Header Ads



'மேற்கத்தைய சக்திகள் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர்'

(Tm) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையில் எதிர்க்கட்சி என்ற பாத்திரத்தை ஏற்றுள்ளதாகவும் அது தடிமன் ஏற்பட்டாலும் அதை கண்டித்து அறிக்கைவிடும் எனவும் அமைச்சர் விமல் வீரசன்ஸ இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

'ரதுபஸ்வல சம்பவத்தை நாம் சரியொன கூறவில்லை. இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை பிள்ளை வருகின்றார். ஒரு பூச்சி பக்கத்தில் பறந்தாலும் ஐக்கிய அமெரிக்க அறிக்கை விடுகின்றது' என மாத்தளையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த வெளிநாட்டு அவதானிகள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்றை அமைப்பதில் முழு மூச்சமாக உள்ளனர். அவர்கள் நாட்டை இன அடிப்படையில் பிரிக்க முயல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

"மேற்கத்தைய சக்திகள் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர். நாம் நியூசிலாந்து பால்மா பிரச்சினையில் துணிகரமான நடவடிக்கை எடுத்தோம். இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது. மத்திய மாகாண தேர்தலிலும் அரசாங்கம் வெற்றி காணும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

6 comments:

  1. மேற்கத்தைய சக்திகள் என எதை குறிப்பிடுகிறீர்கள் சார்? கோதாபய அமெரிக்க பிரஜா உரிமை பெற்றவர் என சொல்லாமல் சொல்ரீங்கலோ?

    ReplyDelete
  2. சாரே! புகைப்படங்களில் தெளிவாகத் தெரிகிறதே கலகக்காரா்களின் முகங்கள். பிடித்து நாலு சாத்து சாத்தினால் அந்த வெளிநாட்டு சக்தி யாரென்று தெரிந்து விடும். அதனைச் செய்ய முடியுமா உம்மால்? யாருக்குக் காது குத்துகிறீர்கள்?

    ReplyDelete
  3. what did your government do for all these incidents, the cardboard man, where is your pimp muzammil

    ReplyDelete
  4. The ridiculous Vimal, if that is the case, why your government did not arrest all criminal involved in this activity...?

    ReplyDelete
  5. இப்படிச்சொன்னா நீங்க சதிகாரன் இல்லன்டாகிடுமா? நீதான் முதல்சதிகாரன் உன்னை அல்லாஹ் தண்டிக்கும்போது புரிந்துகொள்வாய்.

    ReplyDelete
  6. its very clear with help of government this Buddhist people has done why still no one was arrested? mahinda and kothabaya has done this thing government must change otherwise contentiously they will do the same thing all srilankan muslims protest against to the government

    ReplyDelete

Powered by Blogger.