைத்த நபர் தெரிவு செய்யப்படாததினால் இந் நேர்முகப் பரீட்சையை இரத்துச் செய்து பல்கலைக் கழகத்தின் பணத்தினையும் நன் மதிப்பினையும் வீணாக்கினார்.
பின்னர் நிரந்தர நியமனத்திற்காக விண்ணப்பம் கோரப்பட்டடிருந்தது. இதில் சிறந்த பெறுபேறுகளுடன் தகுதியானவர்கள் விண்ணப்பித்திருந்த போதிலும் தான் நினைத்தவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக இவர் பல்கலைக்கழகத்தின் சுற்று நிறுபங்களை மீறி தெரிவுக்குழுவை நியமித்ததுடன் அதற்கான நேர்முகப் பரீட்சையினை நடத்தினார்.இந்நேர்முகப் பீட்சை ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்த போதும் ஆங்கிலம் பேசத் தெரியாத பீடாதிபதியும் துறைத் தலைவரும் இருந்தது ஒரு வேடிக்கையான விடயமாகும் பின்னர் பரீட்சாத்திகளின் புள்ளிகளை தனது விருப்பத்திற்கேற்ப சரி செய்து நியமனத்தினை வழங்கினார்.இவர் தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைக்காக ஆதரவு திரட்டுவதற்கும் அரசாங்கத்தின் நன் மதிப்பை பெனுவதற்குமாக உயர் கல்வி அமைச்சினால் சிபார்சு செய்யப்பட்ட நபருக்கும் தனது எடு பிடிக்கும் நியமனத்தின்போது பரிசு கொடுக்கப்டுள்ளது.இதற்கு தமது பதவிகளை தக்க வைப்பதற்காக உப வேந்தருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பீடாதிபதி துறைத் தலைவர் துணை போனார். இது தொடர்பாக அன்மையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதையும் தாங்கள் அறிகின்றோம்.
இங்கு இடம் பெறுகின்ற பாரிய ஊழல்களையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நிறுமானப் பணிகளுக்காக வரும் ஒப்பந்தக் காரர்களிடம் விகிதம் பேசி தனது ஒற்றர்களைக் கொண்டு பெற்றுக் கொள்ளளும் இவர் கல்விசாரா ஊழியர்களை நியமனம் செய்யும்போது தனது சொந்த அரசியல் இலாபத்துக்காகவும் பணத்துக்காகவும் நியமனம் வழங்குவது அப்பட்டமான ஒரு விடயமாகும்.உபவேந்தர் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் செயல்களிலும் ஈடுபடுவதன் ஊடாக இலாபம் தேட முனைகின்றார். இதற்க பல்கலைக்கழகத்துக்குள் இடம் பெறுகின்ற மார்ர விழிப்யபுணர்வு நிகழ்வுகளை தடை செய்வதுடன் அதற்காக உழைக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களையும் விசமிகளுக்கு வழ்ங்கி வருக்கின்றார்.
இவருடைய மற்றைய விடயமாக எல்லை கடந்த அரசினை நிறுவ எத்தனிக்கும் சர்வதேச புலம்டிபயர்ந்தோர் அமைப்புடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களினுடைய நிகழ்ச்சி நிரலினை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார் இதற்கு சான்றாக அன்மைக் காலங்களில் சீனா மற்றும் ஐறோப்பிய நாடுகளுக்கு மெற்கொண்ட பயணங்களின்போது அந்த அமைப்புக்களைச் சந்தித்துப் பேசியுள்ளார் லும் அன்மையில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டிற்கு தான் சார்பில் தனது பல்கலைக்கழக சகாக்களை அனுப்ப எத்தனித்துள்ளார். இவர் பல்கலைக்கழகத்தினை பணம் சம்பாதிப்பதற்கும் எதிர்கால அரசியல் நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கும் தளமாக பணன்படுத்தி வருகின்றார். இதற்கு தான் நியமனம் வழங்குகின்ற கைக்கூலிகளைக் கொண்டு பிரச்சாரம் செய்கின்றார். எனவே இப்பொய்யான செய்திகளை நம்பாதீர்கள் இத்தளத்தில் வெளியான செய்தி உண்மையானதாகும்.மாணவர்களின் பெயர்களினையும் கூலிகளின் செயற்பாட்டினையும் கொண்டு உண்மையை மறைக்க முடியாது இதற்கு எவரும் சவால் விடுக்கும் இடத்து இன்னும் பல தகவல்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும்.
அதிர்வலை