Header Ads



உலமாக்கள் மீது வசைபாடி எதனை சாதித்தீர்கள்..?

(MOHAMED AJWATH)

கண்ணியமிக்க உலமாக்கள் மீது வீண் பலி, அவதூறுகளை சுமத்தி வசைபாடி ஏதோ  சாதித்துவிட்டோம் என  இறுமாப்போடு  இருக்கும் வாலிபர்களே...! சிந்தியுங்கள்...!!

வாழ்கையில் சுமார் பாதிக்கு மேல் இஸ்லாமிய சட்ட அறிவை தேடுவதிலும் கற்பதிலும் செலவுசெய்த மார்க்க மேதைகள், இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கவேண்டிய கண்ணியம் மரியாதை என்பவற்றை ஒதுக்கிவிட்டு ஒப்பீட்டு ரீதியில் கால் சுண்டு அறிவு கூட இல்லாத சிலர் முகநூல்களிளும் இணையங்களிளும் தாம் பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காக கண்ணியமிக்க உலமாக்கள் மீது பொய், வீண்பழி, அவதூறு போன்றவற்றை சுமத்தி தகாத வார்த்தைகளை பிரயோகித்து வசைபாடி கட்டுரைகளும் பின்னூட்டங்களும் எழுதி முகநூல்களிளும் இணையங்களிளும் பதிவேற்றி ஏதோ  சாதித்துவிட்டோம் என  இறுமாப்போடு இருக்கும் வாலிபர்களே நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

அவ்வாறு முகநூல்களில் அவதூறை வாரிவீசும் அப்பாவி வாலிபர்கள் ஒருகணம் அல்லாஹ்வை பயந்துகொள்ளட்டும். புத்திஜீவிகள், அத்துறையில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர்கள் மார்க்க மேதைகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் போன்ற பல குழுக்கள், இணைந்து கலந்து ஆலோசித்து தீர விசாரித்து மசூரா எனும் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஏகோபித்த ஒருமுடிவை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஒருவரை நோக்கி அவதூறுகளை வாரிவீசி வசைபாடி பல்வேறு வகையான விமர்சனங்கள் செய்வது மட்டுமல்லாமல் இணையங்களில் குறிப்பிட்ட நபரின் புகைப்படங்களை பயன்படுத்தி எதிராக கட்டுரைகளும் ஒழுங்கற்ற முறையில் பின்னூட்டங்களும் எழுதுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. நமது மார்க்கம் நமக்கு கற்றுத்தந்த வழிமுறையும் அல்ல.

தான்தோன்றித்தனமாக குறிப்பிட்ட தனி நபரை தூற்றி வசைபாடிய ஒவ்வொருவரும் தன்  கூலியை பெற்றே ஆகவேண்டும். மேலும் குறிப்பிட்ட ஒரு மனிதனின் மனதை அநியாயமாகப் புண்படுத்தி தங்களுடைய ஆத்திரத்தை தாங்களே வீணாக்க  கொள்ள வேண்டாம். இது குறித்து ஒவ்வொருவரும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அவ்வாறு உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்புவோர்களுக்கு எதிராக தண்டிக்க இறைவன் போதுமானவன் என்பதை ஒருகணம் சிந்தித்து தான் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் கையேந்தி அழுது புலம்பி மன்றாடி பாவ மன்னிப்பு பெறவேண்டும்.

26 comments:

  1. இவர்கள் யார் என்ன எப்படி சொன்னாலும் கேக்காத கூட்டம் அனைவரும் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்

    ReplyDelete
  2. பிறை கண்ட சகோதரர்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளாது நபிவழிக்கு மாற்றம் செய்து ஃபத்வா கொடுத்த ஆலிம்கள் அல்லாஹ்வைப் பயப்படத் தெவையில்லையா?

    அவர்களின் மனங்களைப் புண்படுத்திய குற்றம் சம்பந்தப்பட்ட ஆலிம்/உலமாக்களுக்கு வராதா?

    நிச்சயமாகத் தனது/தமது வேண்டுமென்றே செய்த தப்புக்கு சம்பந்தப்பட்டவர்களிடமு மன்னிப்புக் கேட்டு அல்லாஹ்விடமும் மன்றாடி மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட ஆலிமும் அவரது சகபாடிகளும்தான்.

