'முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரிசு'
(ஏ.எல்.ஜுனைதீன்)
சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் மதச் சுதந்திரம் இந்த நாட்டில் அண்மைக்காலமாகக் கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் நிலையில் அரசு இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் உருப்படியான காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டில் நல்லிணக்கமும், நிரந்தர சமாதான சூழ்நிலையும் நிலவுவதைக் காட்டிக்கொள்ளும் அரசு நாட்டில் சிறுபான்மை சமூகம் ஒன்றின் மத சுதந்திரம் கேள்விக் குறியாக்கப்படுவதை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதுதான் நல்லாட்சிக்கான வரைவிலக்கணமா? என்ற கேள்வியை எழுப்புகின்றது என முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படும் சம்பவங்களைக் கண்டித்து "அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நலன்பேணும் அமைப்பு" விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று இந்நாட்டில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துன்ப, துயரங்களுக்கு எல்லாம் முஸ்லிம் சமூகத்தின் பலவீனமான அரசியல் தலைமைகளே காரணம் என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.
அரசை விட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவதால், அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸின் தலைமையே பகிரங்கமாகக் கூறியுள்ளதென்றால் நமது அரசியல் பலம் எத்தகைய கையாலாகாத்தனத்திலுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஜெனீவா வரை சென்று முஸ்லிம் பிரதிநிதிகள் அரசுக்கும் நாட்டுக்கும் காட்டிய விசுவாசத்திற்கும் நாட்டுப்பற்றுக்கும் வழங்கப்பட்டுள்ள பரிசுதான் இன்று முஸ்லிம்கள் அனுபவிக்கும் அவலங்களாகும்.
இன்று பள்ளிவாசல்கள் மூடப்படுகின்றன. மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றன. காவி உடை தரித்தவர்கள் கூட இந்த ஈனச்செயல்களில் சம்பந்தப்பட்டும் இதுவரை இத்தகையவர்கள் மீது எத்தகைய நீதி நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. அரசு இன்னும் மெளனம் காக்காது முஸ்லிம் சமூகம் மீதான அடாவடித்தனங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு முன்வரவேண்டும். இதற்கான காத்திரமான நடவடிக்கைகளை எதுவித தயக்கமுமின்றி எடுப்பதுடன், இதற்கு தூபமிடும் அமைப்புக்களைத் தடை செய்யவும் அரசு முன்வர வேண்டும்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் சம்பவத்துடன் தமக்கு தொடர்பு இல்லையென பொது பலசேனா ஊடகங்கள் மூலம் தெரிவித்துள்ளது. ஆனால், பொது பலசேனா அமைப்பினர் எண்ணெய் ஊற்றி எரிய வைத்த நெருப்பே இன்று கிராண்ட்பாஸ், அநுராதபுரம் வரை சுவாலை விட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்பதை அந்த அமைப்பினர் உணர்ந்து கொள்ளவேண்டும்.
பொது பலசேனா அமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாகவே கிராண்ட்பாஸ் சம்பவம் போன்றவை இடம்பெறக் காரணமாகும். எனவே, இவ்வமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளைக் கைவிட்டு பெளத்த தர்மத்தின் வழியே செயற்பட வேண்டும்.
இன்று இந்த நாட்டில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துன்ப, துயரங்களுக்கு எல்லாம் எமது பலவீனமான அரசியல் தலைமைகளே முக்கிய காரணம் என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொண்டுள்ளது. அரசைவிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவதால், அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைமையே பகிரங்கமாகக் கூறியுள்ளது என்றால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலம் எத்தகைய கையாலாகாத்தனத்திலுள்ளது என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
Pleveenemane thaleimei alle karenem paleveenemakkiye thaleivergel than karenem. ovorutherum thaleivergel aalukku oru kachi en ethukku ?????????
ReplyDelete