'கிழக்கு மாகாணத்திற்கென தனியான பிறைக்குழு உருவாக்கப்பட வேண்டும்'
(எஸ்.அஷ்ரப்கான்)
முஸ்லிம்களின் மிக முக்கிய பெருநாளான நோன்பு பெருநாளை தீர்மானிப்பதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கறையின்மை கண்டிப்புக்குரிது என்பதுடன் எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கென தனியான பிறைக்குழு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை உலமா கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி உலமா கவுன்சில் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
முஸ்லிம் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர் பார்த்த நோன்புப்பெருநாள் இம்முறை உப்புச்சப்பில்லாதவாறு இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது என்பது மிகுந்த வேதனை தரும் ஒன்றாகும். கிண்ணியாவில் பிறை தென்பட்டது என்பது நூறு வீதம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மறுநாள் நோன்பு பிடிக்கக்கூறியமை குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமான மிக மோசமான செயலாகும். அதே வேளை பிறை கண்டதில் உறுதி கண்ட முஸ்லிம்களும் மறுநாள் நோன்பு பிடிப்பதை விட்டு விட்டு அதற்கு மறுநாள் பெருநாளை எடுப்பதன் மூலம் இத்தகைய பித்னாவை தவிர்த்திரக்கலாம் என்பதே எமது நிலைப்பாடாகும்.
பிறை பற்றிய மாற்றுக்கருத்துக்களை எவரும் முன்வைக்கவில்லை என்ற தலைவர் ரிஸ்வி முப்தியின் கருத்தை நாம் மறுக்கிறோம். கடந்த ஏழு வருடங்களாக மக்காவின் பிறையை வைத்து பிறையை தீர்மானிப்பதன் மூலம் இத்தகைய முரண்பாட்டிலிருந்து நீங்கலாம் என்பதை நாம் மட்டுமே பகிரங்கமாக தேசிய பத்திரிகைகளில் எழுதியுள்ளோம். ஆனால் பிறை பற்றிய கருத்தாடல்களின் போது ஜம்இய்யத்துல் உலமா எம்மை அழைக்காது தமக்கு துதி பாடுவோரை மட்டுமே அழைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. பிறை பற்றி இன்னொரு மாநாடு நடைபெற்றால் அதில் ஏற்கனவே வெளிவந்த எமது கருத்துக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க நாம் தயாராக உள்ளோம்.
ஜம்இய்யத்துல் உலமாவின் கரத்துப்படி பிறை பார்க்க முடியாத நாளில் பிறை பார்க்கும்படி மக்களை கோரியமை அதன் முரண்பட்ட நிலையை காட்டுகிறது. அத்துடன் பிறை தென்பட்ட நேரத்தை கொழும்பில் சூரியன் மறையும் நேரத்துடன் ஒப்பிட்டு பாhத்ததாக அதன் தலைவர் ரிஸ்வி முப்தி பகிரங்கமாக கூறியிருப்பதன் மூலம் கிழக்கின் பிறையை கிழக்கில் சூரியன் மறைவதுடன் ஒப்பிட்டு பார்க்க தவறியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. அத்துடன் பிறை எப்படியிருக்கும் என்று தெரியாதவர்களாக கிண்ணியா முஸ்லிம்களை இவர்கள் எண்ணியமை மிக மோசமான பண்பாகும். ஒரு முஸ்லிமிடம் பிறை எப்படியிருந்தது எனக்கேட்டால் அது பிறை போன்றுதான் இருந்தது என்றுதான் கூறுவானே தவிர கழுதை போன்றிருந்தது எனக்கூறுவானா?
இதுவெல்லாம் நமக்கு ஒரு உண்மையை மிகத்தெளிவாக காட்டுகிறது. அதாவது இன்று பிறை தென்படாது என்ற வானியல் சாஸ்திரத்தை நம்பிய உலமா சபை அதற்கமைய தீர்ப்பை ஏற்கனவே எழுதி விட்டு பின்னர் பிறை பார்த்த முஸ்லிம்களை குழப்பி அசிங்கப்படுத்தியுள்ளது. இத்தகையவர்களை தோலுரித்துக்காட்ட வேண்டுமென்பதற்காகவே இறைவன் வானில் பிறையை தோன்றச்செய்துள்ளான்.
இலங்கையை பொறுத்தவரை கிண்ணியா போன்ற கிழக்கு பிரதேசங்களிலேயே பிறை தென்படுவது அதிகம் என்பதாலும் இது விடயத்தில் கிழக்கு முஸ்லிம்களிடமே அதிகமான ஆர்வமும் உள்ளது. ஆகவே எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்துக்கென தனியான பிறைக்கமிட்டி கல்முனையை மையமாக வைத்து உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் கிழக்கில் காணப்படும் பிறையை ஊர்ஜிதப்படுத்தி ஒரே நேரத்தில் ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் ஊடகங்களுக்கும் அறிவிக்க வேண்டும்.
பிறை தென்பட்டது சம்பந்தமாக சந்தேகம் நிலவினால் இரவு எட்டு மணிக்கு தமது காரியாலயத்தை மூடிவிடும் கொழும்பு உலமா சபையை பின்பற்றாமல் அதிகாலை வரை விழித்திருந்து ஆராயக்கூடியதாக இக்குழு இருக்க வேண்டும். அடுத்த ஹஜ் பிறையாவது மக்காவின் பிறையை வைத்து இலங்கையில் அறிவிப்பது பற்றிய கருத்துக்கள் இப்போதிருந்தே ஆரம்பிக்க அ இ ஜம்இண்ணத்துல் உலமா ஏற்பாடு செய்ய வேண்டுமென உலமா கவுன்சில் கேட்டுக்கொள்கிறது.