    எத்தி வையுங்கள், அவர்களைப்பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால்.

    ReplyDelete
  3. assalamu alikum அஜ்வத், இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளை முஹம்மது நபி (ஸல்) அலைஹிவசல்லம் அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரம் என்பது எல்லோருக்கும் தெரியும், இதை யார் மீறினாலும் உங்க கருத்தின் படி கால் சுண்டு அறிவு கூட இல்லாத ஒவ்வரு முஸ்லிமும் அல்லாஹ்விற்கு பயந்து அவன் மார்கத்திற்காக போராடும் போராளிகள் என்பதை மறந்து விடாதீர்கள்.

    உலமாக்கள் தவறு செய்தாலும் குரான்-ஹதீஸ் அடிப்படைஇல் கேள்வி கேட்கவும், தவறை சுட்டி காட்ட உம் உங்க கருத்தின் படி கால் சுண்டு அறிவு கூட இல்லாத ஒவ்வரு முஸ்லிமும் அல்லாஹ்வின் தூயா மார்க்கம் நிலைக்க போராடுவான்.

    ReplyDelete
  4. “கண்ணியமிக்க“ உலமாக்கள் மீது பிழையான விமர்சனங்கள் எழுதப்படுவது, பேசப்படுவது எல்லாம் உண்மையாக தவறுதான். ஆனால் குர்ஆனை ஓதிவிட்டாலும், ஹதீஸ்களை கற்றறிந்து விட்டாலும் மட்டும் இஸ்லாம் எதிர்பார்க்கின்ற உலமாவாக ஆகமுடியாது. அவற்றை அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொன்ன விதத்தில் சமூகத்தில் நடைமுறைப்படுத்தி, தானும் அவ்வாறு நடத்தல் வேண்டும். மறுமையில், நரகில் இருமடங்கு தண்டனை அனுபவிக்கின்ற ஆலிம்களும் இருக்கின்றார்கள் என்பதை ஹதீஸ்கள் வாயிலாக நாம் அறியக்கிடக்கின்றது. எனவே சாதிப்பதற்காக விமர்சிப்பதில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. 100 percent I agree with you. There are some people who wish to be popular by saying something confusing without knowing the real facts But they can never be popular because people have identified their ugly faces , true colour and their attitude towards other muslims.There are ways and manners to criticize others.But our muslim brothers fail to follow so.But they pretend as if they know everything.please don't do so .Those who criticize ACJU in the websites as they wish must be able to discuss or argue with ACUU face to face,If they are the genuine people and have guts.But those elements never do so. What those critics do are manipulating and confusing innocent muslim.This sort of activity must be avoided.
    May Allah guide the muslims correct path

    please can you publish this comments?. I always send some comments but they are not published.I don't know why? Anything wrong in my comments?

    ReplyDelete
  6. On the day of Judgement, as per our faith, there will be a question to the ULAMAS (person who studied the Islam figh) "WHAT HAVE YOU DONE FOR ISLAM FROM WHAT YOU HAVE LEARNED?" If Respected Rivi Mufthi and Respected Irshad Moumeen is prepared and ready with answer then YOU CAN DO WHATEVER YOU WANT...... (May be you are going to answer "THOUGH THERE WERE SOME MUSLIM BROTHERS SIGHTED THE MOON FOR SHAWWAL FIRST, WE JUST DECIDED ON OUR OWN TO FAST ON EID DAY... ACCORDING TO OUR OWN WILL...) May Allah guide us in the right path......

    ReplyDelete
  7. உலமாக்கள் என்ன சொன்னாலும் அதனைக் கண்களைப் பொற்றிக்கொண்டு அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் இஸ்லாமா? ஆம் என்று சொன்னால், என்னதான் சொல்ல...

    விமர்சிக்கின்றவர்கள், சரியான ஆதாரத்தைக் காட்டி, உரியமுறையில் விமர்சித்தால், அதில் என்ன தவறு இருக்குறது? எதிர்கின்றவர்கள் அந்த வாதத்தை பிழை என்று உரியமுறையில் ஆதாரத்தைக் காட்டி நிரூபிக்கவேடும். அதை விட்டுவிட்டு, சிலர் பொறுக்க முடியாமல், சரியான முறையில் வாதங்களை வைத்தவர்களை குறை கூறுகிறார்கள். இவர்கள் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும்.

