Header Ads



சமூகம் முக்கூறான சவ்வால் பிறை

(J.M.Hafeez)

மனித இயத்தில் முக்கூர் வாயில் மற்றும் இரு கூர் வாயில் என்பன காணப்படுவதாக நாம் அறிவோம். ஆனால் அதேபோல் எமது மனங்களும் முர்கூறான ஒரு நிலையை இன்று காண முடிந்தது.

சவ்வால் தலை பிறை தொடாபாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர்  மற்றும் இஸ்லாமிய  சமய கலாச்சார திணைக்களப் பணிப்பாளர் ஆகியோரது உத்தியோகபூர்வ அறிக்கையை அடுத்து நாட்டின் பெரும்பான்மை மக்கள் தத்தமது வழமையான அலுவல்களுக்குத் திரும்பினர். அதாவது தொடர்ந்து 30 வது நோன்பிற்கு ஆயத்தமானதுடன் வெள்ளிக்கிழமை பெருநாளைக் கொண்டாடவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

இருப்பினும் 08-08-2013 காலை நண்பர்களைச் சந்தித்த போது ஒரு பிரிவினர் நோன்பு நோற்றிருந்ததைக் கேள்வியுற்றோம். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பிரிதொரு பிரிவைப் பார்த்தோம் அவர்கள் புத்தாடை பூண்டு புதுமணம் பூசி மிக மகிழ்ச்சிகரமாக பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அயல் வீட்டான் நோன்பு நோற்றிருக்க இன்னாருவன் பெருநாள் கொண்டாடுவதா? என சற்றுத் தேடிப்பார்த்தபோது மற்றும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது அவர்கள் நோன்புமில்லை, பெருநாளுமில்லை. இது என்ன என்று விசாரித்துப் பார்த்ததில். அவர்கள் கூறிய விளக்கத்தில் ஒரு சிறு பகுதி இதுதான்,

நாட்டின் பிரதான அங்கம் வகிக்கும அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அறிவிப்பை எம்மால் மீற முடியாது. தலைமைக்குக் கட்டுப் படுகிறோம். நாட்டில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் இன்னொரு பிராந்திய உலமா பை சொல்கிறது பிறைகண்டதாக. எனவே சந்தேகம் தோற்றுவிக்கப்பட்டு விட்டது. எனவே எக்காரணம் கொண்டும் நோன்பை கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெருநாளைக் கொண்டாடிநாளும் அதுவும் ஒருவகை 'பசாத்' ஆகிவிடும். எனவே இன்று நோன்பு நோக்க முடியாது. அமைதியாக உள்ளோம் ஊர்வழக்குப் படி நாளை எல்லோருடனும் சேர்ந்து பெருநாளைக் கொண்டாடுவோம் என்ற விளக்கம் கிடைத்தது.

மேலே சொன்ன விடயங்களைப் பார்க்கும் போது மூன்று பிரிவைக் காண முடிகிறது. பெருநாள் கொண்டாடும் ஒரு குழு. நோன்பு நோற்கும் இன்னொரு குழு. நோன்பும் இல்லாத பெருநாளும் இல்லாத மற்றொறு குழு. என்ன கொடுமை இது என்று ஒருவர் கேட்டார்.

மற்றொரு சம்பவம் பற்றியும் குறிப்பிடுவது நல்லது எனக் கருதுகிறேன்.

குருநாகல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் உண்டு, உடுத்து புத்தாடை அணிந்து பெருநாள் கொண்டாட சில அயல் வீட்டுச் சிறுவர்கள் தொடாந்தும் நோன்பு நோற்று ஏக்கத்துடன் காணப்பட்டனர். பிஞ்சு மனது, அவர்களுக்கெல்லாம் நாம் கூறும் த்ததுவம் புரியாது. ஒன்று மட்டும் புரிந்தது. அயல் வீட்டில் இன்ன இன்ன பிள்ளைகள் பெருநாள் கொண்டாட எமக்கு மட்டும் பெருநாள் இல்லையே என்ற ஏக்கம் மட்டும் அவர்களில் தெளிவாகத் தெரிந்தது.

கண்டி, மாத்தலை, குருநாகல் போன்ற மாவட்டங்களில் இத்தகைய நிலையை இன்று காணமுடிந்தது.

பிறைகண்டோம் அல்லது காணவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்ய இந்த நவீன காலத்தில் இத்தனை பிரச்சினையா? என்று தான் எமது சமூகம் ஒன்றுமைப் படும் எனப் பல வயதானவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டனர்.

5 comments:

  1. manachumiuadan widai peruhirathu Ramadan.periyawarhal saiyum thappu sirupillaihalai pathikkamal erunthal sari.

    ReplyDelete
  2. pathavihalukkahavum suhapoha vaalkaikkahavum soram pohum talamaihal irukkum varai intha samooham thiruntahthu.

    ReplyDelete
  3. Kanda pirayey yetruk kollum nilayil ULAMA SABEY irukka villey. Kandathey kaana villey enru mudivedukkum mana nilayil irnthaarhal.
    Kandu pidi kandu vidu enra hadis ey amul paduthaamal IJMA SEYTHU NAAM POOTTULLA MUDIVUKKUL PIREY KANDATHEY URJITHAP PADA VILLEY ENRU nonri kaaranam kuuruhiraarhal. Manitha Manoo itchayaana IJMA VA? Allah vin thuutharin vali kaattalaa?
    Naam samuhathukkaaha hadis ey vittu vittu IJMAAVEY THAAN EDUPPOOM enru suttri valeythu pesuhiraarhal

    ReplyDelete
  4. Our political leaders, Ulamas will creat major problems in future among us, definetly we will depart into so many branches, thats why they are constructing these kind of boundations and boundaries nationally, provincially, districtwise as well as divitionals and villagers on the issues of Political, culture, religious etc...

    So, New generation be careful of these kind of leaders. Be patients.

    ReplyDelete
  5. கடைசியாக கூறிய விடயத்திற்கு என்னாலும் முகம் கொடுக்கவேண்டிய துா்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டது. பக்கத்து வீட்டு பெண்ணும் அவர்களது பேர பிள்ளைகளும் கடந்த 08.08.13 அன்று காலை தொழுதுவிட்டு புத்தாடையுடன் சலாம் சொல்ல வீட்டுக்கு வர எனது பிள்ளைகள் என்னிடம் வந்து நாங்கள் பள்ளிக்கு போவதில்லையா ? நாங்கள் புது ஆடையணிவதில்லையா? ஏன் வாப்பா எங்களுக்கு ”புது உடுப்பு” வாங்கவில்லையா? என்று கேட்கும் போது என்மனம் உருகியது மட்டுமல்ல அந்த பிள்ளைகளின் மனநிலை என்னவாகி இருக்கும் என்பது என்பது தெளிவு, இருப்பினும் இவ்வாறான ஒருநிலை இன்னும் பலருக்கும் எற்பட்டது என்று அறியும் போது அவர்களின் மனவேதனையை தன்னால் உணரமுடிகின்றது.

    பைஸல் - ஓட்டமாவடி

    ReplyDelete

Powered by Blogger.