'குடிநீரை கோருபவர் துப்பாக்கிசூட்டில் உயிரிழப்பது ஜனநாயகம் நாட்டில் இடம்பெறாது'
முன்னாள் இராஜதந்திர அதிகாரி கலாநிதி தயான் ஜயதிலக்க இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் விவகாரம் தொடர்பில் விளக்கமளித்தார்.
''ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர், தன்னியக்க துப்பாக்கியொன்றுடன், துப்பாக்கி துளைக்காத ஆடைகனை பயன்படுத்துவார்களாயின், வீதியை மறித்து நிற்கும் அதேபோல் குடிநீரை கோரும் மக்களை விரட்ட அல்லது யாராவது ஒருவர் துப்பாக்கிசூட்டில் உயிரிழப்பாராயின் அது சாதாரணமாக ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படும் ஒரு நாட்டில் இடம்பெறாது.
பிரபல்யமான ஜனாதிபதி, மக்களை பலிகடாக்களாக்கி, இங்கு வேறு ஒரு உபாயத்திற்கமைய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதோ என்ற கேள்வி எழுகின்றது.
முதலாவது இலங்கையராக நான் கருதுகின்ற இராவண அரசனிற்கு துரதிஸ்டவசமாக, விபீசனன், அதாவது விபீசனன் இந்தியாவிற்கு கையசைத்து இந்தியாவை வரவழைத்தார். அது அன்றைய யுகம், ஆனால் இன்றைய யுகத்தில் அவ்வாறே செய்ய வேண்டியதில்லை அதன் பிரதிபலன்களை அனுபவிக்க. அன்று விபீசனனால் நடைமுறைப்படுத்தப்பட்டவைகள் இன்று வன்முறைகளினால் நடைமுறைப்படுத்தப்படலாம். கை அசைத்ததினால் நடந்தவைகள் இன்று கையை அசைக்காமல் நடைபெறலாம்.
எனவே இவற்றையெல்லாம் நாம் ஞாபகப்படுத்திக்கொண்டு 14ஆம் நூற்றாண்டில் நடந்தவைகள் மறுபடியும் நடக்காதிருக்க நாம் கவனமாக இருக்கவேண்டும். nf
இலங்கை ஜனநாயக நாடு அல்ல என்பதைக் குறிப்பால் உணர்த்தி விட்டார்!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இது கொலைகாரர்களின் ஆட்சி..
ReplyDelete