    சிலருக்கு தமது தலைவர்களைப்பற்றி பேசினால் கோபம் பொத்திக்கொண்டு வரும். அவர்களுடைய ரியாக்சன் (reaction) எப்படி இருக்கும் தெரியுமா? சிலர் சொல்லுவார்கள்...

    1) நீங்க அவருக்கு குறிப்பிட்ட உலமாவை) ஏசினதால், உங்களுக்கு இப்போது திருப்தியா? என்பார்கள், அல்லது

    2) நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று மிரட்டுவார்கள், அல்லது

    3) இன்றைக்கு இருக்கின்ற பிரச்சினை போதாததட்கு, நீங்கள் புதுப் பிரச்சினையை கொண்டுவந்து சமூகத்தைப் பிரிக்கப்போகிண்றீர்கள், என்பார்கள், அல்லது

    4) இவன் தௌஹீத்காரன் இவனுகள் தான் நாட்டுல பிரச்சினையைக்கொண்டுவாறது, என்பார்கள், அல்லது

    5) இப்படி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தமது கோபத்தை வெளிப்படுத்தி திருப்தி கண்டுகொள்வார்கள்.

    ஆனால், தவறான முறையில் சித்தரித்து, தனிப்பட்ட பிரச்சனைகளை வர்ணித்து, இழிவான கார்ட்டூன் வரைந்து, ஒரு உலமாவின் அல்லது இன்னொரு மனிதனின் மனதை புண்படுத்துகிரவர்கள், நிச்சயமாக அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும். அதேபோல், உண்மையை மறைக்கவும், தமது தலைவர்களைக் காப்பாற்றவும், திரும்பத் திரும்ப பொய் சொல்பவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும்.

    எவர் உண்மையை சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வேண்டும். அவன் தப்லீகாக இருந்தாலென்ன, தொவ்ஹீடா இருந்தால்தானென்ன? எல்லோரும் முஸ்லிம்கள். ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமை நம்ப வேண்டும். உலமா சபை 20 இற்கும் மேற்பட்ட சாட்சியங்களை நம்பாததால தான் பிரச்சினையே வந்தது.

    ஒரு சில நாட்களுக்கு முன்னாள் சிலர் கிண்ணியாவுக்குப்போய் பிறை பார்த்தவர்களை நேரடியாக இண்டர்வியூ (interview) பண்ணி இருக்குறார்கள். இண்டரெச்ட் (interest) இருப்பவர்கள் யூடியியூபுக்குப் (YouTube) போய் பார்க்கவும். அது தற்பொழுது பேஸ்புக்கிலும் (Facebook) வளம் வந்துகொண்டு இருக்குறது. இதைப்பார்த்தாவது உண்மையை புரிந்து கொள்ளுங்கள். உலமாக்களை மதிக்கிறோம் என்றபெயரில் பிறை பார்த்த கிண்ணிய மக்களை வீணாக சந்தேகப்படாதீர்கள்.

    உலமாக்கள் நமக்குத் தேவை. அவர்களை நாம் மதிக்கிறோம். அவர்கள் உண்மையாக இருந்தால் இந்த சமூகம் அவர்களின் பேச்சை கேட்டு எது வேண்டும் என்றாலும் செய்யும். உலமாக்கள் அவர்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வருவது போல் நடந்துகொள்வது அவர்களின் கடமை.

    அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பானாக. ஆமீன்.

    ReplyDelete
  8. மறுபடியும் எதுக்குமைய்யா கிளறுகிறீர்கள்.அதுதான் தப்பு செய்தவர்களே ஒப்பு கொண்டார்களே வாங்க விரிவா பேசுவமேண்டு. ஒரு குழுவின் அறிக்கை மாதிரி அன்றைக்கே ரேடியாவுல, எழுதி பேசி இருந்தா நாங்க எதுக்கு வாப்பா அவர பத்தி பேச போறம், எதோ பயான் மாதிரி வாய்க்கு வந்ததெல்லாம் பேசினா அப்படிதான் வரும் பதிலும். அல்லாஹ்வுக்கு நாங்களும் நீங்களும் பயப்படுவம். அல்லாஹுஅக்பர்.

    ReplyDelete
  9. ALLAHU AKBAR.......
    very useful sentences.
    every muslims have 2 read and follow this orders.
    Ajwath! jezakallahu khaira.

