Header Ads



பிறை விவகாரம் - அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத்தின் வேண்டுகோள்


(முஹம்மது பாயிஸ்)

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு பிறை விடயத்தில் விட்ட தவறை திருத்திக்கொள்ளுமாறு பகிரங்க வேண்டுகோள்!

இலங்கையில் ஷவ்வால் பிறையை பார்ப்பதற்காக பிறை குழுவால் 7.8.2013 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளியில் ஒன்று கூடி இறுதியில் அகில இலங்கை உலமா சபையினால் அறிவிக்கப்பட்ட செய்தியில் அஷ்ஷேக் ஹாஷிம் ஷூரி அவர்கள் கிண்ணியாவில் கண்ட பிறையை பற்றி கூறும் போது கிண்ணியாவில் பிறை கண்ட சகோதரர்கள் உண்மையாளர்கள், பொய் சொல்ல மாட்டார்கள், என்றாலும் அவர்கள் பிறைபற்றி சொன்ன வடிவத்தில் சற்று குழப்பமாக இருந்ததினாலும் முஸ்லிம் வானவியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி இன்று பிறை தென்பட சாத்தியமில்லை என்று கூறியதினாலும் இந்த பிறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ரமழான் பிறையை முப்பதாக  பூர்த்தியாக்குகிறோம்.என்று கூறிமுடித்தார். அதன் பின் அகில இலங்கை உலமா சபை தலைவர் கூறும் போது நோன்பு பிடிப்பது நன்மை தானே எனவே முப்பதாவது நோன்பையும் பிடிப்போம் என்று பொறுப்பற்ற முறையில் கூறினார். ஆனால் கிண்ணியா உலமா சபை தங்கள் ஊரில் பிறை கண்டதை உறுதி செய்து பிறை செய்தியை அகில இலங்கை உலமா சபைக்கு அறிவித்தும்  அதை ஏற்றுக்கொள்ளாததினால் இவர்களின் முடிவில் சந்தேகம் எழுந்துள்ளது. பெருநாள் அன்று நோன்பு பிடிப்பது ஹராம் என்று தெரிநதிருந்தும் அதிகமான மக்களை பெருநாள் அன்று நோன்பு பிடிக்க வைத்த குற்றத்திற்கு அகில இலங்கை உலமா சபை  ஆளாகியுள்ளது. 

இவர்கள் இந்த பிறையை கண்மூடித்தனமாக மறுத்தாலும் நாட்டில் அதிகமான பகுதிகளில் அந்த பிறையின் உண்மை நிலையைத் தேடி அதனை உறுதிப் படுத்தி பெருநாளை 8.8.2013 அன்று நாட்டில் பல பகுதிகளில் எடுத்துள்ளார்கள். 
பிறை விடயத்தில் அகில இலங்கைஉலமா சபை தனித்துவமாகவும் சுதந்திரமாகவும் செயற்பட்டால் தான் இப்படியான குளறுபடிகள் இல்லாமல் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் தீர்க்கமான சரியான முடிவுகளை எடுக்க முடியும். இல்லாவிட்டால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி உலமா சபைகள் செயல்பட வாய்ப்பாக அமைந்துவிடும். 

அன்றைய தினம் பிறை தென்படாது என்று வானவியல் கணிப்பீடு கூறியிருந்தால் ஏன் பிறை பார்க்கும் படி மக்களுக்கு அறிவிக்க வேண்டும்? பிறை தென்பட்டால் எங்களுக்கு அறிவிய்யுங்கள் என்று ஏன் தொலைபேசி இலக்கத்தை கொடுக்க வேண்டும்? இது மிகப் பெரிய தவறு என்பதை அகில இலங்கை உலமா சபை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இல்லா விட்டால் பிறை தகவலை ஏற்றிருக்க வேண்டும். 

தலைமைத்துவத்திற்கு கட்டாயம் கட்டுப்பட வேண்டும் அதே நேரம் தலைமைத்துவம் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக செயல்படுவார்கள் என்று சொன்னால் அதற்கு அவர்களுக்கு கட்டுப்படத்தேவை கிடையாது என்பதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது.
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான அழகான முடிவாக இருக்கும். (திருக்குர்ஆன் 4:59)

அதே போல் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். 

அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் கட்டுப்பாடு என்பது கிடையாது. கட்டுப்படுவதெல்லாம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்யாத வரை. (நூல் : முஸ்லிம்) 

எனவே எந்த தலைமைத்துவமாக இருந்தாலும் குர்ஆன் ஹதீஸிற்கு மாறு செய்யாத காலமெல்லாம் கட்டாயம் நாம் கட்டுப்பட வேண்டும். அப்படி இல்லையாயின் கட்டுப்பட அவசியம் கிடையாது.

குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் தான் சமூகத்திற்கு மத்தியில் ஒற்றுiமையாக இருக்க வேண்டும். மார்கத்திற்கு முரணான விடயங்களில் ஒற்றுமை என்பது கிடையாது. எனவே இப்படியான குர்ஆன் ஹதீஸ் வசனங்களை மையப்படுத்தி அகில இலங்கை உலமா சபை செயல்பட வேண்டுமென்பதையும் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆக வேண்டும் என்ற பயத்தோடு செயற்பட வேண்டும் என்பதை அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் வேண்டிக்கொள்கிறது.

10 comments:

  1. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான அழகான முடிவாக இருக்கும். (திருக்குர்ஆன் 4:59)
    Inthak kuran wasanathai PARKKUM pothu engalal munnaiya thinam perunal Kondada mudiyathu. Perunal inru 9.9.13 eduthu , ALLAHWUKKUM RASULUKKUM OPPADAITHU WITTIEUKKA WENDUM enru pulanakirathu

    ReplyDelete
    Replies
    1. Karuththu verupattil allah vum allahin thutharum sonnahey nirey vetrinaal PIREY KANDATHAAL KANDU VIDU ENRA HADIS EY amul paduththa vendum.
      Thaleyvarukku kattu padungal avar allahvum thuutharum kaattiya thil irunthu theermaanam edukkum varey. Allah vukkum thuutharukkum maaru seyvathil thaleyvarukku kattup padaathir enra hadis ey ik quran vasanuththukku kuuduthal thelivaahum

      Delete
  2. Shaithaan's are talking about Quran & Hadeeths. This group is opportunist & every time trying to get famous by creating problem among the Muslims.

    ReplyDelete
  3. yaarachcholreenga? unga oru wiral yarayo kattudu? nalu wiral ungala kattuthu?

    ReplyDelete
  4. அதிகாரம்: இலங்கை முஸ்லிம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டபூர்வமாக எவரிடமுமில்லை. யாரும் யாருக்கும் அந்த அதிகாரத்தை வழங்கவுமில்லை, யாரும் எவரிடமிருந்தும் அந்த அதிகாரத்தைப் பெறவுமில்லை. ஒரு அரசின் தலைவராக இல்லாதவரை ஒரு சமூகத்தைக்கட்டுப்படுத்தும் அதிகாரம் தனக்கிருப்பதாக எவரும் வாதிட முடியாது. இத்தகைய அதிகாரம் தன்னிடமிருந்தால் அதன் மூலம் சமூகத்தைக்கட்டுப்படுத்துவதும் அதற்குக் கட்டுப்படுமாறு கூறுவதும் கட்டுப்பாட்டின் ஒரு வகையைச் சேர்ந்ததாகும்.

    ReplyDelete
  5. nizar you are wrong do not see the group i think you are not belonging to this group that's why you try to blame this tawheed gruop and make acju correct,
    acju why ask the nation to watch hilal and ask them to inform them this is a huge mistake by acju. according to the acju people came to out and watch and they found the hilal.
    any how if the people are truth we must accept the message, and now we know the acju is under pressure, they show it in halal problem.they ask the the people to stop qunooth in salah in and say now the problems are solved, this is heppend immediately after the meeting with GR but after that request we are having more problems then the before, but the acju is still dump, and condom the attack on mahabothi in India but they were dump when our mosques are attacked. any how we have to obey them when they are according to quran and hadees not against them. allah knows all.

    ReplyDelete
  6. NISAR.....
    WHY YOU WRITE LIKE THIS ? ARE YOU A MUSLIM >?????????????/ IF NOT YOU MUST B THE " SAITHTHANN "...........

    DONT WRITE UNETHIICALLY AND SAITHTHAANICALLY........... BETER BE NICE AND DECENT IN YOUR WRITINGS.......

    ReplyDelete
  7. pirai patri kathaikka ungalukku entha athiharamum illai ungaluku thelivillatha pirai widayathai makkal mathi il puhuthi samoohatitku idaiyil pilau undu panniyawarhal yar wiral asaithal thakbeer kattuthal ponrawaihalil kularupadi undupanniyawarhal yar makkal mathiyil kulappathai undupanniwittu ippothu ulamakkalai kuttram sattuhureerhala ungaludaiya pillaihal ipothu iungaludaiya fathwai yetkurarhalillai athanal thowheethilay oru ooorla 4 pallii ottrumai illai ungalai neegal thiruthungal ellam thanahawe t5hirunthum

    ReplyDelete
  8. Mr. M Nizar...u r correct

    ReplyDelete
  9. ningal ippa oru patva pirahu oru patva ata nalatan unmaiyaha irauntalum yarum atrukkolla vilai ungal iyakattu hasaratum ulama sabail irukirartane but nan ppotuvanavan

    ReplyDelete

Powered by Blogger.