We can disscus these issues among our community soon.now the requirement is UNITY among us....we have many more dangerous issues from other racist groups.try to find solutions for those first.. after that we can solve these issues easily.....if we divided to different groups,they can attack us easily....we have to ine ummah.....allah may protect us...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletei agree with and Risvi Mupthi should resign his post from the ulama sabha because he may be the agent of Government
ReplyDeleteYes ofcourse
ReplyDeleteExcellent opinion. ACJU will not accept this proposal because they do not follow the Prophet of Allaah (Sal). They follow Ibnu Thaimiyya, Ibnu Arabi and so called saints.
ReplyDeleteTo those who give their opinions here should inscribe the opinions in Tamil as the main article is written in Tamil. Then only the whole readership will understand what is going on.
மிகச் சிறந்த கருத்து. அ.இ.ஜ.உ. இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டாது. ஏனென்றால், அவர்கள் நபிவழியைப் பின்பற்றுபவர்களல்ல. அவர்கள் இப்னு தைமிய்யாவையும் இப்னு அரபியையும் அவ்லியாக்களையும் பின்பற்றுபவர்கள்.
இங்கு பின்னூட்டமிடுபவர்கள் தமது கருத்துக்களைத் தமிழில் எழுதுவதுதான் சிறப்பு. ஏனென்றால், பிரதான ஆக்கம் தமிழில்தான் உள்ளது. அவ்வாறிருந்தால்தான் பரந்த அளவின் வாசகர்கள் அனைவருக்கும் அவ்வக்கருத்து சென்றடையும்.
first resign mufthy. and arrange ACJU meeting.it will com to clear.
ReplyDeleteVery very true
ReplyDeleteNot only that he want the leadership also to be given to him he is semester to be having some problem in his .........
ReplyDeletecurrently this is what we need right???? do not comment on this news now. we need unity that is what we want now. You all talking some thing else. Be honest to your leadership.
ReplyDeleteMr. Abdul Majeed is the dangerious man. Now he is trying to devide our muslim unity through political and our religion. He is functioning with the support of Anti muslim sponsors. Dont give the priority to his any news to publish in the media. He does not have any good policy as a muslim.
ReplyDeleteAll of us talking about Fasting on Eid day is haram. But if this happened by mistake Allah will forgive us and it is not a big sin, its all happened by human error and false communication. But dividing ummah is a big sin and Allah won't forgive. When I read most articles from muslim politicians or ulamas, always they mentions their group and party and also we done, I done. And they omly want to represent mulim ummah in sri lanka. Unfortunately we don't have any proper imam to lead us..we must act soon to come under one roof and face the problem. Otherwise we and our future generation will be in trouble.
ReplyDeleteIam ashamed to call your self an ulema. Later you would say you need a separate committee for kalmunai and after wards akkraipattu would also ask as well as maruthamunai. We know your political publicity stunts, you and your party is not worth a red cent. you have only 14 members in your party including your nephew and cousin. Jaffna muslim: please stop publishing all these rubbish when there are many important news at the moment.
ReplyDeleteillai moulaviyin karuththai etka mudiyaathu. eatka koodathu.
ReplyDeletenaam innum maahanangalaha piriyavendi eatpadum. NAAN ORU MUSLIM UMMA.
ENDRAIKKUM ACJU THAAN NAMAKKU THALAIMAI. aanaal antha thalaimai KURAAN HATHEETHU ADIPPADAIYIL NAMMAI VALINADAATHA VENDUM.
IPPOTHAYA PIRACHINAI THEERA RISVI MUFTHI AWARHAL RAAJINAMA SEIWATHU AWARATHU KANNIYATHTHUKKUM NALLATHU.
கனவான்
ReplyDeleteஎம் பெருமானார் முஹம்மத் நபி (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் கூட மக்காவிலும், மதினாவிலும் இரு வெவ்வேறான நாட்களில் நோன்புப் பெருநாள் கொண்டாடப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறதே. இதைப் ப்ற்றி மக்காவின் பிறயை வைத்து பிறயைத் தீர்மனிக்கும் கருத்தை ஏழு வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் முன்வைத்த அகில இலங்கை உலமா கவுன்ஸில் தலைவர் என்ன கூறுவாரோ? மேலும் கிழக்கில் தோற்றும் முதற் பிறயை மேற்கில் உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் மேற்கில் தோற்றும் பிறயை கிழக்கில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறப் படுவதைப் பற்றி இவர் என்ன கூறுவாரோ? இவர் ஒரு அரைகுறை மௌலவி என்றும் மௌலவிப் படிப்பை அரைகுறையில் விட்டவர் என்றும் சொல்லுகிறார்களே இதைப் பற்றியும் இவர் என்ன சொல்லுவாரோ?
ஜமியாதுல் உலமாவுடன் முறண்பாடு இருப்பின் நேரடியாகவோ தொலைபேசியிலோ தொடர்புகொண்டு பேசுங்கள் மக்களிடையே குழப்பங்களை உண்டாக்கவேண்டாம்.
ReplyDelete