    <<hisham AWM

    ReplyDelete
  10. Oruvar maarka vidayam shambanthamaaha karuththu veru pattaal. Athu avaravar aayvu.
    Pileyaaha irunthaal muthal karuththil ullavar maru karuththil ulla var haley eashi paavihal perunaal eduththathu haraam thawba seyya vendum kala seyya vendum enrellaam peshi thaan kinniya vukku uthaviyathey solli kaattiyum ullaar. Maarka vidayam galey pesum poothu thani nafar haley patri vimarsanam gal 2tharappilum seythaar hal . 2um thavaru. Thaleyvar eduththa mudivu piley enru thella theli vaayiha pirahu kan muudithanamaaha pin patra vendum antha karuththukkuththaan elloorum kattup pada vendum enru niyathi yilley. Athuhum avar kilaafath aatchi thaleyvar allave. Oru thappu meendum nadakka kuudaathu enbathat kaaha. Niyaayamaana karuththukaley veliyiduvathu thaan siranthathu. Thappaana vaarthey pirayooham 2tharappum met konranar.
    Intha katturey 1pakka shaarfaaha sinthiththu elitgiyirukku. Iru tharappu thavaruhalayum solli. Inimel ippadi nadakkaamal irukka OTRUMEYAAHA KATTUREY YAARUM ELUTHUVATHU ILLEY.
    VETRUMEYIL OTRUMEY ENRU SOLFAVARE VETRUMEYEY THAAN PESHUHIRAAR.

    ReplyDelete
  11. Assalamu alaikum,
    i am waiting for such articles.Thanks Brother,jazakallahu hyran.i kindly request to Jaffna Muslim,i respect to ur service for muslim ummah.but dont publish all the articles.if not ,it will affect the peace among Muslim.Plzzzzzz,consider regarding this matter.

    ReplyDelete
  12. Poruppu thaari thalaivare qurran hadeethuku muranaaha thalaiver theerpu solvathai yetrukolla islam sollavillai

    ReplyDelete
  13. கட்டுரையாளர் என்னதான் சொல்ல முனைகிறார் ?உலமாக்கள் என்போர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றா ? இல்லை விமர்சிப்போர் இஸ்லாத்தை விட்டு விலகிவிட்டார்களா ? ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் தனி மனித வழிபாடு செய்யவும் மதகுருமார்களை விமர்சங்களுக்கு அப்பாட்பட்டவர்களாக கருத இஸ்லாம் ஒன்றும் புத்த மதமில்லை மாறாக அமீருல் முஃமினீன் உமர் (ரலி)அவர்களை கூட துண்டுத் துணிக்காக ஒரு பெண் கேள்வி கேட்க இறங்கி வந்து தெளிவு படுத்திய வரலாறு கொண்டது எமது மார்க்கம் என்பதை உணர்த்த விரும்புகிறேன்.அல்லாஹ் எம் அனைவருக்கும் நேர் வழிகாட்டுவானாக !

    ReplyDelete
  14. Kaalaththukku Poruththamaane Pathivu.
    Kuraiyai Suttik Kaattuvathatkum Vasai Paaduvathatkum Viththiyaasam Ullathu.
    Emmavarhalin Aneahemaanavai Vasaihale.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் MOHAMED AJWATH அவர்களே,

    அப்படியென்றால் உங்களுக்கு தெரிந்தவர், நெருங்கியவர் மட்டும் தான் மார்க்க அறிஞ்ஞர்கள் (உலமாக்கள்). மற்றவர்கள் அல்லது ACJU வில் இல்லாத அறிஞ்ஞரகள், உலமாக்கள் போலிகலா? அல்லது ACJU வில் உல்லவர்கள் மட்டும் தான் அறிவாலிகளா? நன்கு 1000 கலைகளையும் கற்றவர்களா? முதலில் உங்கள் பார்வையை நேராக, நீதியாக செலுத்துங்கள்.
    இஸ்லாத்தில் தவரு செய்தவரை அந்தக்குற்றத்தை நோக்கி தான் பார்க்கவேண்டுமே தவிர தலைவர், தெரிந்தவர் தெரியாதவர், நெருங்கியவர், உறவினர் இப்படி பார்ப்பது கிடையாது. அப்படியிருந்திருந்தால் நம் பெருமானார் (ஸல்) அவர்கள் தன் மகள் பாதிமா திருடியிருந்தாலும் கையை வெட்டியிருப்பேன் என்று சொல்லியிருக்க மாட்டார்கள். நீதி என்று வரும் போது காபீரா முஸ்லீமா என்று பார்த்து நியாயங்களை எம் பெருமானார் (ஸல்) அவர்கள் வழங்கியது கிடையாது.

    இங்கே யாரும் வெருமனே உலமாக்கள் அனைவரையும் விமர்சிக்கவோ தரைகுரைவாக ஒப்பிடவோ கிடையாது. யார் தவரிலைத்துள்ளார்களோ அவரைதான் விமர்சிக்கப்படுகிறார்களே தவிர நீங்கள் சொல்வது போல் ஏதும் நடந்ததாக இது வரையும் பிறை விசயத்தில் நான் கானவில்லை.

    கண்ணியம் மரியாதை என்பதை சொல்லி எப்படி அடுத்தவர் வீட்டு சொத்தை நாம் பங்கீடு செய்வது. இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்கே சொந்தம். அப்படியிருக்கும் போது அவர் ACJU தலைவர் எப்படி தன்னிச்சையாக மஸுரா என்ற பெயரில் தன்னைசார்ந்த நபர்களுக்காக முடிவெடுப்பது. இதை உங்களைப்போல் நான் சும்மா சொல்ல வில்லை அவர்களே கொடுத்த மருப்புகளிலிருந்தும், தலைவரின் உரையிலிருந்தும், ACJU வின் பிறை குழுவின் விலக்கத்திலிருந்தும், பிறை பார்த நம் முஸ்லீம் சகோதரர்களின் சாச்சியிலிருந்தும் தான் முழு ஆதாரங்களுடனும் ACJU நோக்கி பாய்கிறோமே தவிர உங்களை போல் வீனாக ஏதாவது எழுத வேண்டுமென்ற நோக்கோடு யாரும் எதையும் விமர்சிக்க வில்லை.

    அவதூரை வாரி வீசவேண்டாம் என்று சொல்கிரீர்களே, அது எப்படி பட்டது, எப்படி விமர்சித்தால் அது அவதூராக மாறும், எங்கே யார் அவதூரை பரப்பினார்கள் என்று ஒரு சிரு உண்மையையாவது (proof) உங்களால் வைத்து பெச முடியவில்லையென்றால், சிந்துத்துப்பாருங்கள் யார் இங்கே அவதூரை கையால்வது என்று.
    பாருங்கள் கீழே உள்ள சான்றுகளை! அவைகளை பார்த்துவிட்டு எழுதுங்கள.

    http://www.sltj.lk/2013/08/09/poyyan-yaar/
    பிறை விஷயத்தில் பொய் சொன்னது யார்?Video)
    http://www.jaffnamuslim.com/2013/08/blog-post_8453.html
    இது றிஸ்வி முப்தியின் பதில்
    http://www.jaffnamuslim.com/2013/08/2_11.html
    இது ACJU பிறை குழு Dr. ஆகில் அஹமதின் 2டாவது விளக்கம்.
    http://www.sltj.lk/2013/08/12/drakil/
    ஆகில் அஹ்மத்தின் பிறை ஆக்கம் ஆய்வா? அபத்தமா?
    http://madawalanews.com/news/miscnews/7572

    ReplyDelete
  16. neenga yarachcholreenga? appady ulamakkalukku theriyatha pirai kanda perunal adukkawenum endu? shumma wanashastiram mannangatty endu peela udama kannala kanda piraya en athukkolelapona? meman meman ulamakkala?

    ReplyDelete
  17. there is no doubt that, we have to respect each and every human being in this world with out any question. But, when the frustration take place in community as whole, then it is normal that ppl may blame the respective or authorized personality. Either Ulama or any other authorized personalities, must guide the society in right way and correct path. When so called Ulama's misguide the society, when it is parallel for Quran & sunnah, we don't have to obey them. And it is right to convey their opinion against them in a religious way.

    ReplyDelete
  18. True. Those are from Nalimi r shouting. All the people know who are the Nalimi & their Qualification in Quran & Hadees

    ReplyDelete
  19. முதல் முதலாய் வசைபாடியாது யார் ? Mohamed Ajwath உங்களுக்கு சுய அறிவு இல்லையா ? முதலில் இஸ்லாத்தை நன்கு படித்து கருத்து விடுங்கள். ஜப்னா முஸ்லிம் சிறந்த கட்டுரைகளை வெளியாக்கவும்.

    ReplyDelete
  20. yes. you are correct. weri pidiththa mandaihalil ithuwum erathu.

    ReplyDelete
  21. yes. you are correct. weri pidiththa mandaihalil ithuwum erathu.

    ReplyDelete
  22. பிறை விடயத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் வெள்ளிடை மலையாக தெரிந்து விட்டது. Mohamed Ajwath இப்பொழுது வந்து கறுப்பு யானைக்கு வெள்ளையடிக்க முயற்சிப்பது கோமாளித்தனமானது.

    ReplyDelete
  23. முஹமத் அஜ்வத் அவர்களே!

    நீங்களும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!!
    கூடுதலாகக் குழப்புவுவர்கள் உலமாக்களே! இவர்களை உலமாக்கள் என்று சொல்லவே வெட்கப்படுகிறோம்! டிவியில் பிறை சம்மந்தமாகப் பேசும்போதுகூட மரியாதை தெரியாமல் தன் உணர்ச்சியைக் கொட்டி ஆத்திரப்பட்டுக் கதைத்து அவர்களின் 'அசல்' களை வெளிப்படுத்தினார்கள்? ஒரு பொது ஊடகத்தில் எப்படி நடந்துகொள்வது என்ற அடிப்படை ஒழுக்கம் தெரியாதவர்களா எம் இஸ்லாமியத் தலைமைகள்! வெட்கம்!!

    கண்ணியமிக்க என்று கூறவேண்டாம்! அப்படி அழைக்கப்பட இவர்கட்கு இன்னும் நிறையப்பக்குவம் தேவைப் படுகிறது!

    சில மௌலவியர் - தப்லிக்
    இன்னும் சிலர் - ஜமாத்தே இஸ்லாமி
    இன்னும் சிலர் - தௌஹீது
    இன்னும் சிலர் - சூபி
    இன்னும் சிலர் - சலபி
    இப்பாடி இன்னும் எத்தனையோ குழுக்களும்!! பிரிவுகளும்!!!

    ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் இயக்கமே ரசூலுல்லாஹ்வின் வழி என்றும் - ஆளுக்கு ஆள் குறைகூறித் திரிந்துகொண்டும் - சண்டையிட்டுக்கொண்டும் இருக்கும் இவர்களால்............

    எப்படி சாதாரண மக்களை ஒன்றுசேர்க முடியும்?? எப்படி இவர்கள் கண்ணியமாக முடியும்? அப்படி கண்ணியமானவர்கள் என்றால்??? எந்த இயக்கத்தில் இருக்கும் உலமாக்கள் கண்ணியமானவர்கள்???

    வேதனையோடு இதை எழுதினேன்!!! நம் சமூகத்தை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்!!!!!

    ReplyDelete
  24. "அஸ்ஸலாமு அலைக்கும் …. மொஹம்மத் அஜ்வத் அவர்களே!...

    உங்கள் தலைப்பு இப்படி இருந்தால் எப்படி இருக்கும்

    "அரசியலுக்காகவும் ,சுய கெளரவத்துக்காகவும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விலைபேசும் மானக்கேடான சில ஆலிம்கள் எதை சாதிக்க போகின்றார்கள்.”

    நீங்கள் மறந்து விட்டீர்களோ என்னவோ... “நரகத்தில் ஆக கீழே இருப்பவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை கற்று அதை செயல்ப்டுத்தாமல் மற்றவர்க்ளுக்கு எத்தி வைத்தவர்கள்,( முனாபிக்)இவர்களே அல்லாஹ்வுக்கு மிகவும் வெருப்பானவர்க்ள்..இதை அல்குர்ஆன்(61:2 வசனம்) சொல்கின்றது...இவர்கள் 50 வருடம் மதரஸாவில் மார்க்கம் கற்றிருந்தலும் இதுதன் நிலை.

    இதனால் தன் ஒரு உன்மையை சொல்கின்றேன். ஆலிம்கலே அதிகமாக இஸ்லாத்துக்கு (குர் ஆன் சுன்னாவுக்கு) விரோதமான மானக்கேடான செயல்களில் தனது மனோ இச்சைப்படி ஈடுபடுகின்றனர். இதை ஆலிம்கள் ஏற்பார்களோ இ்ல்லையோ சாதாரன ஒரு அல்லாஹ்வின் அடியான் ஏற்றுக்கொகொள்வான். ஏனெனில்.சாதாரன ஒரு முஸ்லிம் ஏதோ ஓரிரு விடயதில் குர் ஆன் சுன்னாவுக்கு மாறான செயல்களில் ஈடுபடுவான். ஒரு முஸ்லிமிடம் இருக்ககூடாத அனைத்து பண்புகளும் சில ஆலிம் என்ற பெயாரில் இருப்பவரிடம் கான்க்கூடியததாக இருக்கும் உலகம் அழிவதட்கான அடயாலம்களில் பல தட்போதைய ஆலிம்க்ளிடம் கானக்கூடியதாக இருக்கின்றது. அதில் ஒன்று தகுதி இல்லாதவர்காள் தலைவர் பதவியில் இருப்பார்கள். ஒரு தீய (குர் ஆன் சுன்னாவுக்கு மாறான) செயலை வெருப்பது ஈமானில் ஒரு பகுதி, அதையே எம் முஸ்லிம் ச்கோதரர்கள் ஃபேஸ்புக் மூலமாக எடுத்து சொன்னார்ள்.. 1950 ம் ஆண்டுக்ளில் போல ஆலிம்கள் சொன்னதெல்லாம் மார்க்கம் என்று நம்பி வழிகேட்டில் செல்ல இப்போதைய எம் முஸ்லிம் சமூகம் முட்டால்கள் அல்லர். அதன் வெலிப்பாடே 8 ஆகஸ்ட் 2013 வியாழன் ..75% மான இல்ங்கை முஸ்லீம்கள் நோன்பு பிடிக்காமல் இருந்தது... இதனை இன்று இல்ங்கையில் உள்ள பிரபள்யமான ஒரு ஜமாத் தலைவரும் பகிரங்கப்படுத்தியுள்ளார்... இருதியாக கீழுள்ள அல்குர் ஆன் வசனத்துக்கு கட்டுப்பட்டு எல்லா உலமாக்களும் வாழ்வார்கலேயானால் இலங்கையில் எல்லா ஜமாத்தும் ஒரே ஜமாத்தாக ஒரு தலைமையின் கீழ் பலமான ஒரு முஸ்லிம் சமூகமாக வழமுடியும்....... இல்லையேல் 24 மஸ்ஜித்க்ளும் போல,, மியன்மார் முஸ்லிம்களைப் போல அனைத்தயும் இழக்க வேண்டி வரும்..

    (அல் பகறா 42,41 வசனங்கள்)

    ”நீங்கள் உண்மயை பொய்யுடன் களக்காதீர்.. உண்மையை நன்கறிந்து கொண்டு அதை மறைக்கவும் செய்யாதீர்கள்.”

    "" இன்னும் இறை நிராகரிப்போரில் முதன்மையானோராக மாரி,என்னுடய வசனங்களை சொற்ப விலைக்கு விற்று விடவும் வேண்டாம்,என்னையே பயந்து கொள்ளுங்கள்.

    தவக்கல்து அலல்லாஹ்...
    ஹஸ்பியல்லஹு வனிஃமல் வகீல்...."



    ReplyDelete
  25. Islam does not condone criticism if anyone gives incorrect Fathwa whether it comes from a senior elderly scholar or a younger one. It does not matter if the subject Ulama who spent half of his life on research as he should be criticized and corrected if he has made a mistake. In my opinion, the so called senior Ulama made a blunder with regards to moon sighting matter on EID was a mistake that deserved to be pointed out - Ifthikhar from Dubai

    ReplyDelete
  26. பொது மக்களாகிய எங்களுக்கு ஒன்று மட்டும் தெரிய வேண்டும் கிண்ணியா உலமா பொய்யான தகவலை கூரினார அல்லது ஜம்மியத்துல் உலமா தவறுதலான முடிவுக்கு வந்தார்களா இதற்கான பதிலை ஜம்மியத்தின் உலமா சபை சார்பில் நேரடியான பதிலை எதிர் பார்க்கிறோம்.

    தயவு செய்து இரண்டும் சரிதான் என பதில் கூறாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.